http://i67.tinypic.com/rthm54.jpg
Printable View
மக்கள் திலகத்தின் "ரிக்க்ஷாக்காரன்"
திருப்பூரில் சூர்யா மற்றும் ஜோதி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.
மக்கள் திலகத்தின் '' ரிக்ஷாக்காரன் '' டிஜிட்டல் வடிவில் நேற்று வெளிவந்தது ..
முறையான திட்டம் சரியான விளம்பரங்கள் , திரை அரங்கு நிர்ணயம் என்று எதுவுமின்றி விநியோகஸ்தர்கள்
செய்த தவறுகள் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது .
'' ரிக்ஷாக்காரன்'' மிகவும் சிறப்பான முறையில் உருவேற்றம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்துள்ளது .மக்கள் திலகத்தை அகன்ற திரையில் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் இசையில் காணும்போது
45 ஆண்டுகள் முன்பு எத்தகைய வரவேற்பை பெற்றதோ அந்த அளவிற்கு மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது பெருமையாக உள்ளது .
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
அக்டோபர் -1972
ஒரு சரித்திர நாயகனின் புதிய சகாப்தமும் அந்த நாயகனின் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணங்களும் எதிர்கால வரலாற்றை உருவாக்க வித்திட்ட மாதம் ''அக்டோபர் 72 என்பது மறக்க முடியாத உண்மை .
பாரத் எம்ஜிஆர் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற புகழின் உச்ச நிலையாக ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பட்டம் கிடைத்த மாதம் அக்டோபர் -72
திரை உலகத்தில் தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அந்த இமேஜை கடைசி வரை தக்க வைத்து கொண்டு மக்கள் மனதில் இன்று தெய்வமாக நிலைத்து விட்டார் .அதற்கு காரணம் அக்டோபர் -72 தந்த பரிசு '''அண்ணா திமுக ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள்
எம்ஜிஆரின் படங்கள் செய்திகள் இருட்டடிப்பு
எம்ஜிஆரின் பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடிகள் - மிரட்டல்கள்
எம்ஜிஆர் படத்தை திரையிட்ட அரங்கங்களுக்கு மிரட்டல்
எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மீது தாக்குதல்கள்
இவற்றை எல்லாம் கண்டு எம்ஜிஆர் கலங்க வில்லை . அவரின் உண்மையான ரசிகர்கள் துவண்டு விடவில்லை .புலம்ப வில்லை .எம்ஜிஆர் எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் ராணுவ வீரர்கள் போல் செயலில் இறங்கி பணி யாற்றினார்கள் .வெற்றி மேல் வெற்றி கண்டார்கள் ,
எம்ஜிஆரின் சாதனைகளுக்கு , நடிப்பிற்கு , வளர்ச்சிற்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் செயல் பட்ட அன்றைய அதிகார வர்கத்தின் அநாகரீக செயல்கள் ,மேல்தட்டு என்று கூறும் சில படித்த மேதாவிகளின் புலம்பல்கள் எல்லாம் மக்கள் மன்றத்தில் அன்றும் எடுபடவில்லை . இன்றும் எடுபடவில்லை .
மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் , மனித நேயத்தின் மாண்புகள் எல்லாம் மக்களால் என்றென்றும் மறக்க முடியாத அழிக்க முடியாத காலப்பெட்டகமாக திகழ்கிறது .இதற்கு முக்கிய காரணம் அக்டோபர் 1972 . மறக்க முடியுமா மக்கள் திலகம் அவர்களின் தீர்க்க தரிசனம் .
தினத்தந்தி -01/10/2016
http://i67.tinypic.com/21mtgcm.jpg
தினத்தந்தி -01/10/2016- ஏ .வி.எம்.சரவணன் பேட்டி
http://i63.tinypic.com/2z3ov0i.jpg
இந்து ஆங்கில நாளிதழ் -17/08/2016 அன்று பிரசுரமான விளம்பரம் .
பெரியவர் திரு.சக்கரபாணி அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம் .
http://i64.tinypic.com/2j5yy4k.jpg
இன்று (01/10/2016) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள் .
http://i64.tinypic.com/16awr9k.jpg
http://i67.tinypic.com/k51ooy.jpg
http://i67.tinypic.com/2us7b7n.jpg
http://i64.tinypic.com/t986qw.jpg
http://i65.tinypic.com/2q09dle.jpg
சித்ரா லட்சுமணன் பேட்டி