http://i62.tinypic.com/ht776p.jpg
Printable View
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
இந்த மக்களிடமிருந்து என்னைப் பிரித்திடவோ, என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்த சக்தியாலும் முடியாது
ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
நான் உங்களில் ஒருவன். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவன். என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.
அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.
இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.
அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.
அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.
ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.
வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.
பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.
பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.
கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.
திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா-சில
பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!
மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்
courtesy - ettavathu vallal book written by manavai pon manikkam