From thalaivansivaji.com
Printable View
From thalaivansivaji.com
//அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார்..// ஆக்சுவலா வயற்காட்டினிடை மாடு ஓட்டிய படியோ அல்லது நின்று கொண்டோ+ பின்னணியில் நீலவானம் கொண்ட வண்ணப் படம் பேசும் படத்திலோ பொம்மையிலோ பார்த்த நினைவு..வெகு ஜோரான ஸ்டில்..பார்த்ததும் படம் பார்க்க வேண்டும் என்றும் நினத்தேன்..ஆனால் அந்தக் கால கட்டத்தில் நான் வெகு சின்னப் பையன் ஆனதால் படம் எனக்குப் புரியவில்லை..தொடாதேன்னு சொன்னவுடனே சோகமா ஏன் பாட்டுப் பாடணும்(படம் முடிச்சதும் மறு நாளோ என்னவோ பாட்டுப் புத்தகம் கிடைத்தது- அண்ணா வாங்கினார்னு நினைக்கறேன்.. அதை வைத்து வரிகள் மனப்பாட்ம செய்து பாடியும் பார்த்திருக்கிறேன் - புரியாமலேயே)
பிற்காலத்தில் அதே தேவி தியேட்டரில்( ரீரன் வந்தது என நினைக்கிறேன்._ அல்லது மீனாட்சியில் 11 மணி ஷோவோ நினைவில்லை..பார்த்த போது இன்னும் ந.தியைப் பிடித்திருந்தது..ஆனால்..கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வினைத் தவிர்த்திருக்கலாம்..அதுவும் முத்துராமன், விஜயகுமாரி - பாத்திரப் படைப்பில் அவலம் என ஒரு கட்டுரையே எழுதலாம்..
மல்லியம் ராஜகோபால் கடைசியில் வி.எஸ் ராகவன் கையில் ந.தி அடிவாங்கும் காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.. கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகு ஹீரோயின் புடவையில் கொழுக் மொழுக் கென சாப்பிடாமலேயே வருவதைத் தவிர்த்திருக்கலாம்..சின்னப் பண்ணை நாகேஷிற்கு இன்னும் நிறைய நகைச்சுவை சீன்கள், அவர் ஏன் ந,திக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்பதை இன்னும் தெளிவாக்கியிருக்கலாம்..இன்னும் நிறைய க்கலாம்கள் ..
முதல் முதல் பார்த்த போது சரி ஹீரோ ஹீரோயின் படம் முடிந்த பிறகும் கூட இவ்வளவு நேரம் ஏன் கட்டிப் பிடிச்சுக்கறாங்க்ம்மா எனக் கேட்க..சும்மா வாடா வீட்டுக்குப் போலாம் என பதில் வந்ததாய் நினைவு :)
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
பாபு- 1971.
சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.
உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.
சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.
பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.
பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.
நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.
பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.
தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)
சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.
*ராகுலின் சுனாமி பதிவுகளுக்கு இடையிலும் , முரளியின் "அந்த நாள் ஞாபகம்" எழுப்பும் சத்தத்திற்கு சற்றே வெளியேயும் , கோபாலின் மே 1 - சுவையான விருந்துக்கு நடுவேயும் மனம் தளராது என்னுடைய இந்த சுவையான அலசலை பதிவிடுவதில் பெருமை படுகிறேன் . -
