புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சுய சரிதையில் நடிகர் டி.எஸ்.பாலையாவிற்கும் பங்குண்டு.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி
என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அது மட்டுமல்ல.
அந்த படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா ,என்.எஸ். கிருஷ்ணன் ,டி.எஸ். பாலையா,கே.ஏ. தங்கவேலு ஆகியோருக்கும் முதல் படம் சதிலீலாவதிதான்.
அந்த படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ். பாலையா
நடித்துள்ளார்.
மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர் தான் எம்.ஜி.ஆர்.
ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து
கல்கத்தாவுக்கு படபிடிப்புக்காக போன போது , பாலையா அங்கு வந்தாராம்.எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த பாத்திரம் பாலையாவுக்கு போய்விட்டது . எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தது .
அன்று பாலையா செய்த அந்த ரோல் மாதிரி , என்னால் நிச்சயமாக செய்திருக்க முடியாது, என்று "நான் ஏன் பிறந்தேன் " சுய சரிதையில் எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் - இந்து - இந்து டாக்கீஸ் -தினசரி -22/08/2014-வெளியிட்ட செய்தி.