நடிகர் பாக்யராஜ் அவர்களின் திருமணத்தில்
http://i157.photobucket.com/albums/t...ps5511bf09.jpg
Printable View
நடிகர் பாக்யராஜ் அவர்களின் திருமணத்தில்
http://i157.photobucket.com/albums/t...ps5511bf09.jpg
வாலி பிறந்தநாளையொட்டி வாலி எழுதிய நடிகர்திலகத்தைப் பற்றிய கவிதை மற்றும் பாரத விலாஸ் பாடல் இணைப்பை sivajiperavai முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதற்கு, பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் - நடிகர்திலகம் - வாலி காம்பினேஷனில் 15 முத்தான பாடல் இணைப்புகளை அளித்துள்ளார். அதனைக் காண ............ முகநூல் இணைப்பு.........
https://www.facebook.com/sivaji.pera...=share_comment
நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகி திரு செல்வராஜ் உள்ளிட்ட சிவாஜி ரசிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...bff1fb549d5139
https://scontent-b-sin.xx.fbcdn.net/...3a&oe=54F5D7A5
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...109338bbb3cb77
https://scontent-b-sin.xx.fbcdn.net/...ee&oe=54AC15A9
https://scontent-b-sin.xx.fbcdn.net/...22&oe=54E5A270
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...e5009f789d81a6
நிழற்படங்களுக்கு நன்றி திரு செல்வராஜ் அவர்கள், நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆஹிர் பைரவ் (அ )சக்ரவாகம் பல்லவி மட்டுமே. சரணம் முழுக்க சரசாங்கி.
ஒரு வரியில் கதையை சொல்லும் கலை கண்ணதாசனுக்கு மட்டுமே சொந்தம்.
உதாரணங்கள்.
1)தாய்க்கு நீ மகனில்லை,தம்பிக்கு அண்ணனில்லை.ஊர்பழி ஏற்றாயடா. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.....
2)சிந்தையிலே நான் வளர்த்த கன்று ,சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று.
3)கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் ,தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் .
Courtesy: Mr Harish
இமயம்
AvYj
ஐந்தடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனில் யாருமே சிவாஜியைக் காணவில்லை; சிதம்பரம் பிள்ளையைத்தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் - வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது, சிவாஜியால்தான். பாச மலரின் ராஜ சேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர், இளமையும், அன்னையும், அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரபட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத்திரையில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன.
நாடக உலகின் பிதாமகர் டி.கே.ஷண்முகம், ஒளவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்; கிழவியின் தோற்றம் வேண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர் - ஒளவையாராய்க் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராம பிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சிகரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் "யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். ""அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி.கணேசன்'' என்று சொன்னார்களாம். அவர் தாம் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்; சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர்; மு.கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டின் அதிருஷ்டத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். "தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்'; "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்'; "அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே' போன்ற நெருப்புப் பொறிகளைப் பொத்தி வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர், சிவாஜி.
ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக்கொண்டது, அவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும்.
அவருடைய நடிப்பின் பிரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய மிகை வசனங்கள், நடுவில் சற்றேமிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும் உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ்மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.
இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலக்கட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரை ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மிகாமல், வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர்தான், பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலாசாரத்தின் மரபு சார்ந்த படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப் பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதைகளில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார், சிவாஜி கணேசன்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் - எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன்; எஸ்.வி.ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜிகணேசன். அவரின் உணர்ச்சி பூர்மான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக்காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம், பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.
பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து "கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும்போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.
தூக்குத் தூக்கியிலிருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது - பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். இவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலத்தின் பரிசோதனையைக் கடந்த திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர், சிவாஜிகணேசன்.
படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் (உஷ்ற்ழ்ர்ஸ்ங்ய்ற்) எல்லாவற்றையும் ரகசியமாகப் பூட்டி வைக்கும் (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ற்) மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம், இது.
பீம்சிங்கின் பா வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக்கொணருவதிலேயே குறியாய் இருந்தன.
உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும் பி.எஸ்.வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க்கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந்தந்தக் கதாபாத்திரங்களில் அவர் முழுமனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந்தாரா என்பது கேள்விக் குறியே. தெய்வ மகன், ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தது குறித்துத்தான் அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டதேயொழிய நடிப்பு, குறிப்பாக மூத்த மகன் கதாபாத்திரத்தின் நடிப்பு, வெகுவாகச் சிலாகிக்கப்படவில்லை.
இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான், சிவாஜியின் நடிப்பை விரும்பிப் பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம்பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீரசிவாஜி அதுபோல்தான் நடந்திருப்பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயண சாமி ஐயரைப்போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கனவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல்-சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை, உண்மையான போலீஸ் அதிகாரியைக் கூடப் பொருமைகொள்ளச் செய்யும்.
சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.
படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில் சினிமா, நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்
அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?
from Mr Murali Srinivas Old Post
இன்று அக்டோபர் 30. 31 வருடங்களுக்கு முன்பு [1978] இதே நாளில் பைலட் பிரேம்நாத் வெளியானது. ஒரு அந்நிய நாட்டில் நூறு அல்ல இருநூறு அல்ல ஆயிரம் நாட்கள் ! ஆம் இலங்கையில் 1080 நாட்கள் ஓடிய ஒரே படம் பைலட் பிரேம்நாத்.
இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஓடிய அரங்குகளும் நாட்களும் பட்டியல்
யாழ்பாணம் - வின்சர் - 222 நாட்கள்
கொழும்பு - கேப்பிட்டல் -189 நாட்கள்
கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்
கொழும்பு - சவோய் - 189 நாட்கள்
இதற்கு பிறகு ஷிப்டிங் முறையில் பைலட் பிரேம்நாத் ஓடிய நாட்கள் - 1080.
கடல் கடந்து வேறொரு நாட்டிலே முதன் முதலாக திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்த நாள் முதலாக இன்று வரை இந்த சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.
சாதனைகளுக்கென்றே பிறந்த சரித்திர நாயகன் புகழ் வாழ்க.
recap from the old post
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரையொன்று.....................
உலக அளவில் விருதுகள்!
சின்னராசு
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------
இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள்
------------------------------------------------------------------------------------------------------------
நடிகர்திலகம் சிவாஜி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். ஒருநாள், தேவர் நடிகர்திலகத்திடம் "அய்யா, நீ வேறொரு கேம்ப்பில் இருக்கிறாய். அடிக்கடி என்னை வந்து பார்த்தால் நமக்குள் ஏதோ ரகசியத் தொடர்பு இருப்பதாக நினைத்து உன்னுடைய சேவையில் களங்கம் கற்பிப்பார்கள். அதனால் என்னை நீ நேரில் சந்திக்காமல் இருப்பது உனக்கு நல்லது" - என்று கூறினாராம்.
இது பசும்பொன் தேவருக்கும், நடிகர்திலகத்திற்கும் உள்ள உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
(ஆதாரம் - மக்கள் தலைவர் சிவாஜி மணிவிழா மலர், அக்டோபர் 1988)
---------------------------------------------------------------------------------------------------------------------
http://i1234.photobucket.com/albums/...pse6f7d51b.jpg