-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உடன்பிறவா அருமைத்தம்பி
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி
[21.7.2001 - 21.7.2013]
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 24
நடிகர் திலகம் குறித்து மக்கள் திலகம்
வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) [பதிப்பாசிரியர் : திரு. எம்.ஜி.ஆர்] : ஆகஸ்ட் 1962
http://i1110.photobucket.com/albums/...27c9d101d6.jpg
http://i1110.photobucket.com/albums/...07e273085a.jpg
http://i1110.photobucket.com/albums/...d81b3781e9.jpg
http://i1110.photobucket.com/albums/...8c3d4a0a9d.jpg
21.7.2013 : 'உலகப் பெருநடிகர்' என முன்னாள் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களாலும், அந்த 'அண்ணாவின் இதயக்கனி'யான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களாலும் வாழ்நாள் முழுவதும் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
இனிய நண்பர் திரு சுப்பு
உங்களின் மன மாற்றத்திற்கு நன்றி .மக்கள் திலகத்தின் நடிப்பு - சண்டை காட்சிகள் -மற்றும் அவருடைய திரைப்பட நுண்ணறிவு
என்று எல்லா துறையிலும் முழு கவனத்துடன் செயல் பட்டதன்
மூலம் அடைந்த வெற்றி , புகழ் இரண்டும் இன்று வரை நிலைத்திருக்கிறது .
அவருடைய பொன் மனம் , மனம் திறந்து பாராட்டுதல் , ஈகை , யார் மனமும் புண் படாமல் நாகரீகமாக பேசிய மக்கள் திலகத்தின் கடந்த கால பேட்டிகள் , உரைகள்
அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது வரலாறு படைத்த உண்மை .
மக்கள் திலகம் திரியில் இனி வரும் பதிவுகளில் மக்கள் திலகத்தின் சிறப்புகளையும் , உங்களுக்கு பிடித்த அவரின்
படங்கள் - பாடல்கள் - தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் .
நட்புடன்
வினோத்
-
இனிய நண்பர் திரு ஷைலேஷ் சார்
ஸ்ரீதரின் ''அன்று சிந்திய ரத்தம் '' [ 1963 ]முதல் நாள் பட பிடிப்பில் எடுக்கப்பட்ட மக்கள் திலகத்தின் ஸ்டில் மிகவும் அருமை .
பதிவிட்ட உங்களுக்கு நன்றி
-
இனிய நண்பர் திரு பம்மலார் சார்
நடிகர் திலகத்தின் நினைவு நாள் பதிவில் மக்கள் திலகத்தின்
கட்டுரையை பதிவிட்டமைக்கு , மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு நன்றி .
நடிகன் குரலில் மக்கள் திலகம் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை . நடிகர் திலகத்தை மனம் திறந்து நீண்டதொரு விளக்கமான கட்டுரை மூலம் பாராட்டி இருப்பது மக்கள் திலகத்தின் பெருமையினை காட்டுகிறது .
அரிய ஆவணம் மூலம் எங்களை பரவசபடுத்திய உங்களுக்கு
நன்றி
நட்புடன்
வினோத்
-
மக்கள் திலகம் அவர்களின் ''நாடோடி '' மிகவும் சீர் திருத்த படம் .
ஜாதி வெறி மூலம் சமூகத்தில் நிலவும் அவல நிலைகளை
அன்றே தெளிவாக கூறிய படம் .
[http://youtu.be/8anhn9hUg2M
-
1978 ம் ஆண்டு தனது கார் ஓட்டுனர் கோவிந்தன் மறைவு இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லும் முதல்வர் புரட்சித்தலைவர்தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை கிருஷ்ணாம்பேட்டை இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்திய மனித புனிதர்.
http://i39.tinypic.com/m9ypar.jpg
courtesy- face book
-
அன்பு நண்பர் திரு. சுப்பு அவர்கள் அறிவது,
தாங்கள் குறிப்பிட்ட கீழ் கண்ட வரிகள் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.
"எப்போது எனது கண்கள் திரு.mgr அவர்கள் பொதுமேடையில் கூறிய இந்த பதிவை பார்த்ததோ, எப்பொழுது திரு.MGR அவர்கள் தான் கூறுவது தனது தாயின் மீது ஆணை என்று சொன்னாரோ அதை படித்தவுடன் அப்பொழுதே முடிவுசெய்துவிட்டேன், அந்த கண்ணியத்தை காப்பாற்ற எனது பதிவை நீக்கி விடுவதுதான் முறை என்று ! ..."
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளில் எங்கள் புரட்சித்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் தங்கள் பதிவுகள் இருக்கும் எனவும், நடிகர் திலகம் திரியில் "மக்கள் திலகம்" பற்றிய சில எதிர்மறையான கருத்துக்கள் பதிவிடும் போது அதையும் ஆட்சேபிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
தங்களிடம் ஏற்பட்ட இந்த மன மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்த எனதருமை உடன்பிறவா சகோதரர் திரு. வினோத் அவரகளுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு சிறு வேண்டுகோள் : மக்கள் திலகம் திரி அன்பர்கள் எவரும் வீணாக வம்புக்கு வருவதில்லை. நடிகர் திலகம் திரியில், எங்களில் பலரும் இதுவரை பதிவிட்டதே கிடையாது. மக்கள் திலகம் திரியில் வந்து, அவரைபற்றியே எதிர் மறையான கருத்துக்களை பதிவிடும் போது, அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில், சில உணர்ச்சிப் பூர்வமான பதிவுகள் இருப்பது இயற்கையே. அதற்காக எவர் மீதும் தாக்குதல் கூடாது. தங்களின் கோபத்தில் எந்த வித நியாமும் இல்லை.