அலச போகும் படம் *" பந்த பாசம் " - அருமையான கருத்துக்கள் , அழகான கதை , பாடல்கள் , நடிப்பு , கதையுடன் சேர்ந்த நகைச்சுவை , எதிர்பாராத**திருப்பங்கள் , அற்புதமான போதனைகள், சரியாக , ஒத்துழைக்கும் சக நடிகர்கள் , நடிகைகள் , விரசம் இல்லாத பகுதிகள் , இரட்டை அர்த்தம் இல்லாத வசனங்கள், கண்களுக்கு அதிக சுவையூட்டும் ஜோடிகள்***இவை அனைத்தும் நிறைந்த ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க ஆசை படுகிண்டீர்களா ? அதுவும் black & white இல் - *நீங்கள் பார்க்க வேண்டிய படம் - பந்த பாசம் - *
நீங்கள் அன்னை தந்தையிடம் மிகுந்த பாசத்தையும், மரியாதையையும் வைத்து இருப்பவரா ? உங்கள் குழந்தைகள் *உங்கள்*மாதிரியே , பாசத்தையும் , பண்பையும் உங்களிடம்*காட்ட வேண்டுமா - அழைத்து செல்லுங்கள் இந்த படத்திற்கு - அண்ணன் தம்பி உறவையும் , அவர்களின் அன்னை தந்தைக்காக அவர்கள் செய்யும் தியாகத்தையும் , குடும்ப கௌரவத்தை காப்பாத்த அவர்கள் ஏற்றுகொள்ளும் பழிகளும் உங்களை குறைந்தது மூண்டு மணி நேரம் கட்டி போட**வைக்கும் . இனி படத்தை பற்றி ஆராயும்**முன் கீழ்கண்ட sub title லில் *படத்தை*அலச விரும்புகிறேன்*
Part 1 : *படத்தின் release யை பற்றியவைகள்*
Part 2 : *படத்தின் கதை சுருக்கம்*
Part 3 : படத்தின் சிறப்புக்கள்*
Part 4 : படத்தின் சில குறைகள்*
Part 5 : *நடிப்பும் , நடிகர்களும் - ஒரு சிறப்பு கண்ணோட்டம்*
Part 6 *:படத்தின் பாடல்கள் - ஒரு சிறப்பு பார்வை*
Part 7 : படத்தின் *சில ஆவணங்கள்*
Part 8 : *படத்தை பற்றி இந்த திரியின் சில ஜாம்பவான்களின் கருத்துக்கள்*
இனி ஓவ்வொரு part யையும் பார்க்கலாம்*
Part 1 :*படத்தின்*release*யை*பற்றியவைகள்*
இந்த படம் NT யின் 82வது படம் - 1962இல் வெளிவந்தது - அந்த ஆண்டில் வெளிவந்து வெற்றிகண்ட படங்கள் மொத்தம் 9.*
பார்த்தால் பசி தீரும் - இந்த படத்தில் தொடர்ந்த வெற்றி , வெற்றிக்கு ஒரு நிச்சய தாம்பூலம் செய்துவிட்டு , வளர்பிறையாகி , படித்தால் மட்டும் போதுமா என்று கேள்வியை எல்லோர் மனதிலும் எழுப்பி , பலே பாண்டியா என்று எல்லோராலும் பாராட்டு பெற்று , நிச்சயதார்த்தம் செய்த அந்த கைகளுடன் வடிவுக்கு வளைகாப்பும் செய்துவிட்டு , செந்தாமரையாக புன்னகைத்து , பந்த பாசத்தை பேணி காத்து ஆலய மணியாக வெற்றியின் சத்தத்தை உலகெங்கும் NT கேக்கவைத்த ஆண்டு 1962.- இந்த ஆண்டுக்கு இன்னும் ஒரு பெருமை உண்டு –*
இந்த வருடத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் திலகம் அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நாட்டின் நயாகரா நகரம் அவரை ஒரு நாள் மேயராக பதவியளித்து கௌரவித்தது. இந்த கெளரவம் அளிக்கப்பட்ட முதல் இந்திய கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.*
Date of Release : 27-10-1962
Banner : Shanti films
Heroines for NT : Devika , Chandrakantha ( for a brief)
நடிகநடிகையர் :
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்கா ராவ், ஜே.பி.சந்திரபாபு, சாவித்திரி கணேஷ், தேவிகா, எம்.வி.ராஜம்மா, சந்திரகாந்தா, லட்சுமி பிரபா, சுகுமாரி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம், கொட்டாப்புளி ஜெயராமன், கே.எம்.நம்பிராஜன், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் சிவாஜி நாடக மன்றத்தினர்.
