சரி.சரி.திருத்தி விடுகிறேன். ஞான தேசிகன் என்கிற ராசய்யா.
Printable View
கோ,
'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை' பாடல் ரொம்பநாள் தேடிக்கொண்டிருந்த ஒன்று. அந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல் இலங்கை வானொலியில் பயங்கர ஹிட். வரிகள் அத்தனை அர்த்தம் பொதிந்தவை.
இங்கே சொந்தபந்தங்களை விட்டு, குறிப்பாக இளம்மனைவியைப்பிரிந்து கிடைத்தற்கரிய இளமையை மலேசிய, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் காசுக்காக மலிவு விலையில் விற்றுக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நம் சொந்தங்களுக்காக எழுதப்பட்ட வரிகள்...
"இன்று வரும் நாளை வரும்
சென்றாலும் திரும்பிவரும் செல்வம்
இளமை சென்று முதுமை வந்தால்
காதல் இசை பாடாது உள்ளம் - இதை
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை"
http://sim06.in.com/aaf0eb1d05d36a65...26701db0_m.jpghttps://encrypted-tbn2.gstatic.com/i...jPm6OekTi9879n
A .V ரமணன் இன் musiano இசைகுழு 1970 1980 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று .
இதே போன்று மேலும் சில இசை குழுகள் காமேஷ் ராஜாமணி (இவரின் மோனிகா ஒ மை டார்லிங் கரவன் பாடல் மிகவும் பிரபலம் -நடிகை கமலா காமேஷ் இவரின் மனைவி); சிவராஜ் ஆனந்த் ; அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் தலைமையில் இயங்கி வந்தன.
இவர்களுக்கு என்றே சில ரசிக கண்மணிகளும் இருந்தனர். மெல்லிசை கச்சேரி முடிந்த பிறகு அதை பற்றி பேசி மேலும் அடுத்த நாள் செய்தி தாள்களில் விமர்சனம் எல்லாம் எழுதும் அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தன. 1970 கால கட்டங்களில் வெளி வந்த ஹிந்தி தமிழ் படங்களின் பிரபலமான பாடல்களை எல்லாம் மேடை ஏற்றி கொண்டு இருந்தனர் .RD பர்மன்,ஷங்கர் ஜெய் கிஷன் ,மெல்லிசை மன்னர் போன்றோரின் பாடல்களை கூடுமானவரை அது போலவே வாசித்து நல்ல வருமானம் ஈட்டி வந்தனர் அதில் ரமணின் musiano குழு முன்னணி வகித்து வந்தது . மேடை நிகழ்சிகளில் இணைந்து பாடிய உமா அவர்கள் திரு ரமணனையே திருமணம் செய்து கொண்டு பின்னர் உமா ரமணன் ஆகி திரு ரமணன் உடன் இணைந்து பல பாடல்களை பாடுவார்கள் பின்னாட்களில் உமா ரமணன் அவர்கள் இளையராஜா இசையில் பல பிரபல சினிமா பாடல்களை பாடி உள்ளார்கள் .
என்னுடைய நல்ல நினவு ஒன்று பதினாறு வயதினிலே வந்த புதிதில் ஒரு மேடை நிகழ்ச்சியில் உமா ரமணன் அவர்கள் 'செந்தூர பூவே ' பாடலை ஒரு வெள்ளை நிற சேலை ஒன்று கட்டி கொண்டு பாடி கொண்டு இருந்தார்கள். அப்போது கேட்டு கொண்டு இருந்த ரசிகர்கள் 'வெள்ளை மயில் வெள்ளை மயில் ' என்று கூவி கொண்டு விசில் அடித்து கொண்டு இருந்தார்கள். அந்த பாடல் முடிந்த உடன் திரு ரமணன் அவர்கள் 'தயவு செய்து இப்படி behave செய்வதை நிறுத்துங்கள் . இப்போது பாடலை பாடியவர் என் மனைவி . 16 வயதினிலே படம் வந்து நிறைய பேரை கெடுத்து விட்டது '
என்று கூறினார்
பாடகர் திலகம் குரலுக்கு ஒரு பாடகர் வருவார். மற்றபடி ஸ்ரீநிவாஸ்,பாலா ,கிஷோர்,ரபி,ஜேசுதாஸ் போன்ற எல்லா பாடகர்களின் பாடல்களை ரமணன் அவர்களே பாடுவார் .
"தேகான ஹாய் ரே சோச்சனா " (धेकाना है रे सोचना ) பாடல் மிகவும் பிரபலமான பாடல் .கிஷோர் பாடுவது போலவே பாடுவார் .
ரசிகர்கள் once மோர் கேட்பது வழக்கம். அந்த கால கட்டங்களில் CD ,mp 3 ,USB என்று எல்லாம் இல்லாத போது இந்த இசை குழு நிகழ்சிகள் மிக சிறந்த பொழுது போக்கு ஆக இருந்தது
2000 கால கட்டங்களில் சன் தொலை காட்சியில் ரமணின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று .
