-
சண்டைப் பாடல்கள்.
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 11
எதிரிகளுக்கு 'டிஷ்யூம்... டிஷ்யூம்' கொடுத்துக் கொண்டே கதாநாயகர்கள் பாடவும் செய்தால் ரசிகர்களுக்கு, அது தரை டிக்கட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ஏனைய ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். அந்த மாதிரி டைப் பாடல்கள் இரண்டுதான் இன்றைய தொடரில் வலம் வரப் போகின்றன.
http://i1087.photobucket.com/albums/...%20-2/vb-1.jpg
'எங்க பாப்பா' படத்தில் அடியாட்களுக்கு 'கும் கும்' குத்துக்கள் கொடுத்துக் கொண்டே, அப்படியே தமிழின் வலிமையையும், பெருமையையும் பாடலின் வழியே உணர்த்தி, ரவிச்சந்திரன் எனர்ஜி கலந்து தரும் கார சூப் பாடல். தமிழின் பெருமையை சண்டைக் காட்சியின் வழியாகவும் பறை சாற்றலாம் என்பதை வில்லன்களை சாத்து சாத்து என்று சாத்துவதன் மூலம் பாடலாசிரியர் காட்டியிருப்பார். அருமையான வரவேற்கத் தகுந்த கற்பனையே. நடன அசைவுகளில் எதிரிகளுக்கு ரவி பஞ்ச் பண்ணும்போது தியேட்டர் உற்சாகமாகும். பாரதியின் 'கடுகடு'முகம், (அதைவிட அவர் அணிந்திருக்கும் அந்த குட்டை கவுன்):) ஓ.ஏ.கே தேவரின் கோணங்கித்தனம் எல்லாம் ரசிக்கக் கூடியதே.
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு'
சாட்டையால் அடிப்பது போல் தமிழ்ப் பாட்டாலே எதிரிகளை அடிப்பாராம் ரவி. ரவி அவர் ஸ்டைலில் வளைந்து நெளிந்து ஆடி அடிக்கும் 'டிஷ்யூம் 'அடிகள் இடி மாதிரி கேட்கும். 'மெல்லிசை மன்னர்' இடியிசை டிஷ்யூம் மன்னராகியிருப்பார்.
'வல்லினம் மெல்லினம் நல்ல இடையினம்
என்னும் கம்பை எடுத்து
வெண்பா விருத்தம் என்னும் விதவிதமாகிய
சாட்டை தொடுத்து'
ஆஹா! தமிழ் எதற்கெல்லாம் அழகாகப் பொருந்துகிறது! சொல்லால் விளாசவும் பயன்படுகிறது. கம்பால் விளாசவும் பயன்படுகிறது.
'பட்டணத்துத் தமிழில் நைனா என்றால்
அர்த்தமென்ன கூறட்டுமா?
பயில்வான் மொழியில் 'வஸ்தாத்' என்றால்
பலமென்ன காட்டட்டுமா?'
ரவியின் சுறுசுறுப்பு டாப். சும்மா கீழே விழுந்து உருண்டு, புரண்டு, டைவ் அடித்து கால்களால் கிடுக்கிப் பிடி போட்டு ரகளை ஆக்ஷன் செய்வார்.
பாடல் முடிந்த பிறகு கூட நம் காதுகளில் 'டிஷ்யூம்' சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற பிரமை இருக்கும். யாரையாவது வம்புக்கு இழுத்து நாலு சாத்து சாத்தலாம் போல கைகளும், மனதும் துருதுருவென்று இருக்கும்.:) எனர்ஜி டானிக் பாடல்.
12.17 to 15.30 வரை இந்தப் பாடலைக் கண்டு 'அடிக்கலாம்'.:)
https://www.youtube.com/watch?featur...&v=GmMxsMBy-Nw
அதே மாதிரி இன்னொரு பாடல்.
