-
http://i68.tinypic.com/zx78k0.jpg
ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே- 9 எல்லா நுணுக்கங்களும் அறிந்த எம்ஜிஆர்! Posted by: Shankar Updated: Monday, October 3, 2016, 12:44 [IST]
Read more at: http://tamil.filmibeat.com/anandha-t...-9-042545.html
-கவிஞர் முத்துலிங்கம் திரைப்படப் பாடலாசிரியர் மேனாள் அரசவைக் கவிஞர்
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன் எம்.ஜி.ஆர். படத்திற்கு இரண்டாவதாக நான் எழுதிய படம் 'ஊருக்கு உழைப்பவன்.' இது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தபடம். இது பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்' படம் இந்தக் கம்பெனி தயாரித்ததுதான். பெரிய கம்பெனி தயாரிக்கிற படம் அதனால் நன்றாக எழுது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறினார். கூறியதோடு மட்டுமல்ல அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் பணம் கொடுத்தார். அப்போது அவர் பக்கத்தில் வித்துவான் லட்சுமணன், சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். இன்னொருவரும் இருந்தார். அவர் யாரென்று நினைவில் இல்லை.
பாடல் எழுதி ஒலிப்பதிவானவுடன் அந்தக் கம்பெனியில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். "ஏற்கெனவே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே... நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி எம்.ஜி.ஆர் கொடுத்தாரே," என்றேன். "நாங்கள் கொடுக்கவில்லையே...," என்றார்கள். அதன்பிறகுதான், எம்.ஜி.ஆர். கொடுத்தால் நான் வாங்க மறுத்துவிடுவேன் என்பதால் கம்பெனிக்காரர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லி அவர் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எத்தகைய மாமனிதர் அவர் என்பதை நினைத்து மலைத்துப் போய்விட்டேன். இன்றைக்கு நடிகர்களில் யாரேனும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?
அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குக் கணவராக நடிப்பார் எம்.ஜி.ஆர். கதைப்படி ஒரு பெண்ணுக்குத்தான் அவர் உண்மையான கணவர். இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த தன் சொந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதை எடுத்து அடக்கம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவனாக நடிக்கிறாரே அந்தப் பெண் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருகிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. குழந்தையை வாழ்த்திப் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தன் சொந்தக் குழந்தை இறந்துவிட்டதே அதை நினைத்துப் பாடுவாரா? இந்தக் குழந்தைக்கு வாழ்த்துப் பாடுவாரா? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பாடல் வருகிறது.
இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாகப் பாடவேண்டும். "எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது," என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர். வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக்ரோட்டில் இருந்தது. விசுவநாதன் அண்ணன் டியூன் போட நான் பாடல் எழுதினேன்.
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது நினைக்கும்போது பாசமென்னும் அலையடிக்குது என் - கண்ணுக்குள்ளே குழந்தையென்னும் மலர் சிரிக்கின்றது என் - கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்கின்றது எது - நடக்கும் எது நடக்காது இது - எவருக்கும் தெரியாது எது - கிடைக்கும் எது கிடைக்காது இது - இறைவனுக்கும் புரியாது" இதுதான் நான் எழுதிய முதல் பல்லவி.
அங்கிருந்த எல்லாருக்கம் இந்தப் பல்லவி பிடித்துவிட்டது. அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் பல்லவி பிரமாதம் என்று பாராட்டினார். விசுவநாதன் அண்ணனும் நன்றாக இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார். என்றாலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு குறைந்தது மூன்று பல்லவியாவது எழுதவேண்டுமல்லவா. ஆனால் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத் தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன் என்று வெளியே சென்றேன். தெற்கு போக்ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன்.
காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரி வேலன் ஆகியோர் இருந்தனர். இந்த வாரம் 'தென்னகம்' பத்திரிகையில் நீங்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார். எம்.ஜி.ஆரைப் பற்றி எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். உலா, எம்.ஜி.ஆர் அந்தாதி ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.
அதனால் ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து 'பிள்ளைத்தமிழ்' இலக்கியம் எழுதுகிறோம். எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது. வேகமாகச் சென்று அண்ணன் விசுவநாதனிடம் எழுதிக் காட்டினேன்.
நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் நீயே ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார். வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்துவிட்டார். அந்தப் பாடல் இதுதான், "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு பிள்ளைக் காகப் பாடுகிறேன் மல்லிகைபோல் மனதில் வாழும் மழலைக் காகப் பாடுகிறேன்" சரணம்.. நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க காஞ்சிமன்னன் புகழ்போலே காவியமாய் நீ வாழ்க கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க"
இதுபோல் இன்னொரு சரணமும் எழுதிவிட்டேன். இன்னொரு பல்லவியும் எழுதிவிடு. அதற்கும் மெட்டுப் போடுவோம் என்றார் எம்.எஸ்.வி. "தேவ லோக வாசலிலே - ஒரு தெய்வக் குழந்தை நிற்கிறது பூவில் வாழும் தேவதைகள் - பசும் பொன்போல் வாழ்த்துச் சொல்கிறது" என்று எழுதினேன். அதற்கும் மெட்டுப் போட்டவுடன் மறுநாள் சத்தியா ஸ்டுடியோவில் 'நவரத்தினம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பித்தோம். அப்போது ஏ.பி. நாகராஜன், நடிகை லதா, ப. நீலகண்டன் ஆகியோர் இருந்தனர். பாடலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்தக் காட்சிக்கு "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது" - என்ற பல்லவி பொருத்தமாக இருக்கிறது என்றார். இயக்குநர் ப. நீலகண்டன் 'தேவலோக வாசலிலே' என்ற பல்லவி இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்றார்.
பாடலைப் போடுவதற்கு முன்பு இந்தப் பாடல் எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் பாடலைப் போட்டுக் காண்பித்தார். அதனால் அவர்கள் அந்தக் கருத்தைச் சொன்னார்கள். நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்ற பல்லவிதான் பாப்புலராகும். ஆகவே இதையே வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.
அவர் சொன்னதுபோல் இந்தப் பாடல்தான் அதில் பிரபலமானது. அவரைப் போலே பாடலைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது. சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த ஒரே நடிகர் அன்றைக்கு அவர்தான்.
நான் எழுதிய இந்தப் பாடல் புலவர் புலமைப்பித்தன் பெயரிலும், புலமைப் பித்தன் எழுதிய "அழகெனும் ஓவியம் இங்கே - உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே" என்ற பாடல் என் பெயரிலும் இசைத்தட்டில் தவறாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி இது முத்துலிங்கம் எழுதிய பாடல். இசைத் தட்டில் தவறாக வேறொருவர் எழுதியதாக இடம் பெற்றுவிட்டது. ஆகவே முத்துலிங்கம் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும் என்று வானொலி நிலையத்திற்கு எழுதியது. நானும் போய்க் குறிப்பிட்டு பெயரை மாற்றச் சொன்னேன்.
சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கும் இதேபோல் பிரச்சினை இருந்தது. என்பெயரை அந்தப் பாட்டில் குறிப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோல் இளையராஜா இசையில் கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில், "இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது" என்ற பாடல் நான் எழுதிய பாடல். இது கங்கை அமரன் எழுதியதாகத் தவறாக இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் கங்கை அமரன் பாட்டே எழுதவில்லை. நானும், புலமைப்பித்தனும், இளையராஜாவும்தான் எழுதியிருந்தோம். எப்படி கங்கைஅமரன் பெயர் அதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. அதையும் சிங்கப்பூரில் என் பெயரில் மாற்றினேன். இப்படிச் சில கவிஞர்கள் பாடல் வேறு சில கவிஞர்கள் பெயரில் இன்னும் ஒலிப்பரப்பப்பட்டு வருகிறது. (இன்னும் தவழும்)
நன்றி ஒன் இந்தியா தமிழ் இணையதளம்
-
http://i65.tinypic.com/rwlatv.jpg
மேலே முந்திய பதிவில் உள்ள முத்துலிங்கம் அவர்கள் கட்டுரையில் ஒரு சிறப்பு விடயத்தை குறிப்பிட்டு சொல்லவேண்டி இருக்கிறது. அதில் இருந்தே புரட்சித் தலைவர் அவர்களின் மாண்பு புரியும்.