Music : V&R
Dialogue : Valamburi Somanathan
Director : A Bhimsingh
Part 2 : *படத்தின் கதை சுருக்கம்*
பார்த்திபன் - NT ;*
சரவணன் : GG *;*
தந்தை : S .V ரங்காராவ்
தாய் : எம்.வி.ராஜம்மா
மனோன்மணி : தேவிகா (அண்ணன் - NT யின் ஜோடி)
பூங்குடி - சாவித்திரி (தம்பி -GG யின் ஜோடி)
பார்த்திபனும் , சரவணனும் அண்ணன் தம்பி - பெண்ணின் பெருமை , பாவமன்னிப்பு இந்த படங்களில் GG தம்பியாக நடித்தவர் , இதில் அண்ணனாக வருகிறார் - அதற்க்கு ஏத்த பாச உணர்ச்சி , கடமை , எதிலுமே குறைவைக்கவில்லை . இருவரும் ஒரு தொழிலதிபரின் செல்வந்த பிள்ளைகள் - இருவருமே மேல்படிப்புக்காக , வெளிஊரில் உள்ள காலேஜில் கடைசிவருட படிப்பில் கவனம் செலுத்துகிண்டார்கள் - தம்பியின் படிப்பின் கவனத்தில் காதலும் சேர்ந்து விடுகின்றது - அண்ணன் படிப்பதுடன் கதை கட்டுரை எழுதுவதிலும் பல பரிசுகள் பெறுவதிலும் தன்னை ஈடுபடுத்திகொள்கிறான் - ஒரு தெளிந்த நீரோடை போல படம் ஓடிகொண்டுருக்கும் - இப்படியே சென்று கொண்டிருந்தால் நமக்கும் சுவை குறைந்து விடும் என்பதால் படத்தில் சில திருப்பங்களை உருவாகின்றன .
இவர்களின் தந்தை முதலீடு செய்திருந்த பேங்க் தீடீரென்று திவாலாகி விடுகின்றது - வாழ்க்கையே சூனியமாகி விடுவதுபோல ஒரு வலி - ஒரு , கார் ,பங்களா - வசதியான பணக்கார வாழ்க்கை பறிபோகும் அபலம் - அடுத்த பக்கம் , படிக்கும் பிள்ளைகள் - இவர்களின் வாழ்க்கைக்கும் ஒரு பெரிய கேள்விகுறி - வந்த வலி அவரை ஒரு பக்கம் செயல் இழந்து விட செய்கின்றது - கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்கவே , பிள்ளைகளுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் வித்து விடுகின்றார் - படிக்கும் பிள்ளைகளுக்கும் உடனே வரவும் என்று சொல்ல தயக்கம் - எல்லாவற்றையும் வித்தும் ஒரு கடன்காரருக்கு மட்டும் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை - Rs 50000/- கடனுடன் ஒரு promissory note எழுதி கொடுத்துவிடுவார் .
தாய், தந்தைக்கு தெரியாமல் பிள்ளைகளை உடனே வரும்படி letter போடுகிறார் - trunk call லில் மட்டுமே பேசும் தந்தை , முதல் முறையாக வரும்படி letter இல் தெரிவித்தது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆச்சிரியத்தையும் , கேள்விக்குறியும் எழுப்புகின்றது - அவர்களுக்குள் படித்து முடித்தபின் , பெற்றோர்களை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , எப்படியெல்லாம் உட்காரவைத்து சேவை செய்ய வேண்டும் என்று ஆரோக்கியமாக விவாதித்து கொள்கின்றனர் - சென்னை வந்து சேர்ந்தவுடன் அவர்கள் கண்டகாட்சி - சொந்த வீடு பரி போகிவிட்டது , வாடகை வீடு , உட்கார வைத்து அழகு பார்த்து மரியாதையை செய்யவேண்டும் அப்பாவிற்கு என்று சொன்னவர்கள் உண்மையில் ஈசி chairஇடம் அடைக்கலம் ஆன தந்தையின் இயலாமையை கண்டு கதறுகிறார்கள் - இருவரும் வேளை செய்து இருக்கும் கடனை அடைக்க முயலும் வேளையில் பல சோதனைகளை சந்திக்க நேருகின்றது -
