-
கவிதையும் பாட்டும்..7
உலகம் சுற்ற ஒருபிள்ளை
..ஊர்மேல் போகா ஒருபிள்ளை
கலகம் நடக்கக் கனலுடனே
..ககன வெளியில் பறந்தேதான்
பழனி மலையில் நின்றந்தப்
..பாலன் கோபம் கொண்டதனால்
இளமை என்றும் அடைந்தததுவே
..எல்லாக் குன்றும் அவன் இடமாய்..
முருகனை நினைத்தால் கொஞ்சம்மனம் உருகத் தான் செய்கிறது.. ஆனால் இந்த ஆண்ட்டி எவ்வளவு உற்சாகமாகப் பாடுகிறார்..
http://www.youtube.com/watch?feature...&v=ihnxliKdHYc
வாசு சாரின் வழிப்பிள்ளையார் க்குப் பின்னால் இந்தப் பாட்டு ஒரு எதேச்சையாய் அமைந்த நிகழ்வு..ம்ம் அண்ணனுக்குப் பின்னாலே தானே தம்பி…:) (இது எனக்கும் பொருந்திடுச்சே.. வா பி நான்..)
-
கலைவாணி பதம் பணிந்து, ஜேகேபி பாடல் தந்து, தூரலில் வரும் சுகம் வேறெங்கும் இல்லை நடிகர் திலகத்தைத் தவிர என்று பதிலுரைத்து, 'தேகம் என்னவாகும்?' என்ற ரேவதியை கண்டு களித்து, இந்தக் கால இளைஞனாய் அதற்கு நன்றியும் சொல்லி, சித்தத்தில் உள்ளதை சத்தமில்லாமல் இறக்கி இங்கு வைத்து, 'பாட்டுவரும் சின்னக் கண்ணன் கவிதைகளைப் படித்தால்' என்று பரிபூர்ணமாக உணர்ந்து, ஏக்கம் மிகக் கொண்ட காதலர்கள் கண்ட 'இந்த நிலவை நான் பார்த்தால்' அது எனக்கென பிறந்தது போல் அல்லவா இருக்கும்?
'கவிதையும் கானமும்' என்ற தலைப்பு இன்னும் நன்றாக இருக்குமே சி.க. எனிவே தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. மெச்சினேன். பாராட்டினேன். நன்றி கொண்டேன். அதை உரைக்கவும் செய்கிறேன். தமிழ்ப் புலவரே! நீர் வாழி!
-
வினோத் சார்,
நன்றி! அரிய பேப்பர் கட்டிங்குகள் தந்து ஆச்சர்யப்பட வைத்ததற்கு. ஆசை மனைவியை அறிந்தவர் இல்லை. நானொரு கை பார்க்கிறேன் என்று களத்தில் குதித்து விட்டீர்களே எஸ்வி சார். புன்னகையின் புயல் படத்தின் பெயரா அல்லது கட்டுரைத் தலைப்பா?
-
கலை சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! அப்பா! என்ன ஒரு பக்தி எம்.ஜி.ஆர் அவர்கள் மேல்! இந்த விஷயத்தில் நடிகர் திலகம், மக்கள் திலகம் இருவருமே கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் இருவருக்கும் இருந்த, இருக்கின்ற ஆத்மார்த்தமான ரசிகர்கள் போல வேறு எவருக்குமே இல்லை....இருக்கப் போவதுமில்லை என்பதே நிஜம்.
-
சி.க
இன்று மதிய ஷிப்ட். நாளை சந்திப்போம்.
-
ஹையாங்க்.. இன்னிக்கு முழுக்க விளையாடலாம்னு நினைச்சேன் இப்படியாங்க்ணா ஆஃபீஸ் போறது வாசுசார்.. தாங்க்ஸ்.. பட் ட்யூரிங்க் த கோர்ஸ் ஆஃப் த டெ இன்னும் எழுதுவேன்னு நினைக்கிறேன்.. நன்றி அகெய்ன்..
-
கவிதையும் கானமும்..8
உலகம் அறியாப் பெண்ணாய் இருந்தேன்
..உணர்வில் மாற்றம் பருவம் தரவும்
பழகும் பழக்கம் பலவாய் மாற
..பார்வை பேச்சில் பண்பைக் கற்றேன்
அழகாய் நடிப்பு ஆடல் பாடல்
..எல்லாம் வரவும் சினிமா ஆர்வம்
வழக்கம் போல நெஞ்சுள் வரவும்
..வாகாய்ப் படத்தில் நடித்தேன் வென்றேன்..
புதிய நடிகை சிரித்தே சொல்ல
..புருவம் நெறித்தே கெள்வி ஒன்று
பதில்தான் முடிந்தால் சொலவும் ஆனால்..
..பாவை உமக்குப் படிப்பும் பாட்டும்
புதிது என்றே இயக்கம் சொன்னார்..
..பூவை சிலிர்த்தே எழுந்தாள் சொன்னாள்
விதிதான் இதுதான் போதும் பேட்டி..
..வணக்கம் சொல்லிச் சென்றாள் வெளியே.
ம்ம் புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்கவந்தாள்..புதுமுக மாது அனுபவம் ஏது வயதோ பதினெட்டு. ந.தி துள்ளல்+ கிண்டல் ப்ளஸ் டான் ஸ்..அண்ட் கே ஆர்வி... (கேஆர்வி ப்ரெக்னெண்ட்டாமே இந்தப் படத்தின் போது?)
http://www.youtube.com/watch?feature...&v=9onlEEX8Qyg
-
-
-
கறுப்பு பணம்
திரு. வாசு சார், நீங்களே எழுதுவதால் உங்களுக்கு போரடிப்பதாக கூறியுள்ளீர்கள். உங்களுக்கு போரடிக்கக் கூடாது சார். அப்புறம் எங்களுக்கு போரடிக்கும்.
