Welcome ramadoss sir
வருக வருக திரு ராமதாஸ் அவர்களே உங்கள் தமிழ் புலமையில் பதிவுகளை எதிர்பார்கிறேன்
Printable View
Welcome ramadoss sir
வருக வருக திரு ராமதாஸ் அவர்களே உங்கள் தமிழ் புலமையில் பதிவுகளை எதிர்பார்கிறேன்
Dear gopal sir,
wonderful compilation of pammalar sir"swork
நடிகர்திலகம் திரியில் புதிதாக பதியத்துவங்கியிருக்கும் தமிழாசிரியர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள். தமிழாசிரியர்கள் என்றால் நான் மிக்க மரியாதை செலுத்துவேன். இங்கு பலரும் சொல்வது போல் நடிகர் திலகமும் எனக்கு தமிழாசிரியர்தான்.
உங்கள் முதல் பாராட்டு பதிவில் அம்பிகாபதி படப்பாடலை நன்றாக எடுத்தெழுதி வரும் பதிவுகளுக்கு முன்னுரை தந்து விட்டீர்கள். எதிர்பார்க்கிறோம் உங்கள் அடுத்தடுத்த பதிவுகளை.
நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்களே, திரியில் புதிதாக யார் வந்தாலும் தாங்கள் என்னை நினைத்துப்பார்ப்பது அழகோ அழகு. என்ன செய்வது (திரியில் நான் அழைக்கும்) எங்கள் அண்ணன் காட்டிய வழியினால் வந்த வினையிது. பரவாயில்லை. நீங்கள்தான் என்னை இங்கிருக்கும் பலரது பெயரில் சந்தித்து விட்டீர்கள். நீங்கள் சந்திக்காத சிலரை நானென்று நம்பும் உங்களை நான் சந்தித்து உங்கள் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பவில்லை. போக்கிரி வடிவேலு போல இதை வேண்டுமென்றால் உங்கள் திருப்திக்கு சொல்லிக்கொள்ளுங்கள்-"எந்த பெயரில் எழுதினாலும் இந்த ரவிகிரண் சூர்யா எப்படித்தான் என்னை கண்டுபிடிக்கிறாரோ!!!"
ராமதாஸ் சார் அவர்கள் வேண்டுமென்றால் அவர் நானில்லையென்பதற்கு ஆதாரமாக தங்களை நேரில் சந்தித்து தங்கள் சாபத்திலிருந்து விலக்கு பெற்றுக்கொள்வாராக.
Dear Sivajisenthil, I think you have left out inadvertently following great personalities from your fantastic & great contributors to NT's name and fame . In my opinion , this thread is greatly strengthened by their contributions and timely appreciation of others who post their views . The names you have chosen are true and very correct . Apart from them
1. Ragavendra Sir ( no words to praise his contributions )
2. CK ( though not frequently posting but his way of narrating is different and admirable)
3. CS Sekhar ( he never hesitate in appreciating articles of others instantly)
4. Sivaji Senthil
5. JR )
Great admirers of NT like all of us
6. Partha sarathy )
7. Vasudevan ( great admirer of NT )
8. Ramajayam Sir ( well seasoned personality )
9. Pammalar ( see his compilation thro Gopal )
10. Neiveli Vasudevan ( though he is not visiting here , his analytic skills are awesome
11. Kalnayak ( his sense of humour is excellent)
Thanks , I like your spontaneous reaction whenever we compare the movie Karnan with others. Idea is not to discount your posting but to highlight the missing names who are equally doing great here .
அன்புள்ள ஆதிராம், நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு. உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் நானல்லவென்று நண்பர் ரவிகிரண்சூர்யா அவர்களிடம் நிரூபிக்க வேண்டும் - அவ்வளவுதானே. அவரிடம் தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளச்சொல்லுஙகள். அது போதாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நேரடியாக சந்தியுங்கள். அவர் விட்ட சாபத்திலிருந்து விலக்கு கோருங்கள். இல்லாவிட்டால்... மறுபடி நானே என்னுடன் பேசிக்கொள்வதாய் ... முதலிலிருந்து மறுபடி தொடரும். உங்களுக்குத் தேவையா இவையெல்லாம்?
இதென்ன கலாட்டா நான் பதிலுரைப்பதற்குள் ஆதிராமின் பதிவே பறிபோனதெங்கே. இரவிகிரண் சூர்யா அவர்களே இதற்கும் நானே காரணமாகிப் போகிறேன் என்று தாராளமாக சொல்லுங்கள் (?!!!!)
திரியில் என்னை வரவேற்ற நண்பர்கள் ராகவேந்திரன் அய்யா, சௌத்ரி அய்யா, ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிகிரண் சூர்யா, சின்னக் கண்ணன், ரவி ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி!
ரவி அவர்களே!
தங்களின் தனித்துவமான பதிவுகள் சர்க்கரை பொங்கலாய் இனிக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தங்களின் பாடல் அலசல்கள் அச்சு வெல்ல சுவை.
முரளி அவர்களே!
தங்களின் தாழையாம் பூ முடிச்சு பாடல் அலசல் மிக நன்று. நீங்கள் மிக விரிவாகவும், அழகுறவும் இப்பாடலை அலசி எங்களை மகிழ்வுறச் செய்துள்ளீர்கள்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.
நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-
கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.
நான் மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு பிறகு வந்த நடிப்பு கடவுள் காட்சிகள்-
---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.
---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.
---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் போது,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.
----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.
---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.
---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.
---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.
---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.
---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.
---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.
---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.