சின்னக் கண்ணன் சார்..
ஒ.... ஒரு
ஆ.... ஆளும்
இ.... இல்லே...
அப்படின்னு தான் என் சிற்றறிவுக்குத் தோண்றது...
க...எ.... அப்படின்னா ...கடலை எண்ணையா
Printable View
சின்னக் கண்ணன் சார்..
ஒ.... ஒரு
ஆ.... ஆளும்
இ.... இல்லே...
அப்படின்னு தான் என் சிற்றறிவுக்குத் தோண்றது...
க...எ.... அப்படின்னா ...கடலை எண்ணையா
தமிழ்த் திரைக் களஞ்சியம்
அவதாரமெடுத்து விட்டது..
மனித அவதாரம் ...
உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் தான் ...
அந்த அவதாரம்
தன் களஞ்சியத்தை
வாரிக் கொடுத்த கர்ணன்....
எப்பொழுதும் அன்புடன்
பேசும் தெய்வம்
தமிழ்த் திரையின் அறிவில்
பெருஞ் செல்வம்.
அவருடைய மலர்ந்த முகம் இருக்கும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
இன்று அவர் தொடங்கியிருப்பதோ...
சரம் சரமாய் நடிகர் திலகத்திற்கு
புகழ் மாலை...
இதனை ஊரறியச் செய்வதே
எங்கள் வேலை...
பார்க்கப் பார்க்கப் பார்வையில் ஆயிரம்
கதைகளைக் கூறும் அவர் விழி பாசுரம்
பக்கம் புரட்டும் போதெலாம் நெஞ்சம்
பக்கம் யாரென்று பார்க்காது மூழ்கும்
அந்த நாளும் வந்திடாதோ
என
ஆவலோடு காத்திருப்போம்
http://i1146.photobucket.com/albums/...psaea4ae92.jpg
பிறவிக் கடன் தீர்த்தேன்
பம்மலாரே
இதை அறிமுகப் படுத்த
நல்கிய நல்வாய்ப்பினால்...
நன்றிகள் கோடி...
வருகின்றன உங்களைத் தேடி...
நன்றி ராகவேந்தர் சார். உங்களின் suspense தெரிந்தும் அறிவிப்பிற்கு காத்திருந்தேன்.
அனைத்து சிவாஜி பக்தர்கள் ,ரசிகர்கள் மற்றும் அவரை ரசிக்கும் பொதுமக்கள் அனைவருக்குமான வேண்டுகோள். நடிகர்திலகம் சம்பந்த பட்ட புத்தகங்களை நாம் உற்சாக படுத்தி ஆதரவு தந்தால்தான் ,நிறைய புத்தகங்கள் (தரமான) வெளி வர வாய்ப்புள்ளது. இந்த புத்தகம், எந்த மொழிக்கும் அவசியமில்லாத உலகத்தின் பொதுமொழியான, விழிகளும்,முகமும்,உடலும் உணர்த்தும் மொழியில், அதையும் உலகத்திலேயே சிறந்த ஒரே நடிகரின் வித விதமான பாத்திரங்களால் பேச பட்ட மொழியை அடிப்படையாக கொண்ட பேசும் சித்திரங்கள். ஒவ்வொரு தமிழனின் வரவேற்பறையிலும் தவழ வேண்டியது.
இங்கு வரும் விருந்தினர்களின் முன்பதிவுகள் மட்டுமே 1000 பிரதிகள் என்றால் ,நாம் ஒவ்வொருவரும் பத்து பேரையாவது வாங்க செய்தால் பத்தாயிரம் ஆகி விடாதா?
நம் சாயங்காலங்களுக்கு சந்நிதி வாசல் போல விளங்கிய படங்களின் நாயகனுக்கு,நாம் இன்றிருக்கும் நிலைக்கு பொறுப்பாகி,நம் ரசனை ,அறிவு,தமிழ்,தேசிய உணர்வு,இறை உணர்வு,குடும்ப பொறுப்பு,தியாக உணர்வு அத்தைனையையும் வளர்த்து மேம்படுத்திய அந்த ஆசானுக்காக ஓராயிரம் என்ன,நூறாயிரமே கொடுப்போம் என்று ஒவ்வொருவரும் உணர்த்த வேண்டிய நேரம்.