தாய், தந்தைக்கு தெரியாமல் பிள்ளைகளை உடனே வரும்படி letter போடுகிறார் - trunk call லில் மட்டுமே பேசும் தந்தை , முதல் முறையாக வரும்படி letter இல் தெரிவித்தது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆச்சிரியத்தையும் , கேள்விக்குறியும் எழுப்புகின்றது - அவர்களுக்குள் படித்து முடித்தபின் , பெற்றோர்களை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , எப்படியெல்லாம் உட்காரவைத்து சேவை செய்ய வேண்டும் என்று ஆரோக்கியமாக விவாதித்து கொள்கின்றனர் - சென்னை வந்து சேர்ந்தவுடன் அவர்கள் கண்டகாட்சி - சொந்த வீடு பறி போகிவிட்டது , வாடகை வீடு , உட்கார வைத்து அழகு பார்த்து மரியாதையை செய்யவேண்டும் அப்பாவிற்கு என்று சொன்னவர்கள் உண்மையில் ஈசி chairஇடம் அடைக்கலம் ஆன தந்தையின் இயலாமையை கண்டு கதறுகிறார்கள் - இருவரும் வேலை செய்து, இருக்கும் கடனை அடைக்க முயலும் வேளையில் பல சோதனைகளை சந்திக்க நேருகின்றது -
கடன் கொடுத்த ஈட்டி காரன் கொடுத்த சூடான வார்த்தைகளால் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகிறான் தந்தை - தாயும் சேர்ந்து மடிய விரும்பிகிறாள் - இவர்களின் முடிவை மாற்ற , அண்ணன் தான் விரும்பும் ஏழை காதலியை மறந்து , ஊனம் உற்ற ஒரு பெண்ணை , அவள் பணக்காரியாக இருப்பதால் மணக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறான் - திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து அவன் மனதார விரும்பிய ஏழை காதலிதான் - ஆனாலும் திருமணம் முடிந்தபின் பழைய காதலையும் , காதலியையும் மறக்க முயல்கிறான் - அதில் அவனுக்கு சிறிது வெற்றியும் கிடைக்கிறது - அவன் காதலியினால் அவனை மாதிரி உறுதியாக இருக்க முடியவில்லை - தன் மனைவியிடம் தன நிலைமையை கூறி ரஸ் 25000/- பணம் பெற்று அவன் தந்தை பட்ட கடனில் பாதியாவது அடைக்க விரும்பிகிறான் - அவன் செய்துகொண்ட திருமணம் அவன் தம்பிக்கும் , பெற்றவர்களுக்கும் தெரியாது - அவன் சொல்லவும் விரும்பவில்லை
இதன் நடுவில் தம்பி வேளை செய்யும் chitra &co யில் Rs 25000/- அவன் பொறுப்பில் வைத்திருந்த பணம் திருடு போய் விடுகின்றது - எதேச்சையாக அங்கு வரும் அண்ணன் தம்பியின் கவன குறைவை கண்டு புத்திமதி செய்கிறான் - இருவரும் வட்டி கொடுத்தவனிடம் சென்று Rs 25000/- த்தை கொடுத்து , அப்பா கையெழுத்து போட்ட PN யை திரும்பி வாங்கி , புதியதாக தங்கள் இருவர் பெயரிலும் பாக்கி உள்ள கடனுக்கு புதிய கடன் பத்திரத்தில் கையெழுத்தை போடுவார்கள் - இந்த இடத்தில் இருந்து தம்பிக்கு அண்ணன் செயலில் சந்தேகம் வர ஆரம்பிக்கும் - அண்ணனிடம் ஏது பணம் என்ற கேள்விக்கும் சரியான பதில் வராது .
மீதி கடனை தன மனைவியிடம் மீண்டும் பெற விருப்பம் இல்லாமல் கட்டுரை பரிசு போட்டியில் கலந்து கொள்கிறான் அண்ணன் .
