http://s21.postimg.org/oxhob5mgn/vfffd.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tWbA4cw_ejY#t=10
மக்கள் திலகம் அவர்களின் திருமண நாளையொட்டி சிறப்பான பதிவுகள் மற்றும் படங்கள் பதிவிட்ட திரு செல்வகுமார் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி ..திரு தெனாலி அவர்களின் புகைப்பட வீடியோ தொகுப்பு - பாட்டுடை தலைவன் எம்ஜிஆர் ஆல்பம் அசத்தல் .யுகேஷின் பதிவுகள் அருமை .
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்.
எங்கள் இறைவா !
புரட்சித்தலைவா !
http://i1170.photobucket.com/albums/...ps9f15951b.jpg
கேளம்மா சின்னப் பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்வேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு - ஏழை
வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு !
ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு
அவன் இருப்பதுவும் படுப்பதுவும்
குருவி வாழும் கூடு !
இருப்பவங்க கொடுக்கணும் , இல்லாததை
எடுக்கணும் - அதைத் தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கணும் !
தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க
சட்டம் போடணும் ; குவியக் குவிய
விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழை
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும் !
சாலையிலே மேடு பள்ளம் வண்டியைத் தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும் !
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னமோ நடக்கும் ;
அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா
நிம்மதி பிறக்கும் .................
http://i1170.photobucket.com/albums/...ps84c69a3c.jpg
The man who stole my heart and millions ....!!!
http://i1170.photobucket.com/albums/...ps047d8b97.jpg
முப்பதாயிரம் பல்புகளை கொண்டு அமைக்கப் பட்டிருந்த, 'ஸ்விஸ் பெவிலிய'னில் படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. நானும், சந்திரக்கலாவும் அதனுள் நுழைந்தோம். நாங்கள் சென்ற பாதை, எங்களுக்குப் புதியது. சுற்றினோம்... சுற்றினோம்... ஏறத்தாழ, ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி நடந்தோம். சுவிஸ் அரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழியில் யாரையாவது கேட்டால், அவர்கள் சரியாகத்தான் பாதை சொல்வர். ஆனால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்கு முன், நாங்கள் பார்க்கும் காட்சி எங்களைப் பிரமிக்க வைக்கும். அதை பார்த்த பின் திரும்பிச் செல்வதற்குள், வழி தவறி விடும். தூரத்தில் அந்த அரங்கின் விளக்கொளி கண்ணுக்குத் தெரியும். 'அப்பாடா' என்று, பெருமூச்சு விட்டு நடப்போம். வழி எங்களை எங்கோ கொண்டு போய் நிறுத்தும். இப்படி அலைந்து அலைந்து ஒரு வழியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம்.
அவசரத்தில், 'செட்-அப்' செய்து, நடனத்தை எடுக்க நேரமில்லை. வாயால் சொல்லிக் கொண்டு நடித்தோம். சில சமயம் அப்போது தோன்றுகிற ஏதாவது நடன அசைவைச் செய்தால், சந்திரகலாவும் குழப்பமின்றி அதைச் செய்து நிறைவு செய்ததை, போற்றாமலிருக்க முடியாது. இப்படி அந்தக் காட்சியைப் படமாக்கிய பின் தான், எல்லாருக்கும் மன நிம்மதி ஏற்பட்டது.
பண்புள்ள மக்களான ஜப்பானியர்கள் கூட, மது அருந்தி, மயங்கும் நிலைக்கு ஆளாகி விட்டால், எப்படிப்பட்ட தவறு செய்வர் என்பதை, அன்று நேரில் அனுபவித்தேன்.
