//நீங்க உங்க கவிதை மழையை தொடருவீங்களா?//
உடனே தொடர முடியாததற்கு ஸாரி கல் நாயக் (உண்மைப்பெயர் ஹரிஹர வேங்கட சுப்ரமண்யன் தானே :) இதோ இன்றைய்ய ஸ்பெஷல் சுடச் சுட நெய்விட்டு இன்று முக நூலில் எழுதிய பாடல்கள்
கவிதையும் கானமும் -9
எமி ஜாக்ஸன் என்ற லண்டன் பெண்- சிச்சிறிது படங்களே நடித்திருக்கிறார்..அவரது- உலகமே எதிர்பார்த்த படமான ஐ- இன்று ரிலீஸ்.. என்ன ஆச்சுன்னா..
காலையில் முக நூலில் சின்னதாய் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேனா..
நண்பர் உடல் நிலை சரியில்லாத என்னைப் பார்க்க வந்திருந்தார். ’உடம்பு சரியானதுக்கப்புறம் எல்லாம் பார்க்கலாம்..சும்மா ஐ ஐ ந்னு குதிக்காதீர்!” என்றார்.. எப்படி இருக்க முடியும்.
எதுகையில் சிக்கா எமியாம் அழகுப்
பதுமையைப் பார்க்கலாம் பார்..
என்று தான் மனதில் தோன்றியது அவர் சென்ற பின்பு..(எதுகைன்னா ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் எழுத்தே வரவேண்டும்… எமி உமி சுமி என – கொஞ்சம் அப்ப எழுத வரலை)
எமி என ஆரம்பித்து வெண்பா எழுத மற்ற நண்பர்களை அழைக்கிறேன்! னு போட்டா ஃப்ரண்ட்ஸ் அழகாப் பாட்டும் எழுதிட்டாங்க. சரின்னு நானும் என் பங்குக்கோர் பாட்டு எழுதிட்டேன்..
தமிழுக் கழகூட்டும் சந்த விருத்தம்
எமிக்கோ எழிலென ஏது? - குமியும்
உதடென்றா இல்லை உதறும் நிலாவால்
புதனின்று பொன்னாச்சு போ..
இத்தோட நின்னுச்சான்னு பார்த்தா இன்னொரு நண்பர் – அவ்வளவு ஒண்ணும் சுவாரஸ்ய அழகு இல்லை ஓய்ன்னார்.. அப்படியே ஒரு பாட்டு – இறுதி அடி – எலி போல் இருக்கும் எமின்னு எழுதிட்டாருங்க! எனக்கோ சின்னக் கோபம்.
கலிகாலம் வந்ததைக் கண்டாயா தோழா
எலிபோல் இருக்காம் எமி ( நற நற..)
ந்னு எழுதிட்டேன்!
அப்புறம் அதே நண்பர் அந்த எமியின் ஸ்டில் பாத்துட்டு ஸாரி கேட்டு ஒரு பாட்டுப் போட்டார்..அதன் கடைசியிலே- என்று வரும் கோவில் எமிக்குன்னு கேட்டிருந்தாரா நான் என்ன சொன்னேன்..
கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
பாவில் இசைப்போமே பண்ணை – தூவிடும்
சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
தூறும் அழகோ சுகம்.
சரி தானுங்களே!
**
இனி நேயர் விருப்பமாக / விருப்பமாக இல்லாவிட்டாலும் கூட :) மதராஸப் பட்டணத்திலிருந்து பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இலையே.. பாடல்..
http://www.youtube.com/watch?feature...&v=0e7sTaHxeQw