Originally Posted by
RAGHAVENDRA
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.
முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.
யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.
வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.
அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.