முத்துலிங்கம் அவர்கள் முதன்முதலில் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு வரும்போது அவரது செலவுக்காக புரட்சித் தலைவர் பணம் கொடுத்திருக்கிறார். அதை வாங்க மறுத்த முத்துலிங்கம் பாடல் எழுத வாய்ப்பு கேட்டுள்ளார். இதை முத்துலிங்கமே பல முறை கூறியுள்ளார். இந்த தொடரிலும் முதலில் சொல்லியிருக்கிறார். (ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே – ஒன் இந்தியா தமிழ் இணையதளம்)
முத்துலிங்கம் செலவுக்கு கஷ்டப்படக் கூடாது. அதே சமயம், தான் பணம் கொடுத்தால் வாங்க மாட்டார் என்பதற்காக கம்பெனியில் அட்வான்ஸ் கொடுத்தார்கள் என்று சொல்லி அவருக்கு புரட்சித் தலைவர் பணம் கொடுத்திருக்கிறார்.
தான் கொடுத்தது மற்றவர்களுக்கு தெரியாமல் உதவி செய்பவர் புரட்சித் தலைவர் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால், வாங்கியவருக்கே அதைக் கொடுத்தது புரட்சித் தலைவர்தான் என்பது தெரியாமல் பணம் கொடுத்திருக்கிறார் இந்த எட்டாவது வள்ளல். முதலில் இருந்து ஏழு வள்ளல்கள் கூட இப்படி உதவியிருப்பார்களா என்று தெரியவில்லை.
எட்டாவது வள்ளல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க.
-
அழியாத நாயகன் .....அமுதசுரபி நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1971 தமிழக சட்ட மன்ற தேர்தலில் மக்கள் திலகத்தின் தீவிர பிரச்சாரத்தால் திமுக ஆட்சியை இரண்டாவது முறையாக தக்க வைத்து கொண்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை பரங்கிமலை சட்ட மன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் .தேர்தலுக்கு பின்னர் 29.5.1971 அன்று மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் திரைக்கு வந்து வசூலில் பிரமாண்ட சாதனைகள் புரிந்தது .
45 ஆண்டுகள் பின்னர்
2016 தமிழக சட்ட மன்ற தேர்தலில் புரட்சித்தலைவரின் இயக்கம 7 வது முறையாக தமிழக ஆட்சியை பிடித்தது வரலாற்று சாதனை .அது மட்டுமா ?
1971ல்வசூலில் சாதனைகள் படைத்தது 1972ல் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதை பெற்று தந்த ரிக்ஷாக்காரன் 45 ஆண்டுகளாக திரை அரங்குகளிலும் , ஊடகங்களிலும் ,தொடர்ந்து காண்பிக்கப்பட்டு 4 தலைமுறை மக்களும் ரசிகர்களும் இடை வெளி இல்லாமல் கண்டு களித்த காவியம் . நவீன தொழில் நுட்பத்தில் அகன்ற திரையில் ரிக்ஷாக்காரன் 30.9.2016 அன்று திரைக்கு வந்து தமிழகமெங்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
தமிழக அரசியலிலும் திரை உலகிலும் அழியாத நாயகனாக நிலைத்து விட்ட மக்கள் திலகமே
உன்னை வெல்வாரும் இல்லை.......வென்றாரும் இல்லை ..வெற்றி வேந்தனே
.
-
மக்கள் திலகம் அவர்கள் தான் நடித்த படங்கள் ஏற்படுத்திய திருப்புமுனை பற்றி குறிப்பிட்ட
படம் .ரிக்ஷாக்காரன் - 1971
'' இந்த படம் வெற்றி பெறாது . ஓடாது என்றெல்லாம் ஆரூடம் சொன்னவர்கள் அத்தனை பேருமே
சேர்ந்து ஒரே குரலாக மாற்றி சொன்னார்கள் - இது மிகப்பெரிய வெற்றி படம்தான் என்று ''.
இது வரை நான் நடித்து வெளிவந்த அத்துணை படங்களின் எல்லாச் சாதனைகளையும் முறியடித்ததோடு மட்டுமன்றி தமிழக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூலை பெற்ற படம்
கிடையவே கிடையாது என்று சொல்ல வைத்த பெருமை இந்த ரிக்ஷக்கரனுக்கே உரியது .
எத்தனை எதிர்ப்புகள் .. எத்தனை கேலி சொற்கள் ... எத்தனை இடைஞ்சல்கள் ... எத்தனை மாதங்கள் .
