Dear raghavendra sir,
many many happy returns of the day,may god and nt bless you
Printable View
Dear raghavendra sir,
many many happy returns of the day,may god and nt bless you
Dear vasu sir,
going in full form,kalakkungal
.Quote:
செந்தில் சார்,
அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு
by Vasudevan Sir
இதுதான் உங்கள் ஸ்டைலில் அமையும் ஒப்பிட முடியாத முத்திரைப் பதிவு வாசுதேவன் சார் !
எனக்குத் தெரிந்தது ஒரு சின்ன கான்செப்ட் அதை சுற்றி ஒரு தூக்கணாங்குருவிக்கூடு சில பொருத்தமான பதிவுரைகள் மற்றும் வீடியோக்கள் அவ்வளவே !
உங்களது விவரிப்புத் திறன் எனக்கு வர யுகங்கள் போதாது நண்பரே !! ஹேண்ட்ஸ் அப்....நான் சரண்டர்!!
ஊக்கம் தரும் ஆக்கபூர்வமான பாராட்டுதல்களுக்கு நன்றிகள் !!
https://www.youtube.com/watch?v=54HL4BSefHA
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் இடம் பெறாத இளமைக்காலம் எங்கே என்ற பாடல்.
இளையராஜாவின் பாடல்களை இணையத்தில் இப்போது டவுண்லோடு செய்ய முடியாதநிலையில் இந்த பாடலை சவுண்டு ரெக்கார்டர் மூலம் பதிவு செய்து பின் படத்தில் வரும்வேறுவீடியோபாடலை யூடீயூப் மூலம் பதிவிறக்ககம் செய்து அதை பிக்சர் கிளிப்புகளாக சேர்த்து பின் ஆடயோவைமிக்ஸ் செய்து அதன்பின் யூடியூப்பில்தரவேற்றம் செய்து ....
இப்போது உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும்
https://youtu.be/HLJeCRmZYnY
நடிகர்திலகம் அசத்திய மேற்கத்திய பாணி நடனக் காட்சிகளின் அணிவகுப்பு!
https://www.youtube.com/watch?v=BGH5slqQG60Quote:
ஒரு அமைதியான மனமகிழ் மன்ற இரவு சூழல் மெல்லிய இசை வருடலில் காதல் ஜோடிகள் தம்பதியர் தங்களை மறந்து மிதமான அணைப்பில் ஒரு கை கோர்த்து மறுகை தோளிலிட்டு நாயகர் நெஞ்சில் நாயகி முகம் புதைத்து முறையான ஸ்டெப்களில் சுழன்றாடும் ஆட்ட நகர்வுகளோடு எண்ணப் பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் அமைந்தவை மேற்கத்திய பாணி நடனங்கள் தமிழ் திரைப்படங்களிலும் கலாசார வேறுபாடுகளின்றி தவறாமல் இவ்வகை நடனங்களும் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்காக புகுத்தப் பட்டு ரசிக்கப்படுகின்றன
நடிகர்திலகம் கண்களை உறுத்தாத கம்பீரமான உடையலங்காரங்களில் நாயகியருடன் ஸ்டைலிஷாக நம்மை மகிழ்வித்த நடனக் காட்சிகள் !!
https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA
https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito
https://www.youtube.com/watch?v=XuxO6eafsiY
Bonus from western Bond movie
https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc
https://www.youtube.com/watch?v=sefBHwijZng
டியர் செந்தில் (பெங்களூரு),
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
சிவாஜி செந்தில் சார்
விதவிதமான கண்ணோட்டத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினை அலசும் தங்கள் பாணி சூப்பர்...மாடிப் படிக்கட்டுகள், மேற்கத்திய நடனம், குழந்தை வளர்ப்பு என்று எத்தனை விதங்களில் அணுக முடியுமோ அத்தனை விதங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினை ஆய்ந்து வருகிறீர்கள்.
தங்களின் வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்.. அதன் மூலம் நம் இதய தெய்வத்தின் பல்வேறு பரிமாணங்களில் அவர் எடுத்த அவதாரங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.
கோவை செந்தில்
தாய்க்கு ஒரு தாலாட்டு ..
தங்களுடைய காணொளி அருமை. இதைப் போன்று திரையில் இடம் பெறாத நடிகர் திலகத்தின் பாடல்களை மேலும் தாங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என்பது இங்குள்ள அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
கர்ணன் படத்தில் மகாராஜன் உலகை ஆளலாம் பாடல், ஞாயிறும் திங்களும் பட்டினும் மெல்லிய பெண்ணிது,, இவையெல்லாம் வீடியோக்களின் தொகுப்பாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
வாசு சார்
பாலும் பழமும், பார் மகளே பார், என தங்களுடைய பதில் பதிவுகளிலும் கூட தங்களின் அபார உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. தங்களைப் போல் பதில் பதிவெழுத நானும் பழக வேண்டும்.
பாராட்டுக்கள்.