http://i39.tinypic.com/107vybk.jpg
Printable View
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்களின் பேட்டியின்
பதிவுகள் அருமை .
திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு,
இந்த அறிவு ஜீவிகளை போல எவ்வளவோ பேர் இன்னும் இந்த புவியில் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்...என்னமோ கௌண்டமணி செந்தில் கதைபோல கதைவிடும் இந்த அற்ப புத்திக்காரன் யார் ?
இவனும் இவனுடைய யோகானந்த்-லேனா செட்டியார் கதை என்ற பெயரில் இவன் கூறும் பிதற்றலும் !!!
......
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு
தங்களுடைய திரியில் இன்று தங்கள் பதிவிட்டிருக்கும் நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம் அவர்கள் தன மனதில் உள்ள எண்ணங்களை உரைத்த பதிப்பு, மிகவும் நன்று !!!
தக்க தருணத்தில் 2அவது முறையாக வெளியிட்டுளீர்கள்.
தங்களுடைய முதல் பதிவு சில நாட்களுக்கு முன்பு, குமுதம் ஆசிரியருக்கு நடிகர் திலகம் கண்டனம் தெரிவித்த பதிவு. அதுவும் நன்று...!
யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய பதிவு என்றுமே இருந்ததில்லை. ஆனால் சமீபகாலமாக ஒரு சிலர் வேண்டுமென்றே வம்புக்கிழுத்து சண்டையிடும் நோக்கத்தோடு பதிவு செய்கிறார்கள். அதற்க்கு தூபம் போடும் வகையில் சில நல்லவர்களும் அந்த பதிவுகளுக்கு "ஆமாஞ்சாமி " போடுகிறார்கள் ! .
ஒரு அளவு வரை பொறுமையாக இருக்கலாம். ஆனால், நம் பொறுமையை இயலாமை என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காகதான் சில சந்தர்ப்பங்களில் பதிலுக்கு நாமும் பதிவு இடும் நிலை உருவாகிறது.
உங்களுடைய இந்த பதிவு ஒன்று போதும்...!
நடிகர் திலகத்தின் மேல் மக்கள் திலகம் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் இதன் மூலம் வெளிச்சத்திருக்கு வந்துள்ளது..!
இரு தரப்பினர்க்கும் இது ஒரு நல்ல விஷயம்.
திரு.mgr அவர்களே நடிகர் திலகம் அவர்களின் சிறப்பை பற்றி இந்த விழாவில் பலர் முனிலையில் கூறியிருப்பது மிகவும் சிறந்த ஒரு உதாரணம்.
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவன் வாக்கை மெய்பிக்கும் வகையிலும், "உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம்" என்று வாய்க்கு வாய் வெறும் கூற்றோடு நிருத்திகொள்பவர்கள், மற்றவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுபவர்கள், அவர்கள் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படி நிஜமாகவே நடகிரார்களோ இல்லையோ....நான் அவரை அந்த ஒரு சிலரை போல தெய்வமாக நினைப்பவன் அல்ல.....இருந்தாலும் எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ...!
இதற்க்கு மேலும் "இயற்கை" "செயற்கை" என்று மற்றவர் இகழ் பாடுவார்களேயானால் அவர்கள் திரு MGR அவர்களை அவமானபடுதுவதோடு மட்டும் அல்லாமல், அவரையே ஏமாற்றுவதற்கும் சமமாகும் என்பது தான் உண்மை.
மீண்டும் ஒருமுறை தங்களுடைய பதிப்பிற்கு கோடானுகோடி நன்றி...எஸ்வி சார் !