இந்தப் போக்கினையும்,பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளாகிய இன்று முதல், தாங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
http://i40.tinypic.com/dwqplg.jpg
தங்களன்பு சகோதரன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
குறிப்பு :
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களைத் தாக்கி அறிக்கை விடத் தயாராகவிருந்த அப்போதைய நடிகர் ஒருவரை இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எப்படி அந்த அறிக்கை வர விடாமால் செய்தார் என்றும், மறைத்திரு சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஆதவாக கண்ணியவான் பொன்மனச்செம்மல் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய புது தகவல் தொடர்கிறது.
-
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களோடு பட படங்களில் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் படங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறார். அதனால் கோபமுற்ற ராதா அவர்கள், "சிவாஜிகணேசனை சும்மா விட மாட்டேன், அவனை என்ன செய்கிறேன் பார்" என்று பலர் முன் ஸ்டுடியோக்களிலேயே கூறியிருக்கிறார்.
அது சமயம், திருச்சியில் தன் பிறந்த நாளை பெரிய விழாவாக ஊர்வலம் நடத்தி மறைதிரு. சிவாஜி அவர்கள் கொண்டாடினார். அதை எம். ஆர். ராதா கடுமையாக விமர்சித்து, "சிவாஜி என்ன்ன கடவுளா ? ஜனங்களெல்லாம் சிரமப்பட்டு ஊர்வலத்தில் வர, சிவாஜி உயரமான ஒரு இடத்திலிருந்து கையசைப்பாராம், இதையெல்லாம் வளர விடக்கூடாது. அதனால், அவனைக் கண்டித்து கடுமையான அறிக்கை விடப் போகிறேன்' என்று மறைதிரு. ராதா அவர்கள் கூறிய செய்தி, எம். ஆர். ராதா அவர்களின் உதவியாளர் கஜபதி அவர்கள் மூலமாக மக்கள் திலகத்து எட்டியது.
உடனே, நமது பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள், திரு. கஜபதி அவர்களிடம், "இந்த மாதிரி எல்லாம் அறிக்கை விட வேண்டாமென்று அண்ணனிடம் (எம். ஆர். ராதாவிடம்) சொல்லுங்கள். தம்பி கணேசன் இப்போதுதான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார். தன்னை மேலும் முன்னேற்றப் படுத்திக்கொள்ள இது போல் விழாக்கள் நடத்துகிறார்.
நடத்தி விட்டு போகட்டும். தவிர, தம்பி கணேசன் ஒரு தமிழன். அவருக்கு தர்ம சங்கடம் உண்டாக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டாமென்று நான் (எம். ஜி. ஆர்.) சொன்னதாக ராதா அண்ணனிடம் சொல்லுங்கள்.
இது மாதிரி எண்ணங்களை அவர் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று நம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் கூறினார்.
இச்சம்பவம், எம். ஆர். ராதா அவர்களுக்கும், நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கும் நல்லுறவு நிலவி வந்த கால கட்டத்தில் நடைபெற்றது.
http://i41.tinypic.com/a3nh1x.jpg
ஆதாரம் : ப்ரியா பாலு எழுதிய "சாதனை நாயகன் எம். ஜி. ஆர்." என்ற நூலிலிருந்து
தங்கத் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் பெருந்தன்மையை என்னென்று சொல்வது ?
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ======================================
-
Respected esvee Sir, Thank you very much for your wonderful writeup on nadigarthilagam through makkalthilagam's wonderful speech
-
பொதுவாக, நம் தமிழக மக்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவர்கள். ஆழ்ந்த நாட்டுபற்று உடையவர்களும் கூட. தேசிய ஒருமைப் பாட்டில் நன்னம்பிக்கை கொண்டவர்கள்.
இப்படிப்பட்ட தமிழக மக்களிடையே, தான் இணைத்துக்கொண்ட கட்சிக்காக, அதன் கொள்கைகள் காரணமாக, ராணி லலிதாங்கி, காத்தவராயன், அன்று சிந்திய ரத்தம் உட்பட பல பட வாய்ப்புக்களை இழந்தார். சில சரித்திர படங்களிலும், பல சமூகப் படங்களிலும் மட்டுமே நடித்து பெரும் புகழ் பெற்றது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் அந்த தமிழக மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பெற்று, ஆட்சிக்கட்டிலில், அமரர் ஆகும் வரை, வீற்றிருந்தார், நம் ஒப்பற்ற தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இது ஒரு சாதனை என்றால்,
ஒவ்வொரு பொது தேர்தலிலும், முன்னர் பெற்ற சதவிகித வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று, அதிக எண்ணிக்கையில் சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்று, எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றியே பெற்ற ஒரே முதல்வர் என்பது, தமிழக அரசியல் வரலாற்றில், அதை விட பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். http://i44.tinypic.com/bitab5.jpg
குறிப்பு : பொதுவாக, ஒரு முறை ஆட்சியில் இருக்கும் போது, அதிருப்தி பெருகி, அது தேர்தலில் பதிவிடும் வாக்குகளில் பிரதிபலித்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அந்த அதிருப்திக்கும் இடம் கொடுக்காமல், மக்கள் மன மகிழ்ச்சியோடு, முழு திருப்தியோடு, வாக்களித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அவரை அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்த்தினர், என்பது குறிப்பிடத்தக்கது.
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்