திரு.சின்னக் கண்ணன் சார், கவிதையும் கானமும் பாடல்கள் சூப்பர். உங்கள் தமிழுக்கு மட்டுமல்ல, எவ்வளவுதான் தமிழ் கற்றிருந்தாலும் வாசு சார் கூறிய ஆலோசனையை கேட்டு, ஈகோ இல்லாமல் ‘கவிதையும் பாட்டும்’ என்று இருந்ததை ‘கவிதையும் கானமும்’ என்று மாற்றிக் கொண்ட உங்கள் பண்புக்கும் நான் அடிமை.
திரு.ராகவேந்திரா சார். ‘என் கடமை’யில் இரவினிலே என்ன நினைப்பு எனக்கும் மிகவும் பிடித்த மெலடி. அதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். பாடலையே போட்டு விட்டீர்கள். நன்றி.
-----------------
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் 2 லட்சம் கோடி பதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்போம் என்று மார் தட்டியவர்களுக்கும் பெப்பே காட்டி கறுப்பு பணம் என்ற மாயமானின் மர்ம ஓட்டம் தொடரத்தான் செய்கிறது. கறுப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய விவரங்களை பெறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் அறிவித்தார். இங்கிருந்து ஒரு குழுவும் சுவிட்சர்லாந்து சென்று வந்தது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கறுப்பு பண மீட்பு தொடர்பாக விசாரணையை கண்காணிக்க நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முஸ்தீபு காட்டினாலும் கறுப்புபணத்தை மீட்க முடியாது என்று தெரிந்து விட்டது. ‘ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள். சும்மா விவரம் கேட்டால் தர முடியாது. மீன்பிடிப்பது போல இந்திய அதிகாரிகள் வந்துபோவதில் அர்த்தமில்லை’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார் மும்பையில் பேட்டியளித்த இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் லினஸ் காஸ்டல்மல். அப்படியானால், அந்நாட்டுடன் எப்படி ஒப்பந்தம் ஏற்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்தார்? அந்த ஒப்பந்தம் செல்லாதா? இதுவும் கறுப்புப் பணம் போலவே மர்மம்தான். இந்தியாவிலேயே நிறைய கறுப்புப் பணம் உள்ளதாக காஸ்டல்மல் கூறியிருப்பது ஹைலைட்.
50 ஆண்டுகளுக்கு முன் கவியரசர் கண்ணதாசன் கறுப்புப் பணம் என்ற படத்தை எடுத்தார். அதில் பெரிய மனிதர் தணிகாசலம் என்ற பாத்திரத்தில், அந்த பாத்திரத்துக்கேற்ற கண்ணியம் + மிடுக்குடன் நடித்திருந்தார். பெரிய மனிதராக வெளியுலகுக்கு காட்சியளித்தாலும் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவராக இருப்பார். கிளைமாக்சில் கோர்ட்டில், ‘வறுமையின் கொடுமையால் இந்த நிலைக்கு வந்ததாகவும், நான் கொள்ளையடித்தது இரண்டரை கோடி. ஆனால், இந்த நாட்டிலே உள்ள கறுப்புப் பணம் இரண்டாயிரம் கோடி’ என்று கவியரசர் கூறுவார். 50 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால் இப்போது எவ்வளவு கோடி கறுப்பு பணம் நாட்டில் இருக்கும்? தலையை சுற்றுகிறது.
திமுகவில் இருந்து விலகி ஈ.வி.கே.சம்பத்துடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கிய கவிஞர், படத்திலும் சம்பத் கெட்அப்பிலேயே நடித்திருப்பார். அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம், மக்கள் திலகம், திரு.கருணாநிதி என்று எல்லாரோடும் கவியரசர் முரண்பட்டார். ஆனாலும், அவர் கவியரசர் என்பதில் யார்தான் முரண்பட்டார்? அதனால்தான், தன்னை கடுமையாக தாக்கியவர் என்றபோதும், புரட்சித் தலைவர் முதல்வரானபின் அவரை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார்.
கறுப்புப் பணம் படத்தில் அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப கவியரசர் வடித்த பாடல் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் இப்போதும் அரசியல், சமூக சூழலுக்கேற்ப என்னமாய் பொருந்துகிறது? கதைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடும் இந்தப் பாடலுக்கும் பொருந்தாமல் இருக்குமே என்பதற்காக, ஷுட்டிங்கில் ஒரு நடிகை பாடி, நடிப்பதாக புத்திசாலித்தனமான காட்சி. அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் வரிகளுக்கு ஈஸ்வரியின் எகத்தாளக் குரல் மேலும் மெருகு. பாடலுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவையே இல்லை. கவியரசரே தெளிவாக பிட்டு பிட்டு வைத்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த அந்தப் பாடல்:
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி (கையிலே பணமிருந்தால்)
போராடச் செல்பவனே வீராதி வீரனடி
போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி
மார் தட்டிப் பேசி விட்டால் மன்னாதி மன்னனடி
மன்னிப்புக் கேட்டு வந்தால் மக்களுக்கே தொண்டனடி (கையிலே பணமிருந்தால்)
அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி
அல்லாமல் கொள்கைகளை சொல்பவனே துரோகியடி
முடிந்ததை சுருட்டுவதே முக்காலி கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால் புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்