-
ராஜேஷ் சார்/கிருஷ்ணா சார்/ராகவேதிரன் சார்/மது சார்/
'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் முற்றிலுமாக மறக்கடிக்கப் பட்ட பாட்டு. ஆனால் எனக்கு இந்தப் பாடல்தான் அந்தப் படத்தில் முதல் இடம்.
அடடா! இசையரசி நடத்தும் தனி ராஜாங்கம். அந்தக் குரலும், துடிதுடிப்பும், சுறுசுறுப்பும், வார்த்தை உச்சரிப்புகளும், தெளிவும்,
உலகின் முழுமையான ஒரே பாடகி.
'நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்'
'மெல்லிசை மன்னர்' இசை சாம்ராஜ்யம் நடத்துகிறார். ஆரம்ப மியூசிக் அமர்க்களம். படம் முழுதும் பல்வேறு இசைக்கருவிகளை வைத்து மனிதர் புகுந்து விளையாடுகிறார். இவருக்கா ஒன்றும் தெரியாது?!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சார்.
இந்தப் பாடல் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=HTUcB...yer_detailpage
-
மிக அருமையான நினைவூட்டல்
நன்றி வாசு சார் .
படத்தில் இடம் பெறாத பாடல் .
1972 துவக்கத்தில் விற்பனைக்கு வந்த எச் .எம் .வி இசைதட்டில் single play முதல் பாடல்
கண்ணை நம்பாதே .அடுத்த பாடல் நீ தொட்டு பேசினால் என்ற பாடலும் இடம் பெற்று இருந்தது .
அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் பட இசைதட்டில் இடம் பெற்ற பாடல் .
சுசீலா வின் குரலில் ''நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது '' -இனிமையான பாடல் .
இந்த இரண்டு பாடல்களும் படத்தில் இடம் பெறாதது ஒரு குறையே .
இருந்தாலும் அந்த பாடலை நினைவு படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி
-
நன்றி வினோத் சார்.
நீங்கள் கூறியது உண்மை. 'நினைத்ததை முடிப்பவன்' ஓடியன் இசைத்தட்டில் கூட 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து' பாடலுக்குக் கீழே 'நீ தொட்டுப் பேசினால்' பாடல் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அவர்கள் திரியிலேயே இது பதிவிடப் பட்டுள்ளது. இப்போது நம் திரி நண்பர்கள் பார்வைக்கு.
http://i125.photobucket.com/albums/p...ps999e110d.jpg
-
பொங்கும் பூம்புனல்
http://s.ecrater.com/stores/47612/48...a78_47612n.jpg
http://s.ecrater.com/stores/47612/48...927_47612n.jpg
இன்றைக்கு நாம் கேட்க இருப்பது 1980ல் வெளி வந்த கீதா ஒரு செண்பகப் பூ திரைப்படத்திலிருந்து நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் பாடல், கங்கைக் கரையில் விளைந்த கவிதை.
நம்ம கோபால் சார் சொல்லும் விதத்தில் வேண்டுமானால் கடுமை இருக்கலாம். ஆனால் சில விஷயங்களில் அவருடைய கருத்து சரியாக இருக்கும் அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். ஏனோ தெரியவில்லை, தமிழைக் கொலை செய்பவர்களை மெல்லிசை மன்னர் தொடர்ந்து தன் படங்களில் பயன் படுத்தியது ஜீரணிக்க முடியாத விஷயம். அதற்கு உதாரணம் இந்த பாடல். அருமையான பாடலில் வாணி ஜெயராம் அமர்க்களப் படுத்தி யிருப்பார். ஆனால் ஆண் குரல்.... மொழி உச்சரிப்பு .... நீங்களே கேட்டுப் பாருங்கள்... ஜாலி ஆபிரகாம் நல்ல பாடகர் தான்.. ஆனால் அவரை இன்னும் கொஞ்சம் உச்சரிப்பில் கவனம் செலுத்திப் பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்தப் பாட்டு.... ஆஹா.. மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.
