Originally Posted by
pammalar
சமூக நலப் பேரவை எனும் பெயருக்கு கட்டியம் கூறும் வகையில், கர்ணன் காவிய வெளியீட்டையொட்டி மக்கட் சமுதாயம் பயனுறும் விதம், தங்கள் அமைப்பின் மூலம் ஆற்றப்பட்டு வரும் நற்பணிகள் சிவாஜி பேரவையின் புகழை மட்டுமல்லாது சிவாஜி புகழையும் மேலோங்கச் செய்கிறது. சென்னை என்ன, திருச்சி என்ன, கடலூர் என்ன, திருநெல்வேலி என்ன, என பற்பல ஊர்களிலும் சிவாஜி பேரவையின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் மலைக்க வைக்கின்றன. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் தங்களுக்கும், தங்களது அமைப்புக்கும் எனது பசுமையான பாராட்டுதல்களுடன் கூடிய தலையாய நன்றிகள் !
'Chronicle' மற்றும் 'மாலை மலர்' தகவல்கள் அருமை மட்டுமல்ல, உண்மை ! சாத்தூர் பதாகைகள் பிரமாதம் !
அன்புடன்,
பம்மலார்.