இப்படி எத்தனை எத்தனையோ விபரீத சோதனைகளின் சுழற்சியில் சிக்கியும் , மனம் தளராது
துணிவோடு எதிர் நீச்சல் போட்டு , படத்தை சிறப்பாக எடுத்தாரே திரு ஆர் .எம் .வீரப்பன் அவரை
நான் முதலில் பாராட்டவேண்டும் ....
இன்று எனக்கு அனைத்திந்திய சிறப்பு கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தவர் திரு ஆர் .எம் .வீரப்பன் .அவர்களே ஆவார் . அவருடைய சரியான சிந்தனை என்னை ரிக்ஷாக்காரனாக்கியது .
அந்த ரிக்ஷாக்காரன் எனக்கு அனைத்திந்திய புகழை வாங்கி தந்திருக்கிறான் .
http://i67.tinypic.com/9fwegh.jpg
-
-
http://i68.tinypic.com/28hg901.jpg
எம்.ஜி.ஆரின் கவனத்திலிருந்து எதுவும் தப்ப முடியாது-டைரக்டர் பி.வாசு குமுதம் இதழில்.
பி.வாசு டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து முதன் முதலாக எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன் படத்தில் வேலை செய்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆரின் ஒரு பாட்டு படப்பிடிப்பின்போது லிப் மூவ்மென்ட் சரி பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.அவரும் எம்.ஜி.ஆர்.பாட்டுக்கு உதட்டசைவை கவனித்துக் கொண்டிருந்தார்.அப்போது எம்.ஜி.ஆரின் லிப் கொஞ்சம் மிஸ் ஆகியதை கவனித்து அதை எப்படி டைரக்டரிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர். புறப்பட்டு விட்டார்.
பிறகு எம்.ஜி.ஆரிடம் டேக்கில் டிராலி லைட்டா ஷேக் ஆகிடுச்சு என்று கேமராமேன் மேல் பழியைப் போட்டு டைரக்டர் சமாளித்து திரும்ப அந்த வரிகளை மட்டும ரீ டேக் எடுத்தனர்.அந்த வரிகளுக்கு மீண்டும் வாயசைத்து நடித்தார் தலைவர்.டைரக்டர் கட் என்றதும் எம்.ஜி.ஆர் டக்குனு வாசு பக்கம் திரும்பி "என்ன இப்ப ஓ.கே.வா? என்றாரே பார்க்கனும்,உடனே வாசுவிற்கு வியர்த்து விட்டது.
எம்.ஜி.ஆர். வாசுவை அருகில் அழைத்து "நீ என்னை ரொம்ப ஆர்வமா பார்த்துகிட்டு இருந்ததை நானும் கவனித்தேன்.லிப் மிஸ் ஆச்சுனு எனக்கும் தெரியும்.அதை எடிட்டிங்ல சரி பண்ணலாம்.அது தெரியுமா உனக்கு? இதே கவனம் வாழ்க்கையிலே எல்லா விஷயத்திலும் இருந்தா நல்லா வருவே" என தட்டிக் கொடுத்து விட்டு போனார்.
அப்போதுதான் தலைவரின கவனத்திலிருந்து எதுவும் தப்பாது என தான் புரிந்து கொண்டதாக டைரக்டர் வாசு கூறினார்.
நன்றி - வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பக்கம்
-
இந்தப் பதிவை படிக்கும் இதயம் உள்ளவர்கள் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இப்படியும் ஒரு கொடையாளி இருக்க முடியுமா?
மஞ்சுளாவின் பேட்டியை பதிவிட்ட முகநூல் நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/sdgpz4.jpg
புரட்சித்தலைவர் பற்றிய நெஞ்சத்தை உருக்கும் நிகழ்வு :
எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது நடிகை மஞ்சுளா அவரைக் காணச்சென்றார். புரட்சித்தலைவருக்கு நினைவுகள் மிகவும் குன்றியிருந்த நேரம். அதனால் மஞ்ளாவிடம் சைகையில் 'நீங்க யார்? ' நர்ஸா ? என கேட்டார். இதனால் திகைத்த அவர் ' நான் தான் மஞ்சுளா, இந்தியா விலிருந்து' வந்திருக்கேன் என்றார். தலைவர் மறுபடியும் 'நீங்க டீச்சர் தானே' என்றதும் மஞ்சுளா மிகவும் அதிர்ச்சியுற்றார். அருகில் இருந்த ஜானகி அம்மையார் தலைவரிடம் "இது நம்ம மஞ்சுங்க" என்றார். அப்போதும் அவருக்கு நினைவில் வரவில்லை. இதைக் காணச்சகியாத மஞ்சுளா கண்கலங்கினார். சிறிதுநேரம் ஜானகி அம்மையாரிடம் பேசிவிட்டு விடைபெற எண்ணி, எம்ஜிஆரின் அருகே சென்று 'நான் விடைபெறுகிறேன்' என்றதும்...