தாலி கட்டிய மனைவிக்கு தன் கணவன் காதலை தியாகம் செய்து தன்னை மணந்த உண்மை தெரிகின்றது - அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து தன் வாழ்வை முடித்து கொள்கிறாள்
தம்பி பணத்தை குறுப்பிட தவனைக்குள் செலுத்தாததால் , குற்றம் சாத்தப்பட்டு - ஜெயில் செல்ல வேண்டியதாகி விடுகின்றது - பத்திரிக்கையில் வரும் அவனை பற்றிய செய்தியினால் , பெற்றவர்களும் , அவனின் காதலியும் அவனை அறவே வெறுக்கிண்டார்கள் - இத்தனைக்கும் அண்ணன் தான் காரணம் என்று அண்ணனை வெறுகின்றான் தம்பி -
தம்பியின் காதலியின் அப்பா தன் பெண்ணை பார்த்திபனுக்கு மணம் செய்ய விரும்பிகிறார் - அண்ணனின் வாத திறமையினால் விடுதலை ஆகும் தம்பி தான் விரும்பிய காதலியையும் அண்ணன் எடுத்துகொள்ள போகிறான் என்பதை அறிந்து அண்ணனிடம் சண்டை போடுகிறான் - அவன்தான் உண்மையான திருடன் என்று தன் பெற்றோர்களையும் நம்ப வைக்கிறான்
அண்ணன் எல்லா உண்மைகளையும் கூறுகிறான் - தான் ஒரு நிரபராதி என்பதை எடுத்து காட்டுகிறான் - உண்மையான திருடன் சித்ரா &கோ வில் வேலை செய்யும் ஒருவன் ( சந்திர பாபு ), அதுவும் அவன் தன் காதலியை ( சுகுமாரி ) மணக்கவே திருடினான் என்பதும் தெரிய வருகிறது - அந்த காதலி வேறு யாரும் இல்லை , சித்ரா &கோ வின் முதலாளி யின் சிறு வயதில் திருவிழாவில் தொலைந்த பெண் - கையில் இருக்கும் மச்சம் பிரச்சனயை தீர்கின்றது
தந்தை இழந்த பணம் திரும்பவும் வட்டியுடன் கிடைகின்றது , அண்ணன் கட்டுரை போட்டியில் வென்ற பணமும் மீதி உள்ள கடனை அடைக்கின்றது - சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்கள் மீண்டும் ஒன்று சேர்கின்றன
சுபம்
Part 3 : படத்தின் சிறப்புக்கள்*
1. அருமையான கரு , அற்புதமான நடிப்பு , அழகான கதை - வில்லன் இல்லை , முகத்தை சுளிக்கும் காட்சிகள் இல்லை , தேனிலும் இனிய பாடல்கள் .
2. எல்லோருக்கும் சமமான வேடங்கள் - தேர்வு செய்த அனைவரும் தங்கள் தங்கள் பங்குகளை அழகாக தந்து உள்ளனர்.
3. பொறுப்புள்ள பிள்ளைகளை படத்திலும் கதையிலும் பார்த்தால் தான் இனி உண்டு - இந்த படம் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கண்டிப்பாக தரும் .
4. படம் சோகத்தை பிழியவில்லை - தேவைக்கு ஏற்ப நகைச்சுவையும் நிறைந்து உள்ள படம் .
5. சபாஷ் மீனா , செந்தாமரை யில் பார்த்த சந்திரபாபுவை இந்த படத்தில் மீண்டும் சந்திக்கலாம் - சுகுமாரி ஜோடி - ஆச்சிரியம் ஆனால் ரசிக்க முடிகின்றது.
6. சாவித்திரிக்கு அதிக வேலை இல்லை - இருந்தாலும் ஜோடி பொருத்தம் நன்றாகவே உள்ளது .
7. GG முதல் முறையாக NT க்கு தம்பியாக நடித்த படம்.
8. மடிமீது தலை வைத்து விடியும் வரை உறங்கும் ஜோடியை மீண்டும் இந்த படத்தில் சந்திக்கலாம் - என்ன ஜோடி பொருத்தம் - அருமைக்கு தமிழில் வேறு வார்த்தை கிடைக்க வில்லை.
9. வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின படம் - செந்தாமரை வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் போது , வரவிருக்கும் ஆலயமணியின் ஓசையில் சற்றே ஓட்டத்தில் நிதானத்தை இழந்தது - மற்ற படி வெற்றி வாகை சூட தவற வில்லை
Part 4 : படத்தின் சில குறைகள்
1. பெற்றவர்கள் - எடுப்பார் கை பிள்ளை போல , பத்திரிக்கை யில் வரும் செய்திகளை வைத்து கொண்டு தன் பிள்ளைகளை எடைபோடுவது அவ்வளவு நன்றாக இல்லை - தன் குழந்தகைள் எந்த சமயத்திலும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள் , தாங்கள் அப்படி வளர்க்கவில்லை என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் .
2. தன் தம்பி தன் மீதே சந்தேக படுகிறான் என்பதை ஏன் அண்ணன் புரிந்துகொள்ளவில்லை என்பது மர்மமாக உள்ளது .
