டியர் ராகவேந்தர் சார்,
பம்மலார் அவர்களின் சாதனை மலர் குறித்த அறிவிப்பு தேனாக இனிக்கிறது. அவரது அயராத உழைப்பு நாம் அறியாததல்ல. இருந்தாலும் இப்போதுதான் 'அங்கே' ஒரு சாதனை நிகழ்த்திய கையோடு இங்கேயும் சாதனை நிகழ்த்த முனைந்திருப்பது மலைக்க வைக்கிறது.
நிச்சயம் இது நாம் எதிர்பார்ப்பதைவிட பெரிய வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை. (விரைவில் சென்னை வர இருக்கிறேன். அப்போது பம்மலாரின் கைகளாலேயே இந்த சாதனை செப்பேட்டைப் பெற வேண்டும். அப்போது தங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்)....