தலைவர் என்ன செய்தார் தெரியுமா???
'ஒரு நிமிஷம் இருங்க' என சைகை காட்டி தன் தலையணையில் அடியில் இருந்து நிறைய டாலர் நோட்டுக்களை எடுத்து மஞ்சுளாவிடம் கொடுத்து நா குழறியபடி தலைவர் சொன்னது " செலவுக்கு வெச்சுக்கங்க... போகும்போது ஆட்டோவில் போங்க..."... இதைக்கேட்டதும் மஞ்சளா பிரமிப்பும், நெகிழ்ச்சியும் அடைந்து கண்ணீர் விட்டுக் கூறியதாவது :
"எம்ஜிஆர் அவர்களை இந்த உடல்நிலையில் காணும்பொழுது என்னால் தாங்கமுடியல. ஆனால் அதைவிட, 'தனக்கு சுயநினைவு சரியில்லாத அந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மறவாத அந்த மாமனிதரை நினைத்து ஏற்பட்ட பிரமிப்பில் பொங்கிவந்த கண்ணீரை அடக்கமுடியாமல் அழுது தீர்த்தேன்'.
எந்த ஒரு கற்பனைக்கும் எட்டாத செயல் இது. எந்த அளவு தன் இரத்தத்தில் கொடைகுணம் ஊறியிருந்தால் இப்படிச் செய்ய இயலும்..."கர்ணன் கூட தலைவரின் கால்தூசு தானோ" என்று தோன்றுமளவுக்கு தலைவரின் ஒவ்வொரு செயலும் இருந்திருக்கின்றது.
எட்டாவது வள்ளல் அல்ல நம் மக்கள்திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்.
நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்
-
http://i68.tinypic.com/2qrzjsx.jpg
1984ம் வருடம் இதே நாளில்தான் (அக்டோபர் 5-ம் தேதி) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். பின்னர், அமெரிக்கா சென்று அங்கிருந்தே தேர்தலை சந்தித்து யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையாக அமெரிக்காவில் படுத்துக் கொண்டே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஜீரணிக்க முடியாதவர்கள் அனுதாப ஓட்டு என்று கூறினால் கூட, எத்தனை பேருக்கு இதே போல ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டால் மக்களிடம் அந்த அனுதாபமும் ஆதரவும் கிடைக்கும்? செத்துப் போனால் கூட கிடைக்காது. அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்று 3ம் முறையாக ஆட்சி அமைத்து புரட்சித் தலைவர் நலமுடன் திரும்பினார் என்பது வரலாறு.
http://i66.tinypic.com/2rcn2fn.jpg
இன்று அதே அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். புரட்சித் தலைவரைப் போலவே மக்களின் பிரார்த்தனையால் மீண்டும் நலமுடன் திரும்பி ஆட்சி நடத்துவார்.
ஏன் என்றால் .......................
http://i68.tinypic.com/i6b71s.jpg
-
http://i66.tinypic.com/2wqsb69.jpg
ஆண்டவரின் அட்டகாச சிரிப்பு. பார்த்தாலே உற்சாகம் பீறிடுகிறது. ஆண்டவர் என்று புரட்சித் தலைவரை நான் வேண்டுமென்று உயர்த்தி சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் ஆண்டவர்தான்.
நமது தெய்வம் தமிழகத்தை மூன்று முறை ஆண்டவர்தான்.
-
http://i65.tinypic.com/2zeezj5.jpg
இன்பக் கனவு நாடகத்தில் புரட்சித் தலைவர் நடித்தபோது எடுத்த புகைப்படம்.