http://i58.tinypic.com/103zgna.jpg
Printable View
மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்
26-1-1971
முதல் நாள் பார்த்த அனுபவம் .
மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது
கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
அன்று வெளிவந்தது .
படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .
கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .
கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .
கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .
ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .
ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .
ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .
மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .
ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான
நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .
பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
என்று விறுவிறுப்பாக செல்கின்றது .
நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .
மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .
ஏழைகள் மீது ஜெயலலிதா கண்ணியமின்றி பேசுதல் .
எம்ஜிஆரின் கவனத்தை திசை திருப்ப தொந்தரவு தருதல் .
எம்ஜிஆரின் வெற்றியை சகிக்கமுடியாமல் கோபமாக பேசுதல் .
எம்ஜிஆரை வெறுத்து பார்ப்பது
பணக்கார எம்ஜிஆரின் மீது காதல் - ஏக்கம்
எம்ஜிஆரை அடைய தீராத மோகம் .
பிறருடைய தூண்டுதலில் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்தல்
ஜெயலலிதாவின் திடீர் மாற்றங்களை எம்ஜிஆர் கண்டு பிடித்தல் .
ஜெயாவின் முயற்சிகளை தோற்கடித்தல் .
திருந்திய ஜெயாவின் கரம் பிடித்தல் .
இதுதான் - குமரிகோட்டம் கதை சுருக்கம்
தலைவரின் பக்தைகள் மாலை அணிவித்து வணங்கும் காட்சி
http://i59.tinypic.com/j5knra.jpg
தலைவருக்கு மாலை அணிவித்து வணங்கும் பக்தர்கள் திரு லோகநாதன், ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு பி.எஸ் .ராஜு,மற்றும் நண்பர்கள்
http://i59.tinypic.com/t027wy.jpg
http://i58.tinypic.com/n3uicg.jpg
http://i60.tinypic.com/2q8y6wk.jpg
விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள்
http://i58.tinypic.com/dxmzkn.jpg