-
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....
ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வயத்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா..
*எவர்க்ரீன் ஹீரோ*... Thanks Friends...
-
*1972 மறக்க முடியுமா?*...
*மக்களின் நாயகனை*?
*அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி* *நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு* *கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா* *திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார்*.
*அந்த ஆண்டு 1972*.
*அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம்* *என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று* *சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்*.
* *ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக* *நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது*.
*தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து *விட்டது என்பதை கட்டியம் கூறியது*.
* *தென்னிந்திய* *நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக* *தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே*?
* *அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள்* *தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல* *தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது*.
*திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என *பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன*.
* *நான் ஏன் பிறந்தேன்*? *வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று* *ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை* *கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை* *பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை* *பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை* *வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல்* *சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு* *உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்*.
*தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில *ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்*.
* *புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக்* *கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி *பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் *திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர்* *வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் *சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும்* *உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும்* *டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி* *பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப* *தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும்* *காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான* *சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே*.
* *திருவளர் செல்வியோ, நல்லது *கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை* *கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்*. *அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்*.
* *அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி *பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு*. *பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்*.
*இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்*.
*100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்*.
*இனி அரசியல்*:
*செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள்*. *சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்*.
*அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்*.
*முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்*.
*தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை*.
*திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி*.
*மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த *மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை*.
*கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா*? *1972ஐ.*... Thanks Friends...
-
-
-
கருணாநிதி பலநூறு படங்கள் வசனம் எழுதி சம்பாதித்தார் னு சில அள்ளக்கை உபீஸ்..
கருணாநிதி இல்லைனா புரட்சித் தலைவரே இல்லைனு மெண்டல் ரஜினி.. இத வேற நாங்க வரலாறு படிச்சிட்டு வரணுமாம்...
வரலாறு நான் சொல்றேன் ஆதாரத்துடன்...
பேசிய ரண்டு பேர் வேணும் னா செத்திருக்கலாம்..
16-1-1971.. கலைவாணர் அரங்கம்...
எங்கள் தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா..
மேடையில் புரட்சித் தலைவர், தலைவி மற்றும் பலர்..
மைக் பிடித்த நபர் மாறன்..
எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் வட்டி கூட கட்ட முடியாத நிலை..
என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் புரட்சி நடிகர் அவர்களும், கலைச் செல்வி அவர்களும் பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்கள்.. அது மட்டுமின்றி, ஒரு பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்கள்..
இன்று எங்கள் குடும்பம் அனைத்து கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர்கள் இருவரும் தான்.. கோபாலபுரம் வீடு அவர்கள் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...
நானும், எங்கள் குடும்பமும் ஆயுள் உள்ளவரை அவர்களை மறக்கக் கூடாது.. etc...
அடுத்து பேசிய கருணாநிதி மேலே உள்ளவற்றை டிட்டோ..
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் எனது வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...
இவை அனைத்தும் அடுத்த நாள் 17-1-1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது...
அதேபோல, அண்ணா அவர்கள், தம்பீ வா.. தலைமையேற்க வா என்று அழைத்தது இந்த சகுனியையா..?
நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை..
அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலிலேயே இல்லாத இந்த நபரை தனது செல்வாக்கால் எம்எல்ஏக்களை சம்மதிக்க வைத்து முதல்வர் பதவியை பிச்சையிட்டது என் தலைவன்...
வரலாறு முக்கியம் மணியா...
பிச்சுப்புடுவோம்... 💪💪💪
அஇஅதிமுக தொண்டன் ஒவ்வொருவனும் ஆயிரம் சாமுராய்களுக்குச் சமம்... 💪💪💪
பி.கு. :- லிங்க் ப்ளீஜ் டோலர்கள் 17-1-1971 முரசொலி படிக்கவும்...😂
கஷ்டப்பட வேணாம்.. கீழே உள்ள போட்டோவைப் பாருங்க... 😂😂
இதுக்கு மேலேயும், கருணாநிதி பரம்பரைப் பணக்காரன் னு புளுகீட்டுத் திரிஞ்சா மந்திரிச்சு முட்டை பதிச்சு விடப்படும்... 😂😂😂
#Harishankar Krishnathulasi, Erode # Thanks...
-
-
-
-
-