திரு AV ரமணன் அவர்கள் நீரோட்டம்,காதல் காதல் காதல்,சம்சாரம் என்பது வீணை போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் .மேலும் படங்களுக்கு இசை அமைத்தாரா என்று நினைவு இல்லை
நீரோட்டம் 1980 கால கட்டத்தில் வெளி வந்த விஜய்காந்த்,சத்யராஜ்,பஞ்சகல்யாணி புகழ் திருமுருகன் நடித்த படம்.
இந்த படத்தில் ரமணன் உமா ரமணன் உடன் இணைந்து பாடிய ஒரு பாடல் - சிலோன் ரேடியோ அடிகடி ஒளிபரப்பிய பாடல்
'ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிகடி துடிக்குதே ஏனோ தெரியலே
இது பருவ கால நினைவுகளின் பழக்கம் அல்லவா'
http://www.raaga.com/play/?id=374667
காதல் காதல் காதல் ரமணன் அவர்கள் ஹீரோஆக நடித்து தேசிய நடிகை தீபா கதாநாயகி என நினைவு இதயம் பேசுகிறது மணியன் தயாரிப்பு என நினைவு இதிலும் ஒரு பாடல் 'காதல் காதல் காதல் என்று கண்கள் சொன்னது என்ன " ரமணன் பாடியது பாடலின் இடையே தீபாவின் அழகை வர்ணித்து சில வசனங்கள் எல்லாம் வரும்
GKrishna ji..
இதோ உங்களுக்காகவே ரமணன், தீபா நடிப்பில் ஏ.வி.ரமணன், உமா ரமணன் குரல்களில்.. "காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன"
http://youtu.be/Fhlxva2vbvQ
இன்றைய ஸ்பெஷல் (41)
'அடிமைப் பெண்' திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்கள் பாடிய புகழ் பெற்ற பாடலான
http://i1.ytimg.com/vi/v_AsLwqY1Dw/0.jpg
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்.
பாடலை அனைவருக்கும் தெரியும்.
இப்போது இன்றைய ஸ்பெஷலாக ஒலிக்கும் பாடல். 'இதிலென்ன ஸ்பெஷல்?... கேட்டுப் புளித்துப் போன பாடல்தானே' என்று யாரோ புலம்புவது போல் என் காதுகளுக்கு கேட்கிறது.
கண்டிப்பாக ஸ்பெஷல்தான்.
சில பேருக்கு தெரிந்திருக்கலாம். பல பேர் அறிய வாய்ப்பில்லை.
இந்தப் பாடலை நமது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் பாடி இருப்பதுத்தான் இன்றைய ஸ்பெஷலாக வருகிறது.
எம்ஜிஆர் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட பாடல். ஆனால் படத்தில் இப்பாடல் வராமல் ஜெயா பாடும் பாடல் காட்சியே இடம் பெற்றது.
கீழே நீங்கள் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலைக் கேட்கலாம் 'தாயில்லாமல் நானில்லை... தானே எவரும் பிறந்ததில்லை'... பாடல் காட்சிக்கு பதிலாக.
ஜெயா பாடும் பாடலுக்கும், சௌந்தரராஜன் அவர்கள் பாடும் பாடலுக்கும் அவ்வளவு வித்தியாசம்.
http://i.ytimg.com/vi/6F3DsjWK-Ok/hqdefault.jpg
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அன்னையைப் பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள்
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியம் இருந்து காப்பாள்
தன ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்.
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
http://www.youtube.com/watch?feature...&v=45xYI3BuY7I
ஜெயா மேடம் பாடும் பாடல் இதோ.
http://www.youtube.com/watch?v=f0tsvDUlzzg&feature=player_detailpage
டியர் கிருஷ்ணாஜி,
70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.
ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.
ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...
கிருஷ்ணா சார்!
ஏ..வி.ரமணன் பதிவு அருமை. நான் கடலூர்காரன் ஆனதால் இங்கெல்லாம் லோக்கல் மெல்லிசைக் குழுக்களே அதிகம். ஆனால் கடலூர் பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவிற்கு வருடாவருடம் ராட்சஸி வந்து மேடைக் கச்சேரி செய்து அமர்க்களப்படுத்தி விட்டுப் போய் விடுவார். 'ராஜபார்ட் ரங்கதுரை' உஷா நந்தினி மாதிரி மொத வரிசையில் நான் இருப்பேன் ஒவ்வொரு வருடமும். சும்மாவா வெறி பிடித்தது?
'ஆட்டக் கடிச்சான்... மாட்டக் கடிச்சான்', 'நான் ரோமாபுரி ராணி'
அப்படின்னு தொடையைத் தட்டி ராட்சஸி ஆரம்பிக்கும் போது கடலூரே சும்மா குலுங்கும் இரவு ஒரு மணிக்கு.
ஆஹா! இப்போது அப்படி ஒரே ஒரு வாய்ப்புக் கிட்டாதா?