-
1988ல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஜா அணி - ஜெ அணி 1989 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது . தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுகவின் வெற்றி சின்னம் - இரட்டை இலை மீண்டும் ஜெயலலிதா தலைமையில் கிடைத்தது . இந்திய அரசியல் வரலாற்றில் உடைந்த ஒரு கட்சிக்கு மீண்டும் கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
நிறுவிய அதிமுக இயக்கம் என்பது சாதனை .
அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என்று எள்ளி நகையாடிவர்கள் துவண்டு போகும் விதத்தில் மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைதேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்கள் .
மறைந்து 27 ஆண்டுகள் மேல் ஆனாலும் புரட்சித்தலைவரின் புகழ் - சக்தி - செல்வாக்குமக்கள் மன்றத்தில் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 37/39 வெற்றி ஓர் சாட்சி .
-
So many best wishes to Any Time Emperor MakkalThilagam MGR., Centenery Functions hits a great success...
-
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். இதற்கான ஏற்பாடுகளைச் செய்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் , நன்றிகள். காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக என்னால் இந்த சிறப்பு மிகுந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை
-
மக்கள் திலகத்தின் மேடைப் பேச்சு அடங்கிய மிக மிக அபூர்வமான வீடியோவைப் பதிவிட்ட அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள். தமிழ் இந்து நாளிதழில் மக்கள் திலகத்தின் மாண்பை அருமையாகப் பதிவிட்டு வரும் நண்பர் ஸ்ரீதர்சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகள். கடந்த வியாழன் அன்று பொதிகை தொலைக்காட்சியில் என்.எஸ்.கே அவர்கள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் மக்கள் திலகம் அவர்கள் கலைவாணருடனும் அவர்களுடைய வாரிசுகளுடனும் கொண்டிருந்த நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள் திரு.கோலப்பன் அவர்களது துணைவியார். அதன் வீடியோ பதிவு கிடைத்தால் நமது திரியில் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.
-
ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
நன்றி - கவிஞர் வைரமுத்து
என்ன ஒரு தீர்க்கதரிசனமான ஆய்வு வரிகள் .ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதுவதை விட நூறு வரி கவிதைகளே மக்கள் திலகத்தின் பெருமைகளை பறை சாற்றும் .
-
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடல்களின்மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.
courtesy - net
-
தமிழ் சினிமாவின் முதல் pro (படம் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்) பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று சென்னையில் காலமானார். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
-
-
-