http://i65.tinypic.com/j76el0.jpg
Printable View
http://i68.tinypic.com/ehnbrb.jpg
http://www.maalaimalar.com/News/TopN...in-Chennai.vpf
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சிறப்பு நினைவு தபால் தலை வெளியானது
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மாபெரும் தலைவராக குடிகொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசின் சார்பில் சிறப்பு நாணயம், சிறப்பு தபால் தலை ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவாக வெளியிடப்படும் சிறப்பு நினைவு நாணயம், தபால் தலை போன்றவை தமிழகத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் வரவேற்பை பெறுவதுடன், உலகம் முழுவதும் வாழும் மக்களாலும் வரவேற்கப்படும்.
எனவே, சிறப்பு நிகழ்வாக கருதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மறைந்த தமிழக முதல்வர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு சிறப்பு தபால் தலையை தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலர் டி.மூர்த்தி வெளியிட, முதல் தொகுப்பினை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.
தபால் தலை வெளியீட்டு விழாவில் மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதற்கு முன்னர் கடந்த 1990-ம் ஆண்டிலும் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
http://i66.tinypic.com/2a7d85l.jpg
http://www.maalaimalar.com/News/TopN...GR-recalls.vpf
ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் புகழாரம்
பதிவு: ஜனவரி 17, 2017 15:52
ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:
மறைந்த தமிழக முதல்வர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் எம்.ஜி.ஆருடனான தனது நினைவலைகளை பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.
பள்ளிகளில் மாணவருக்கு இணையாக மாணவியரின் எண்ணிக்கையும் அமைய வேண்டும் என விரும்பிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்துவதற்கு இடையூறாக இருந்த பசிப்பிணியைப் போக்கிய சம்பவத்தை தனது அறிக்கையில் எம்.எஸ். சாமிநாதன் பதிவு செய்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக அனைவரும் கல்வியறிவை பெற எம்.ஜி.ஆர். வழிகாட்டியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், சத்துணவு ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை செலுத்தி வந்தார். 1980-84 ஆண்டுகளுக்கிடையில் அவர் இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகித்தபோது, நான் மத்திய திட்ட கமிஷனில் இடம்பெற்றிருந்தேன்.
முதலில் மத்திய திட்ட கமிஷனின் துணைத்தலைவராகவும், பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் சேர்ந்து உறுப்பினராகவும் இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசிய எம்.ஜி.ஆர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிறைவேற்றப்படும் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்துக்கு மத்திய திட்ட கமிஷனின் நிதியை பெற்றுத்தர உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்படி, இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக திட்ட கமிஷனின் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்தேன்.
சிறுவயதில் பலமுறை பள்ளிக்கு பட்டினியாக சென்ற தனது இளமைக்கால அனுபவத்தை என்னிடம் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர்., அப்படி பட்டினியாக பள்ளிக்கு சென்ற நாட்களில் ஆசிரியர் என்ன பாடம் நடத்துகிறார்? என்பதை புரிந்துகொள்ள முடியாதபடி பசி தன்னை வாட்டியதாகவும், அந்த அனுபவம் தமிழ்நாட்டில் வேறெந்த குழந்தைக்கும் ஏற்பட கூடாது என்றுதான் விரும்பவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்’ என எம்.எஸ். சுவாமிநாதன் தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தினமலர் -17/01/2017
http://i66.tinypic.com/124wy8x.jpg
http://cinema.dinamalar.com/tamil-ne...ays-Nassar.htm
எங்களுக்கு முகவரி தந்தவர் எம்ஜிஆர்.
- நாசர் புகழாரம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,-ன் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
http://i67.tinypic.com/2ns9jq9.jpg
பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நாசர் பேசியதாவது... ‛‛தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய பிறந்தநாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைப்படுவோம் என்றார் நாசர்.
விஷால் பேசுகையில்... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி தமிழ் நாடு மட்டுமல்ல ஊர் உலகமே அறிந்த ஓர் விஷயம். மக்களுக்காக அவர் பாடுபட்டு , மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்பாடு போல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., தான் என்றார் நடிகர் விஷால்.
தமிழ் இந்து -17/01/2017
http://i66.tinypic.com/nzkdgz.jpg
http://i68.tinypic.com/x42000.jpg
எம்ஜிஆர்., 100 - நடிகர் சங்கம் மரியாதை
மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை, ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ் சினிமா முடிவெடுத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எம்ஜிஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, குட்டிபத்மினி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சென்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., நினைவிடத்திலும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.