இன்று இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/2mfd69u.jpg
Printable View
இன்று இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/2mfd69u.jpg
தினத்தந்தி =02/10/2016
http://i66.tinypic.com/6gzsaq.jpg
தினமணி கதிர் -திரைக்கதிர் -2/10/2016
http://i63.tinypic.com/11w9aog.jpg
தமிழ்நாடு முழுவதும் ரிக்க்ஷாக்காரருக்கு ஆரவார வரவேற்பு. தலைநகர் சென்னையில் நேற்று காலை சத்தியம் திரையரங்கு அரங்கு நிறைந்தது. மாலை காட்சி தேவி பாரடைஸ், அபிராமி மெகாமால் திரையரங்கு ஹவுஸ் புல் ஆனது. திருச்சி ஊர்வசி, திருப்பூர், சூர்யா மற்றும் ஜோதி திரையரங்கமும் நிரம்பி வழிந்தது.
இத்தனைக்கும் விநியோகஸ்தர் தரப்பில் விளம்பரத்தில் இருந்து தியேட்டர் நிர்ணயம் வரை பல்வேறு சொதப்பல்கள். பல ஊர்களில் படம் வெளியாகவில்லை. பல இடங்களில் போஸ்டர்கள் கூட சரியாக ஒட்டவில்லை. இருந்தும் அபார வரவேற்பு. 1973-ல் போஸ்டரே ஒட்டாமல் வெளியாகி வெற்றி பெற்றவர்தானே நம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.
முக்கியமாக புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையை பற்றி சொல்லியாக வேண்டும். ரிக்க்ஷாக்காரர் தோன்றும்
மீனாட்சி மற்றும் அலங்கார் தியேட்டர்கள் நேற்று ரத்தத்தின் ரத்தங்களால் நிரம்பி வழிந்தன.
சென்ட்ரலில் போன மே மாதம் வெளியாகி ஒருவாரத்தில் ரூ.1 லட்சம் வசூல் செய்து குடியிருந்த கோயில் சாதனை செய்தது. (இத்தனைக்கும் 2015 பொங்கலன்று இதே சென்ட்ரலில் வெளியானது. வெறும் 18 மாதத்தில் மீண்டும் ரூ.1 லட்சம் வசூலித்து சாதனை.) ஜூலை மாதம் வெளியான ஆசைமுகம் ஒரு வாரத்தில் ரூ.96,000/- (இத்தனைக்கும் கருப்பு வெள்ளை படம்) வசூல் ஆனது. இந்த வசூல் விவரங்கள் சென்ட்ரல் தியேட்டர் மேலாளர் பாலமுருகனிடம் விசாரித்து நமது திரியிலும் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி மதுரை அலங்காரில் ரகசிய போலீ்ஸ் 115 திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ.1,60,000/ வசூல் செய்து சரித்திர சாதனை படைத்தது. விநியோகஸ்தர் மூலம் தகவல் அறிந்து நமது திரியிலும் அப்போதே பதிவிட்டுள்ளோம்.
சரித்திர சாதனை படைக்கும் தலைவரின் இந்த வெற்றிகளில் நாம் நெஞ்சுயர்த்தி இறுமாந்திருக்கும் நிலையில் அதே அலங்கார் மற்றும் மீனாட்சி தியேட்டர்களில் ரிக்க்ஷாக்காரர் வெளியாகி புதிய சாதனை படைத்து வருகிறார். இரண்டு தியேட்டர்களும் நேற்று நிரம்பி வழிந்தன. உண்மையான வசூல் விவரம் விசாரித்து பின்னர் வெளியிடப்படும்.
மீனாட்சியில் நேற்று அலப்பறை தாங்க முடியவில்லை. முக்கியமான காட்சிகளிலும் மக்கள் திலகம் பேசும் பஞ்ச் வசனங்களின் போதும் வார்த்தைகளே புரியாத அளவுக்கு ஆரவாரம். நமக்குத்தான் அவர் என்ன சொல்கிறார் என்பது மனப்பாடம் ஆச்சே.
அதிலும் ரிக்க்ஷாவில் இருந்து சிலம்பம் சுற்றும் சண்டைக்காட்சியில் ஒரு நிலையில் குச்சியை தூக்கி எறிந்துவிட்டு இரண்டு கைகளை நீந்துவது போல அசைத்து பறந்து வருவது போல மக்கள் திலகம் வரும் இந்தக் காட்சியில்
http://i65.tinypic.com/5a2vbc.jpg
கைதட்டலும் விசிலும் காது கிழிந்துவிட்டது.
பத்மினியை ராமதாஸ் வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் அவரை தடுக்கும் மக்கள் திலகத்தை ‘இரு உன்னை பாத்துக்கறேன்’ என்று ராமதாஸ் மிரட்டுவார். தேங்காய் சீனிவாசன் ராமதாசின் மப்ளரைப் பிடித்து, ‘டேய் சோமாறி, எங்க வாத்தியார பாத்துக்கறேன், பாத்துக்கறேன்னு சொன்னவன்லாம் அட்ரஸ் இல்லாம போயிட்டான்டா, குழந்தைப் பையன் நீ, போடா ’ என்று சொல்லும் இந்தக் காட்சியில்
http://i65.tinypic.com/ax07sp.jpg
ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து நின்று ஆடியது.