ராகவேந்திரன் சாருக்கும்,சந்திர சேகர் சாருக்கும் நேரடி போட்டி. யார் அதிக பிரதிகளை விற்க காரணகர்த்தாவாக திகழ போகிறீர்கள்? நான் வழக்கம் போல ராமனின் அணில். பாலத்திற்கு சில கற்களாவது உண்டு.
http://www.vasantham.lk/wp-content/u...14-300x240.jpg
http://www.indianmirror.com/arts/cel...vaji-limg3.jpg
விண்ணும் மண்ணும் இணையில்லா இதய தெய்வத்திற்கு
தன்னிகரில்லா தமிழ் மகன் பம்மலார் படைக்கும் புகழ்மாலை
சாதனை படைத்து சரித்திரம் வென்று
தரணி எங்கும் வெற்றிப் பரணி பாட வாழ்த்தும்
அன்புச் சகோதரன்
வாசுதேவன்.
உ
---
----
பிள்ளையார் சுழி என்னுடையது. முதல் பிரதிக்கான முன்பதிவு என்னுடையது. துவக்கி விட்டேன்.
தொடருங்கள்.
உலக வரலாற்று புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மலர் மாலை சூடி உலக புகழ் பெற்ற இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் கை வண்ணத்தில் உருவாகிவரும்
நடிகர் திலகம் ''புகழ் மாலை ''மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்
உலக அளவில் முதல் முறையாக ஒரு நடிகர் நடித்த படங்களின் காட்சிகளை தொகுத்து ,அவரின் சுய விமரிசனங்களோடு வெளியிட பட்ட முதல் முயற்சி சிவாஜி ரசிகன் 1971 இல் அவரது முதல் 140 படங்களை தொகுத்து வெளியிட்ட சிறப்பு மலர் ஆகும். அது வெளிவந்த சூட்டிலேயே சுமார் 20000 பிரதிகள் விற்று தீர்த்தன. (விலை ரூ.4 என்று ஞாபகம்)
இது சோலோ,கலர், 305 படங்களின் மொத்த தொகுப்பு.ரசிகர்களோ ,அப்போது இருந்ததை விட இப்போது உயர்ந்த ,செல்வ செழிப்பான, settled என்று சொல்ல படும் வாழ்க்கை தரத்தில் உள்ளோம். இப்போது 50,000 ஆவது விற்றே ஆக வேண்டும்.
எஸ்வி சார்,
நாங்கள் உங்களை வேற்று மனிதராக கருதியதே இல்லை. எங்களில் ஒருவர்தான் நீங்கள். உங்களை நீங்கள் எங்களில் ஒருவராகவே கருதி ,எங்களை மட்டும் நினைத்து, எங்கள் சார்பில் நின்றே,எங்களை வாழ்த்துங்கள். அப்படி வாழ்த்தியதாகவே கருதி கொள்கிறோம்.
http://www.aic.aibsnloa.in/images/nandri.png
'துளிவிஷம்' பதிவிற்கு அபார வரவேற்பும், வாழ்த்துக்களும் அளித்த அன்பு இதயங்கள்
திருவாளர்கள்
சிவன்K அவர்கள்
சின்னக்கண்ணன் அவர்கள்
கோபால் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
கல்நாயக் அவர்கள்
C.ராமச்சந்திரன் அவர்கள்
கார்த்திக் அவர்கள்
ராகுல்ராம் அவர்கள்
ராகவேந்திரன் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
வினோத் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
சந்திரசேகரன் அவர்கள்
புலவர்கள் அவர்கள்
கண்பத் அவர்கள்
ஹரீஷ் அவர்கள்
gகிருஷ்ணா அவர்கள்
ரவி அவர்கள் (ஹைதராபாத்)
S.வாசுதேவன் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
பார்த்தசாரதி அவர்கள்
மற்றும்
அன்பு பம்மலார் அவர்களுக்கும்.
தொலைபேசி மூலம் பாராட்டுக்கள் தெரிவித்த முரளி சார் அவர்களுக்கும்.
'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும்
மற்றுமுள்ள நண்பர்கள் ஏனையோருக்கும்
என் இதயபூர்வமான நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்.
தங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆதரவும் எனக்கு மிகுந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன. என் வேண்டுகோளை ஏற்று 'துளிவிஷம்' பதிவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் என் மனமார்ந்த நன்றி!
அணிகலன் செய்யப்படுவதோ... பத்தரைமாற்று சொக்கத்தங்கத்தில்.
செய்பவரோ.... தலைசிறந்த பொற்கொல்லர்.
விற்பனைக்கு பொறுப்பேற்பதோ.....உலகின் தலை சிறந்த விற்பனை மேலாளர்கள்
வாங்கப்போவதோ....பரம பக்தர்கள்.
அவர்கள் எண்ணிக்கையோ..... பலகோடி.
விலையோ..... பராசக்தி கால செலாவணியில் ஒண்ணரை ரூபா.
50,000சிறியதாக தெரிகிறதே!