3. சாவித்திரி - GG காதலில் ஒரு அழுத்தம் இல்லை - வேறு வழியே இல்லை என்பது போல காதலிகிண்டார்கள் - மறக்கவும் செய்கிண்டார்கள்
Part 5 : நடிப்பும் , நடிகர்களும் - ஒரு சிறப்பு கண்ணோட்டம்
NT - அமைதியான அதே சமயத்தில் ஆழமான நடிப்பு - அண்ணனாக , தன்னை விட 10 வயதாவது அதிகமாக இருக்கும் மூத்தவனை தம்பியாக பாவித்து நடிக்கவேண்டும் . ஒரு அன்னணனின் கட்டுப்பாடு , கடமை உணர்ச்சி , பாசம் , பரிவு எதிலும் குறை வைக்க வில்லை - பெற்றோர் இல்லையென்றால் நாம் அடையும் எந்த வெற்றிக்கும் அர்த்தம் இல்லை - அவர்களை எந்த நிலைமையிலும் நாம் கைவிடக்கூடாது என்பதை எப்படி புரிய வைக்கிறார் - தேவிகாவிடம் interview செய்வதாகட்டும் , தன் உடல் ஊனமுற்ற மனைவியிடம் காட்டும் பரிவாகட்டும் , தன் ஒரே தம்பி தன்னை திருடன் என்று நினைத்து விட்டானே என்று புலம்புவதிலாகட்டும் , கோர்ட்டில் தம்பிக்காக வாதாடுவதில்லாகட்டும் நடிப்பு சிங்கம் செய்யும் கர்ஜனை வானத்தை இரண்டாக பிளக்கும் -------
GG : அருமையான , கட்டுபாடான நடிப்பு - சாவித்திரியிடம் கொஞ்சுவதிலாகட்டும் , அண்ணனை திருடன் என்று கருதுவதிலாகட்டும் , பின்னி விடுகிறார்
S .V ரங்க ராவ் - தந்தை வேடம் இவருக்கு பொருந்தினா மாதிரி யாருக்குமே பொருந்திருக்காது - அன்னையின் ஆணையில் வில்லன் தந்தை , விடிவெள்ளியில் வில்லன் தந்தை ; இரும்பு திரையில் வில்லன் தந்தை - இந்த படத்தில் வில்லன் இல்லை - தன் குழந்தைகள் கஷ்ட்ட படகூடாது என்பதில் இவர் காட்டும் அக்கரை அற்புதம்
M .V ராஜம்மா - கர்ணனில் தெரிந்தே மகனை தொலைத்த குந்தியாக , பாவ மன்னிப்பில் மகனை தெரியாமல் தொலைத்த தாயாக , அன்னைஇல்லத்தில் மகனை பற்றி தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அன்னையாக நடித்தவர் இந்த படத்தில் மகனை தொலைக்காமல் நடிக்கிறார் - இருவரையும் station லில் முதல் முறை சந்திக்கும் பொழுது சூரியனையும் சந்திரனையும் ஒரே திசையில் உதிப்பது போல உள்ளது என்று சொல்லும் போது , திரை அரங்குகளில் காதுகள் செவிடாகும் வரை கரகோஷம் கேட்க்குமாம் ..
தேவிகா ( பலருக்கும் அண்ணி ) - அழும் போது அழுகை , சிரிக்கும் போது அளவான சிரிப்பு - இரண்டும் ஒரே சமயத்தில் காட்ட வேண்டிய சந்தர்பத்தில் கேட்காத வெட்கம் - சாட்சி கையெழுத்து தன் காதலனின் registered marriage க்கு போடும் வேலையில் எல்லோரையும் உருக்கி விடுகிறார் .
சாவித்திரி : அதிகமான , அழுத்தமான வேடம் இல்லை - பாடுகிறார் , ஆடுகிறார் , கோபிக்கிறார் , சோகமாக இருக்கிறார் , மீண்டும் சிரிக்கிறார் - அவ்வளவே !!
சந்திரபாபு : படத்தை தூக்கி நிருத்துபவர்களில் இவரும் ஒருவர் - அருமையான காமெடி - சுகுமாரி ஜோடி - வாழபழத்தை வாங்குவதிலாகட்டும் , பேப்பர் இரவல் வாங்குவதிலாகட்டும் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை .
VKR : எப்பொழுதும் போல அருமையான நடிப்பு