புரட்சித் தலைவரின் சாதனையை முறியடிக்க புரட்சித் தலைவரால் மட்டுமே முடியும் என்பது மறுபடியும் உறுதியாகியுள்ளது. என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டை எங்கள் மதுரை என்பது மீண்டும் நிரூபணம். மதுரையம்பதி மக்களுக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பாக நன்றி.
http://i67.tinypic.com/dvh4wj.jpg
மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் -புதுப்பொலிவுடன் தமிழகத்தில் திரை அரங்குகளில் ரசிகர்களை பரவசப்படுத்திய காட்சிகள் பற்றியும் , மக்கள் திலகத்தின் கோட்டைகளின் பெருமை பற்றியும் வசூலில் என்றென்றும் நிரந்தர சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் மதுரைவீரனின் படங்கள் மறு வெளியீட்டில் நிகழ்த்திய வசூல் பட்டியல் பற்றியும் மிக அழகாக பதிவிட்ட மதுரை மாநகர் திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி நடைபோட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களான, எனது சுமார் 15 நண்பர்கள் சென்னைக்கு சென்று ஞாயிறு மாலைக்காட்சி (நேற்று) தேவி பாரடைசில் படத்தை கண்டு களித்துள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸின் போது பெற்ற அதே இன்ப அனுபவத்தைப் பெற்று 25 வயது குறைந்து இளமைப் பொலிவுடன் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். சும்மாவா? பார்த்தது மக்கள் திலகத்தின் படமாயிற்றே.
45 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரிலீஸ் ஆன அதே தேவி பாரடைஸில் மறுவெளீயீடு ஆகியிருப்பது இன்னும் சிறப்பானது. 45 ஆண்டுகளுக்கு முன் நானும் அதே தேவி பாரடைஸில்தான் படத்தை பார்த்தேன். சில பணிகள் காரணமாக என்னால் நேற்று சென்னைக்குப் போய் படம் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் என் மனமெல்லாம் தேவி பாரடைஸிலேயே இருந்தது. மனம் மட்டும் இல்லை. காதும் அங்குதான் இருந்தது. தேவி பாரடைஸில் இருந்து அவ்வப்போது நேர்முக வர்ணைனையை கேட்டேன். படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பரை முக்கிய காட்சிகளின் போது செல்போனை ஆன் செய்து வைத்துவிடச் சொன்னேன். மக்கள் திலகத்தின் குரலை கேட்டு மகிழ்ந்தேன்.
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்கள் சொல்லியிருப்பது போல மதுரை கதைதான் திரையிட்ட எல்லா திரையரங்குகளிலும் நடந்துள்ளது. மதுரையில் பொங்கிப் பெருகிய உற்சாக வெள்ளம் ரிக்க்ஷாக்காரன் திரையிட்ட எல்லா அரங்குகளிலும் காட்டாறாய் ஓடியுள்ளது. எனக்கும் மக்கள் திலகத்தின் சில வசனங்களை கேட்க முடியாத அளவுக்கு (செல்போனில்) ஒரே ஆரவாரம்.
மறைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து, அதிலும் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழித்தும் ஒரு நடிகரின் படத்தை ரசிகர்களும் பொது மக்களும் திரண்டு வந்து பார்க்கிறார்கள், படம் அரங்கு நிறைகிறது, அந்த நடிகரின் படம் சாதனை படைக்கிறது என்றால் அது மக்கள் திலகத்தின் படங்களுக்கு மட்டுமே கிடைத்த பெருமை. இப்போது வெளியாகும் படங்கள் 45 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு காணுமா? என்றால் நிச்சயம் இருக்காது.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம். ரிக்க்ஷாக்காரன் படம் சன் லைப் தொலைக்காட்சியில் குறைச்சலாகப் பார்த்தாலும் 300 முறையாவது போட்டிருப்பார்கள். தேவி பாரடைஸில் டிரைலர் வெளியீட்டு விழா நடந்த அன்றும் (21-8-2016, ஞாயிற்றுக்கிழமை) விழா நடந்த அதே நேரத்தில் இரவு 7 மணிக்கு ரிக்க்ஷாக்காரன் படம் ஒளிபரப்பானது. அதன் பிறகும் ஒரு முறை காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது. அதிலும் மக்கள் திலகத்தின் படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே பெரும்பாலும் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ரிக்க்ஷாக்காரனும் அப்படித்தான்.
இவ்வளவு முறை ஒளிபரப்பாகியும் தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டு திரையரங்கங்கள் நிரம்பிவழிகிறது என்றால் அதுதான் மக்கள் திலகத்தின் மகிமை.
இதை எழுதும்போது எனக்கே 25 வயது குறைந்துவிட்டது என்றால் பாருங்களேன். மக்கள் திலகத்தின் மகிமை அப்படி.
http://i63.tinypic.com/4v2q7d.jpg
நன்றி எஸ்வி அய்யா, சூப்பர்.
நேற்று முன்தினம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு சன் லைப் டிவியில் மக்கள் திலகத்தி்ன் தேடி வந்த மாப்பிள்ளை படம் ஒளிபரப்பானது. அப்படியும் ரிக்க்ஷாக்காரன் படம் திரையிட்ட இடங்களில் திருவிழாக் கோலம் கண்டுள்ளது.
http://i66.tinypic.com/21o0f2u.png
சென்னை கொண்டாட்டங்களை பதிவிட்டதற்கு நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி. செல்போனில் படம் எடுப்பவர் புரட்சித் தலைவரின் பேரன் பிரதீப் போல தெரிகிறார். அவர்தானா?