கங்கைக் கரையில் விளைந்த கவிதை
-
http://www.youtube.com/watch?v=dTwWw0IC6xE
முகம் தெரியாதவரோடு ஒரு கட்டத்தில் அறிமுகம் ஏற்படுகிறது. காலப்போக்கில் அது நட்பாக மாறி இறுதி வரை தொடர்கிறது. அந்த நட்பு தெய்வீகமாக உருவெடுக்கும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தியாக உள்ளமும் தானாகவே ஏற்பட்டு விடுகிறது. எந்தத் தடையும் அந்த நட்பை எதுவும் செய்து விடமுடியாது. தூக்குத்தூக்கி திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்களில் கடைசியாக இடம் பெற்ற நீதி, உயிர்காப்பான் தோழன். அதையெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்தப் பாட்டு நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை. அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பது கங்கை அமரனின் இசையும் எஸ்.பி.பாலா மலேசியா வாசுதேவன் குரல்களும்.
நெல்லிக்கனி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் நமக்காக.
காணொளியைத் தரவேற்றிய நண்பருக்கு நமது உளமார்ந்த நன்றி.
-
'தாயில்லாக் குழந்தை' தேவர் பிலிம்ஸ் படம். விஜயகுமார், ஜெயசித்ரா நடித்தது. இசை இன்னிசை வேந்தர்கள் இரட்டையர்கள்.
இதில் ஒரு இனிமையான பாடல்
நீர் மேகம் ஆனால் என்ன
நான் தோகை ஆன பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே
நல்ல மெலடி டூயட். அருமையாக நல்ல தமிழில் எழுதப்பட்ட பாடல் வரிகள்.
https://www.youtube.com/watch?v=wT9wHXt-m4M&feature=player_detailpage
-
'நெல்லிக்கனி' படத்தின் அருமையான நண்பர்கள் டூயட் பாடலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.
இதே ஜோடி அதே நட்புடன் 'கடலோரம் வலை வீசு'வதைப் பாருங்கள். 'ஆனந்த ராகம்' படத்தில் இளையராஜாவின் இசையில்
http://www.youtube.com/watch?v=PB8s20sGTRo&feature=player_detailpage
-
மிக அபூர்வமான பாடல்
வினோத் சார்,
நீங்கள் பதித்திருந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம் பெறாத
'நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது'
அவள் என்ன நினைத்தாளோ
அதை சொல்ல மறுத்தாளோ'
சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில்.
http://www.inbaminge.com/t/u/Ulagam%...akkul.vid.html
-
ரமலான் ஸ்பெஷல் (1)
"எல்லோரும் கொண்டாடுவோம்" (பாவமன்னிப்பு)
இப்படத்தில் நடித்த நடிகர்திலகம் கூறுவார் "இப்படத்தைப் பார்க்கும் எனதருமை இஸ்லாமிய நண்பர்கள் வாழ்ந்தால் இந்த ரகீம் போல வாழ வேண்டும் என்று நினைக்கும் வண்ணம் மிகவும் சிரத்தையெடுத்து நடித்தேன்" என்று. அவரும் படக்குழுவினரும் பட்ட சிரத்தைக்கு சிறப்பாகவே பலன் கிடைத்தது. இன்றளவும் மத நல்லிணக்கத்துக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது இந்த திரைக்காவியம். அதிலிருந்து இந்தப்பாடலை இஸ்லாமிய அன்பர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாய் அளிப்பதில் பெருமையடைகிறேன்.
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்தபின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவு செய்வோம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
கருப்புல வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
உடலுக்கு அன்னையென்போம் உரிமைக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக்கண்டு ஒன்றாய்க்கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவர் கொடுக்கவைப்போம் கொடுத்தவர் எடுக்கவைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்.
-
ரமலான் ஸ்பெஷல் (2)
'மேரா நாம் அப்துல்ரகுமான்' (சிரித்து வாழ வேண்டும்)
தான் எந்தவொரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் வரும் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துச்சொல்வது மக்கள்திலகத்தின் வழக்கம். (அவரைப் பின்பற்றுவோர் அவற்றை கடைபிடிக்கிறார்களா என்பது வேறு விஷயம்). அந்த வகையில், தான் ஏற்றுநடித்த அப்துல் ரகுமான் கதாபாத்திரத்தின் மூலம் அவர்தரும் அருமையான பாடல். இப்பாடலை ஈத் பெருநாள் பரிசாக அளிப்பதில் பெருமையடைகிறேன்.
ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
ஆடும் நேரத்தில் ஆடிப்பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் இரண்டும் உலகில் தேவை
ஆடும்போதும் நேர்மைவேண்டும் என்றோர் கொள்கை தேவை
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் உறைந்தே நின்றான் அவனே அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்
ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்...