ஒளிப்பதிவாளர் அழைக்கும் வரையில், நானும், சந்திரகலாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நாகேஷ் மற்றும் அசோகனும் எங்களுடன் இருந்தனர். குடி மயக்கத்தில் இருந்த ஒரு ஜப்பானியர், சந்திரகலாவின் உடைகளை ஆர்வத்தோடு கவனித்தபடி, மெல்ல மெல்லத் தள்ளாடியவாறு, அருகில் நெருங்கி வந்தவர், சந்திரகலா அணிந்திருந்த துணியை மரியாதையோடு, மெல்லத் தொட்டுப் பார்த்தார். என்ன எண்ணினாரோ தெரியாது, திடீரென சந்திராவின் உடலைத் தொட்டு விட்டார். அருகில் இருந்த நான், எல்லாவற்றையும் மறந்தேன். அவர் கை சந்திராவின் மீது பட்டதும், என் கை ஜப்பானியரின் உடலில் பட்டது. பலமாக அடித்து விட்டேன். அவர் கண்ணில் இருந்த கண்ணாடி, தெறித்து கீழே விழுந்தது.
பக்கத்திலிருந்த அனைவரும் திகைத்து விட்டனர். சந்திரகலா, அதிர்ச்சியில் பேச இயலாது ஊமையாகி விட்டார்.
அடிபட்ட ஜப்பானியர், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், இரு கைகளையும் கோர்த்து, தலையிலிருந்து இடுப்பு வரை முன்னால் வளைந்து, மேலும், கீழும் உடம்பை ஆட்டியபடி, 'மன்னியுங்கள்' என்று, அவருடைய மொழியில் சொல்லியவாறு, அப்படியே பின்னால் நகர்ந்து போனார்.
ஜப்பானிய நாட்டில், ஒரு ஜப்பானியரை அடித்து விட்டோமே அவருடைய நண்பர்கள், 'எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனைத் தாக்கி விட்டான்...' என்று பிரச்னை செய்வார்களோ... அந்த அடிப்படையில் பிரச்னை உருவாகுமாயின், விளைவுகள் எதுவரை போகும், என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், என் உள்ளம் மட்டும், நான் செய்தது சரிதான் என்று, எனக்கு உற்சாகத்தையே அளித்தது.
ஆனால், அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், விவரத்தை அமைதியாகக் கேட்டு, உண்மையை அறிந்ததும், தவறு செய்த அந்த ஜப்பானியரைக் கண்டித்தனர்.
இவர்களும் ஜப்பானியர் தான்; மதி கெட்ட செயல் புரிந்த அவரும், ஜப்பானியர்தான். ஆனால், ஒரே வித்தியாசம், தவறு செய்தவர் குடித்ததால், மதி மறந்திருந்தார். வருத்தம் தெரிவித்த மற்றவர்களோ, மதி மறக்காதவர்கள். இதுதான் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்.
மதுவினால், ஒரு மனிதன் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறான் என்பதைக் கவனிக்கும்போது, குடியைக் கெடுக்கும் குடியை, பெரிதாக எண்ணுபவர்களை என்னவென்று சொல்வது?
'எக்ஸ்போ'வில், ஒரு இடத்தில், பெரிய சித்திரம் வரைந்த தட்டி வைக்கப்பட்டிருந்தது. 'இந்த கலை அழகு பொருந்திய இடத்தில், ஏன் இப்படி ஒரு சித்திரத்தை வைத்திருக்கின்றனர்?' என்று கேட்டோம்.
'எக்ஸ்போ முடிகிறதே...' என்று, அப்பெண் கண்ணீர் விடுவதாக, அந்த ஓவியத்தின் அர்த்தத்தை கூறினர்.
அதில் எழுதியிருந்ததைப் படித்த நாகேஷ், 'ஏண்ணே... எங்கேயும் திறப்பு விழாவுக்குத்தானே போவீங்க? ஆனா, இங்கே மூடு விழாவுக்குல்ல வந்திருக்கோம்...' என்றார்.
எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தோம். அதற்குள் சொர்ணம் சொன்னார்... 'அந்தக் கெட்ட பேர் நமக்கு வரக்கூடாது. அதை, இந்த நாட்டு மக்களுக்கே விட்டு விட்டு, ௧௨ம் தேதியே, 'எக்ஸ்போ' வை விட்டு புறப்படப் போகிறோம்...' என்றார்.
