http://i59.tinypic.com/14e1md0.jpg
Printable View
14.6.1962
மக்கள் திலகம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் திருமண நாள் .
http://i61.tinypic.com/28j8g2v.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.6.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில்
நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி
கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .
மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு
ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார் .
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம்
அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும் .
இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .
சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .
ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை திருமதி சௌகார் ஜானகி . அந்த பெருமையை பெற்ற படம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு ..மக்கள் திலகத்துடன் பல நடிகைகள் நடித்திருந்தாலும் , சௌகார் ஜானகி பல படங்களில்
நடித்திருந்தாலும் மிகபெரிய புகழும் பெருமையும் சேர்த்த படம் ''ஒளிவிளக்கு ''
மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற இறைவனிடம் உருக்கமுடன் பாடிய பாடல் ...படத்திற்காக ..
ஆனால் நிஜ வாழ்வில் 1984ல் மக்கள் திலகம் மரணத்துடன் போராடிய நேரத்தில் உலகமெங்கும் வாழ்ந்த மக்கள்
அனைவரும் செய்த கூட்டு பிராத்தனை பாடல் என்றால் அது மக்கள் திலகம் அவர்களின் ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற ஆண்டவனே ... உன் பாதங்களில் ... பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .
http://youtu.be/gC8PqSw3w4Y
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=49KGQqACJLQ#t=56
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=XSyzxrwt_Aw
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :
பாசம் நெஞ்சத்தில் பயிர் செய்யும் விவசாயியாம் நம் மக்கள் திலகத்தை கணவன் - ஆக , பைந்தமிழ் கலையரசி அன்னை ஜானகி அவர்கள் கைப்பிடித்த திருமண நாள் பற்றிய செய்திகள் மிக மிக அருமை.
குறிப்பாக " இரட்டை இலை " சின்னத்தை முடக்கி விடாமல், பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து, இன்றும் வெற்றி சின்னமாய் பவனி வந்து கொண்டிருப்பது அன்னை ஜானகியால்தான் என்பது பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய செய்தி.
http://i57.tinypic.com/2lm5iyw.jpg
தக்க தருணத்தில் நினைவு கூர்ந்து அன்னை ஜானகிக்கு பெருமை சேர்க்கும் பதிவினை மேற்கொண்டதற்கு நன்றி !
பின் குறிப்பு : இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் திரையுலகில் முதன் முதலில் .சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களை வைத்து "பவளக்கொடி" மற்றும் " நவீன சாரங்கதாரா " போன்ற படங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்