'எங்கள் தங்கம்' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஸ்டன்ட் செய்து கொண்டே வில்லன் குரூப் ஆட்களை புரட்டி எடுத்து, ஆடிப் பாடி, தன்னுடைய ஸ்டைலில் கொள்கைகளையும் பாடலுடன் சேர்த்து, அத்துடன் பகிரங்கமான அரசியலையும் கலந்து தந்து, அவரது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க விட்ட பாடல். அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எழுதப்பட்ட பாடல் பின்னால் படம் எடுத்தவருக்கே வினையானது.:) எல்லாம் 'மாறி'ப் போனது. என்னைப் பொருத்தவரை மிகத் துணிச்சலான ஒரு கொள்கை முழக்க பாடல் இது.
http://i.ytimg.com/vi/aM1adZVzcFQ/hqdefault.jpg
எம்.ஜி.ஆர் அவர்கள் 1967-ல் (January 12) எம்.ஆர்.ராதாவால் கழுத்தில் சுடப்பட்டு, குண்டடிப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்து வந்ததை இப்பாடலில் அமர்க்களமாக காட்சிக்குத் தக்கபடி பயன்படுத்தி இருப்பார்கள். எம்.ஜி.ஆர் இறந்து விட்டாரென்று நினைத்து குண்டுமணி, என்.எஸ்.நடராஜன் குரூப் அவரை சவப் பெட்டியில் அடைத்து அடக்கம் பண்ண வர, அங்கு திடீரென எம்.ஜி.ஆர் உயிருடன் எழுந்து அடியாட்களை திக்குமுக்காடச் செய்து அவைகளை தர்ம சாத்து சாத்தி பாட ஆரம்பிப்பார்.
'நான் செத்துப் மொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைத்து
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா'
'சிலுவையில் ஏசு மறைஞ்சாரு'
http://lh3.ggpht.com/-k2WwyXGexEU/T_...5B3%25255D.jpg
என்ற சரண வரிகளில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு மரத்தில் சாய்ந்தபடி கழுத்துக்குப் பின்னால் தோள்களில் ஒரு கம்பை இரு கைகளாலும் சுமந்தபடி நிற்கும் போஸ் அருமையாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தக் காட்சியில் பின்னியிருப்பார். காமெரா சாய்ந்தபடி எம்ஜிஆரை குளோஸ்-அப் ஷாட்டிலிருந்து லேசாக லாங் ஷாட்டிற்கு காட்டியபடி நகரும். மாருதிராவும், அமிர்தமும் இணைந்து கலக்கியிருப்பார்கள். இந்த இடத்தில் நம்மையும் மீறி நம்முள் ஒரு பரிதாப உணர்வு பெருகுவதை இக்காட்சியில் நம்மால் உணரமுடியும்.
சவப்பெட்டி காட்சியாதலால் மிக புத்திசாலித்தனமாக அறிஞர் அண்ணாதுரை அவர்கள் இறந்ததும் அவரது உடலை சந்தனப் பெட்டியில் வைத்து மரியாதையுடன் அடக்கம் செய்ததை அழகாக இந்தக் காட்சியுடன் இணைத்து சம்பந்தப்படுத்தி காட்டி இருப்பார்கள். அண்ணாவை காட்டி அவரை நினைவுபடுத்தியது போலவும் ஆயிற்று... எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கை முழக்கத்தையும், அண்ணாவை அவர் மறவாமல் நினைவு கூர்வதையும் காட்டியது போலவும் ஆயிற்று. கட்சிப் பிரச்சாரப் பாடல் போலவும் ஆயிற்று... தனக்கு நேர்ந்த சோதனையான சொந்த அனுபவங்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தியது போலவும் ஆயிற்று. ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார் எம்.ஜி.ஆர்.
'சந்தனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத் தமிழில் சொல்லி சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா'
பாடலில் வருவது போலவே எம்.ஜி.ஆர் அவர்கள் சாதித்துக் காட்டியதை சொல்லவும் வேண்டுமோ!
ஆனால் 'ஓடும் ரயிலை இடைமறித்து, அதன் பாதையில் தனது தலை வைத்த' தலைவருக்கே எம்.ஜி.ஆர் பின்னால் த(க)லைவலி ஆனது எதிர்பாராத அரசியல் நிகழ்வு.
'கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா'
'எதிர்த்தால் வாலை நறுக்குமடா' என்று வாலி வாக்கின்படி சொன்னபடியே வாலை நறுக்கியும் காட்டிவிட்டார் எம்.ஜி.ஆர். இந்தப் பாடலில் அவர் துடிப்பும், ஆட்டமும் நன்றாக இருக்கும். பாடகர் திலகம் மிக அருமையாக கம்பீரம் மிளிர இப்பாடலைப் பாடி அசத்தியிருப்பார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ! கொள்கைப் பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு எடுத்துக் காட்டான துணிச்சல் மிகுந்த பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dFEom-DYsuU
-
திரு. வாசு சார்,
ரொம்ப நன்றி சார், பிரமாதம். அருமை சார். நன்றி. எங்கள் தங்கம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் இதையடுத்து, ‘ஒருநாள் கூத்துக்கு மீசைய வெச்சான்...’ பாடலும். வாலை நறுக்குமடா... வரிகளில் பின்னால் வாலை நறுக்குவது போல தலைவரின் ஆக்க்ஷன் சூப்பர்.
ஓடும் ரயிலை இடைமறித்து... வரிகளை திரு.கருணாநிதியை நினைவுபடுத்தும்படி எழுதச் சொன்னதே மக்கள் திலகம்தான். ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கு அடுத்த வரி வராமல் வாலி திணறிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திரு.கருணாநிதி ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்..’ என்று அந்த வரியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
பாட்டை பார்த்த மக்கள் திலகம் இந்த வரிக்காக வாலிக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். இதை சொல்லியது திரு. கருணாநிதி என்று வாலி பதில் சொன்னதும் மக்கள் திலகம் சிந்தனையில் ஆழ்ந்தாராம். பின்னர்தான், திரு.கருணாநிதியை நினைவுபடுத்தும் வகையில், கொள்கைப் பாடலில் வரிகளை சேர்க்கச் சொல்லியிருக்கிறார். அதன் விளைவே ‘ஓடும் ரயிலை இடைமறித்து...’
இதை வாலி பலமுறை கூறியிருந்தாலும் எழுத்துபூர்வமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் துக்ளக்கில் எனக்குள் எம்.ஜி.ஆர். என்ற தொடரில் தெரிவித்துள்ளார். அது பின்னர் குமரன் பதிப்பம் சார்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. (என்னிடம் இருக்கிறது) அதில் இந்த தகவல் உள்ளது.
நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். வேலை அதிகம். மக்கள் திலகம் திரியிலேயே கூட எல்லாருக்கும் சூப்பர், நன்றி என்று பதிவுகள் போட்டு ஓட்டுகிறேன். டீ குடிக்க கிளம்புவதற்கு முன் எதேச்சையாக நோட்டம் விட்டால்............... என்னை இழுத்து வந்து விட்டீர்கள். ரொம்ப நன்றி சார். கையை கொடுங்கள்............. ம்... ஓ.கே. ஒன்றுமில்லை, கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
என்ன ஆயிற்று? கிருஷ்ணா, சின்னக் கண்ணன், ராஜேஷ்ஜி, ரவி சார், கல்நாயக், மதுஅண்ணா யாரையும் காணோம்? நானே எழுதிக் கொண்டிருக்க எனக்கே ரொம்ப போராக இருக்கிறது. ராகவேந்திரன் சாரும் பங்கு கொள்ளவும். அனைவரும் கொஞ்சம் வந்து விட்டு சென்றால் தேவலை. என்னப்பா இந்த 'மதுர' த்துக்கு வந்த சோதனை...ம்?....
-
VASU SIR ...
JUST FOR A CHANGE ... OLD PAPER CUTTINGS ...
http://i61.tinypic.com/2ahi52h.jpg
-
-
-
-
http://photos.filmibeat.com/ph-big/2...5046662974.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நமது மதுர கானம் திரியின் சார்பில் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளால் அவர் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதோ தனிக்குடித்தனம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்..
புஷ்பராகம் ... ஈஸ்வரி எஸ்.பி.பாலா வின் குரலில் துள்ளலாட்டம் போட வைக்கும் பாடல் ஒய்.ஜி.மஹேந்திராவுக்காக
https://www.youtube.com/watch?v=OMwdvIzMuT8
-