பன்னிரெண்டாம் தேதி படபிடிப்பில், 'எக்ஸ்போ'வின் மத்தியிலிருந்த கூண்டிலிருந்து, எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு மத்தியில் அசோகன் நின்று கொண்டிருப்பதையும், அதே ஷாட்டில் நானும், சந்திரகலாவும் கூண்டுக்குள் உட்கார்ந்து அவரைப் பார்ப்பதையும், மீண்டும் நானும், மஞ்சுளாவும் எக்ஸ்போவின் மத்தியில் நின்று பேசிக்கொண்டிருப்பதையும், 'எக்ஸ்போ'வில் வேறொரு இடத்தில் நாகேஷ் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும், 'ஜூம்' கருவியைக் கொண்டு படமாக்கினோம்.
இத்தனையையும், ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும். அதாவது, அசோகன் அருகில் தெரிவது, கேமராவின் கண்ணாடி சுழன்றதும், நாங்கள் உட்கார்ந்திருப்பதும் சேர்த்துத் தெரியவேண்டும். மீண்டும் கண்ணாடி சுழலும் போது, நானும் மஞ்சுளாவும் காத்து நிற்பது, அதன் பின், நாகேஷ் மட்டும் தனியாக அங்குமிங்கும் நடந்தவாறு காத்து நிற்பது, அதைப் பார்த்த நாங்கள் புறப்படுவது - இப்படி படமாக்கினோம்.
அசோகன் நின்ற இடத்திற்கும், நாங்கள் உயரத்தில் இருந்த இடத்திற்கும், குறைந்தது,
4 கி.மீ., தூரம் இருக்கும்.
அதே போலத்தான் மஞ்சுளாவும், நானும் நிற்கும் இடமும்.
இவர்களுக்கும், நாகேஷ் நடந்து கொண்டிருந்த இடத்திற்கும், 1 கி.மீ., தூரமாவது இருக்கும்.
இவர்களை எல்லாம் அடுத்தடுத்து எப்படி தொடர்ந்து நடிக்க வைப்பது என்று யோசித்த பின், 'கூண்டிலிருக்கும் கண்ணாடி வழியாக விளக்கைப் போடுகிறோம், உடனே நடியுங்கள்...' என்று விளக்கினேன்.
விளக்கை போட்டோம். ஆனால், வெயிலின் வெளிச்சம், கண்ணாடி மேல் விழுந்ததால், உள்ளேயிருந்த வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. அதனால், 'நடிகர்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; படப்பிடிப்பு முடிந்ததும், நண்பர்கள் வந்து சொல்வர்...' என்ற செய்தியை, நடிகர்களிடம் சொல்ல சொல்லி, ஒருவரை அனுப்பினேன். இதைத் தவிர அவர்களை தொடர்பு கொள்ள வேறு எந்த வசதியும் எங்களுக்கில்லை.
ஏறத்தாழ மூன்று மணி நேரம், அவர்கள் அனைவரும் திரும்பத் திரும்ப நடித்துக் கொண்டே இருந்தனர். நாங்கள் இருந்த கூண்டுக்குப் போடப்பட்டிருந்த கண்ணாடி மிக அழுத்தமானது; வளைந்ததும் கூட. இதன் வழியாகப் பார்ப்பவர்களுக்கு, சில சமயம் உருவங்கள் உருமாறிக் காட்சியளிக்கும். இந்தக் கண்ணாடி வழியாகத்தான், படம் பிடிக்க வேண்டும். அதிலும், 'ஜூம்' லென்சின் உதவியால் படமாக்க வேண்டும்.
அதைத் திரையில் பார்ப்பது வரையில், எந்த உத்தரவாதமும் இல்லை. இருந்தும் துணிவோடும், நம்பிக்கையோடும் அக்காட்சியை பதிவு செய்தோம்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
courtesy dinamalar
real life super star one & only our god mgr