தலைவரின் புகழ்பாட. ( 26.03.1968 - 26.03.2019).இன்று தலைவரின் ஆசியை இந்நாளில் வேண்டுகிறேன் !. உரீமைக்குரல் ராஜு...... Happy Birthday Wishes to Raju BS.,
Printable View
தலைவரின் புகழ்பாட. ( 26.03.1968 - 26.03.2019).இன்று தலைவரின் ஆசியை இந்நாளில் வேண்டுகிறேன் !. உரீமைக்குரல் ராஜு...... Happy Birthday Wishes to Raju BS.,
எம்.ஜி.ஆர் ஃபிரேம்!!
--------------------------------------
இந்தப் பதிவை மிகவும் உன்னிப்பாகப் படிக்கும்படியும், விஷயத்தைத் தம் சந்ததிகளிடம் விளக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்!!
எங்க வீட்டுப் பிள்ளை!!
வாகு-நீ -- என்று எம்.ஜி.ஆரை வைத்து-வாகினியில் எடுக்கப்பட முதல் வண்ணப்படம்!
எங்க வீட்டுப் பிள்ளை எங்க வீட்டுப்பிளை என-
அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் குறைந்தது பத்து முறையாவது இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள்!!
|படத்தில்,,இளங்கோ எம்.ஜி.ஆர்,,ஹோட்டலில் மிகக் கொஞ்சமாக ?? சாப்பிட்டுவிட்டு பில் கட்டாமல் வெளியே வந்து விட--
ராமு எம்.ஜி.ஆர் மாட்டிக் கொள்ளும் காமெடிக் காட்சி!!
காமெடிக் காட்சி என்றாலும் கூட--
ஹோட்டலுக்கு வெளியே வந்து,,தம்மைத் தாமே கடிந்து கொள்வார் இளங்கோ எம்.ஜி.ஆர்!!
ஏமாத்திவிட்டு வந்துட்டோமே! இந்த தாயத்தை விற்றாவது பில்லை செட்டில் பண்ணிடணும்!!
அன்று எங்கவீட்டுப் பிள்ளையின் படப்பிடிப்பு!!
தாம்புக் கயிறை பாம்பு என்று தம் அன்னையிடம் பயமுறுத்தி,,இளங்கோ எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும் காட்சி!!
காட்சிப் படி--பாம்பு--பாம்பு--என்று போலியாக அலற வேண்டிய எம்.ஜி.ஆர்---
திடீர் என்று செய்து விட்ட காரியம்??
அந்த அறையில் இருந்த புத்தர் சிலை அருகில் சென்று --புத்தரிடம்--
என்னை மன்னிச்சுடுங்க! என்று மன்னிப்புக் கோரியது??
இயக்குனர் சாணக்கியா முதல்--குழுவில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை??
ஷாட் எடுக்கப்பட்டு விட்டதும் நிதானமாக எம்.ஜி.ஆர்,,காரணத்தை விளக்குகிறார்!
இது காமெடியான ஸீன் தான்!! இருந்தாலும்--ஆபத்துக்குப் பாவமில்லை என்ற பாணியில்-படம் பார்ப்பவர்களும்--முக்கியமாக--என் ரசிகர்களும் இப்படிப்பட்ட தவறான அணுகு முறையைக் கடைப் பிடித்துவிடக் கூடாதுன்னு தான் நான்,,அந்த அறையில் இருந்த புத்தரிடம் மன்னிப்பு கேட்டேன்!!
முடிந்த வரையில் நாம்--
முன் உதாரணமாக நல்லதுக்கு இல்லா விடினும்
பின் உதாரணமாகக் கெடுதலுக்கு அமையக் கூடாது அல்லவா??
பெண்களின் அரை குறை ஆடையிலிருந்து--ஆண் ஹீரோக்களின் வக்கிரம் கலந்த சண்டைக் காட்சி வரை அனைத்து தீமைகளுக்கும் சினிமாவே பெரும் காரணமாய் அமைந்து விடும் இன்றையக் காலக்கட்டத்தில்-அதே திரையுலகில்---லாஜிக்கே தேவைப்படாத ஒரு காமெடி ஸீனில் கூட எம்.ஜி.ஆர் அணுகிய கோணம்???
சுருங்கச் சொன்னால்--
அன்றைய எம்.ஜி.ஆர் படங்கள்??
அனைவருக்குமான சமச்சீர் கல்வி!!
ஆமாம் தானே அரியவர்களே???!!! Thanks wa.,
இன்று (26/03/2019) பிறந்த நாள் விழா காணும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள் இன்று போல் என்றும் நலமுடன், வளமுடன் , தொடர்ந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பரப்பும் பணியை தொடர பல்லாண்டு வாழ்க என எனது சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் அன்பான நல்வாழ்த்துக்கள் .
http://i65.tinypic.com/fc4geg.jpg
கடந்த வெள்ளி முதல் (22/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/fmut15.jpg