பாடிய தூக்கில் பயின்ற பொருள்கண்டு
தேடிய நோக்கும் நிறைகண்டு --- ஓடிய
தெண்ணீரில் பொன்கண்டு தேர்ந்தாரை ஒப்பர்காண்்
எண்ணீரோ இன்னார் திறம்.
for your critical appreciation....
Printable View
பாடிய தூக்கில் பயின்ற பொருள்கண்டு
தேடிய நோக்கும் நிறைகண்டு --- ஓடிய
தெண்ணீரில் பொன்கண்டு தேர்ந்தாரை ஒப்பர்காண்்
எண்ணீரோ இன்னார் திறம்.
for your critical appreciation....
Oh !!Quote:
Originally Posted by bis_mala
வெண்பா இலக்கணப்படி எதுகை வரவேண்டும் என்றும் எவ்வாறு வருகிறது என்பதைப் பொருத்து இன்னிசை/நேரிசை வகைகள் அறியப்படும் என்று நினைத்தேன்.
எதுகையும், மோனையைப் போல, நயம் கருதி சேர்த்துக்கொள்ளப்படுவது மட்டும் தானா?
அதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியே என் கேள்வி.Quote:
மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.
......கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.
கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!
திறம்பட செய்யப்பட்ட மீறலும் அழகே.
கம்பராமாயணத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு வரி
Structure:உம். பெண்யானையின் அழகிய நடையை நகுவதாக இருக்குமாம் அப்பெண்களின் அழகு நடை. அதாவது சுமாரான, நகைப்புக்குறிய உவமைகள் தான் கிட்டும் என்ற structure.Quote:
விதியினை நகுவன அயல்விழி - பிடியின்
கதியினை நகுவன தளர்நடை - கமலப்
பொதியினை நகுவன புணர்முலை - கலைவாள்
மதியினை நகுவன வனிதையர் வதனம்
எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார். ஆனால் இந்த பாவின் structure படி வேல்விழிகளுக்கும் உவமை சொல்லவேண்டும். ஆனால் அது கூட இயலவில்லையாம். உவமை சொல்ல வேண்டும் என்ற விதியைக் கூட நகைக்கின்றனவாம் அவ்விழிகள்.
Afflatus cannot be contained.
Quote:
Originally Posted by P_R
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல். இலக்கியமே
முன்பிறந்தது; இலக்கணம் பின் ஆய்ந்து நெறிமுறைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தி, பெயர்களிடப்பட்டு உரைக்கப்பட்டது. இலக்கணமில்லாத காலத்தில், ஒருவன் தானே நெறிமுறைகளைக் கண்டுகொண்டு பாட வேண்டியிருந்தது.
இப்படி இருந்தால் இது இன்னிசை, இப்படியானாலதிது நேரிசை
என்று அடையாளத்திற்கு இடப்பட்ட நிலை பின் வந்த
ஆசிரியர்களால் "இப்படி வரவேண்டும்" "அப்படி வரவேண்டும்"
என்று கட்டாய விதிபோல போதிக்கப்பட்டது.பலர் போற்றிய (கடைப்பிடித்த) ஒரு நெறி, போதிப்பவரால் வலியுறுத்தப்பட்டு "விதி"யாக அல்லது "விதி"போல மறுதரவு
செய்யப்பெறும்.
இன்னிசை நேரிசை என்று குறியீடுகள் இருப்பதால், எதுகை ( etc) கட்டாயம் ஆகிவிடாது.
எதுகை மோனை இன்ன பிற இல்லாத கவி தொடுப்பது,
"செந்தொடை" என்று இலக்கணியர் ஒருபுறம் வைத்துக்கொள்ள
வேண்டியதாயிற்று. காரணம் செந்தொடை கொள் புலவ
மலைகளுக்கு இவ் இலக்கணியர் காலத்திலிருந்த செல்வாக்கு தவிர வேறென்ன?
திருவள்ளுவனார் காலத்திலேயே செந்தொடை முறை சற்று
அருகிவிட்டது. மறைந்துவிடவில்லை. செம்மையான தொடை
அதுதான். அதனாலேயே அதற்கப்பெயர்.
அக அழகு குறையும்போது, புற அழகில் ஈடுபடுகிறோம் என்பர்
மேலை நாட்டறிஞர். எதுகை மோனை முதலியவை புற அழகு.
எதுகை மோனைகளின் தாக்கம், சங்க இலக்கியத்தில் சற்று
கீழ்மட்ட நிலையில்தானிருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இப்படிக்கூறுவதனால், எல்லோரும் எதுகை மோனை இல்லாமல் கவிபாடவேண்டும் என்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை.
என்னைப்பொறுத்தவரை எதுகை மோனைகள் பெய்தே
எழுதுவேன். ஆனால், கருத்துக்கு முதலிடம் கொடுத்து, ஒரோவழி செந்தொடையையும் கையாளுவேன்.
[quote]Quote:
மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.
......கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.
கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!
Thanks. well expounded.Quote:
அதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியே என் கேள்வி.
திறம்பட செய்யப்பட்ட மீறலும் அழகே.
கம்பராமாயணத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு வரி
Structure:உம். பெண்யானையின் அழகிய நடையை நகுவதாக இருக்குமாம் அப்பெண்களின் அழகு நடை. அதாவது சுமாரான, நகைப்புக்குறிய உவமைகள் தான் கிட்டும் என்ற structure.Quote:
விதியினை நகுவன அயல்விழி - பிடியின்
கதியினை நகுவன தளர்நடை - கமலப்
பொதியினை நகுவன புணர்முலை - கலைவாள்
மதியினை நகுவன வனிதையர் வதனம்
எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார். ஆனால் இந்த பாவின் structure படி வேல்விழிகளுக்கும் உவமை சொல்லவேண்டும். ஆனால் அது கூட இயலவில்லையாம். உவமை சொல்ல வேண்டும் என்ற விதியைக் கூட நகைக்கின்றனவாம் அவ்விழிகள்.
Afflatus cannot be contained.
விளக்கத்துக்கு நன்றி.
சட்டகங்கள் சிறைகளாகக்கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. சட்டகத்தைக் கற்றுக்கொண்டு சரளத்தைப் பெருக்கிக்கொள்ள விருப்பம்.
உங்கள் வெண்பாவுக்கு வருவோம்.
தளை தட்டவில்லை.
எதுகையும் சரி.
ஈற்றடியைத் தவிற மோனையும் வந்திருக்கிறது.
பொருள்...
இங்கு தான் நிற்கிறேன். இதற்கு பொருள் என்ன. இந்த பயன்பாட்டை நான் வாசித்ததில்லை.Quote:
Originally Posted by bis_mala
பாடிய தூக்கில் - 'இலக்கண வரையறைகளை சற்றே மீறிய பாட்டில்' என்று புரிந்துகொண்டேன். சரியா?
அப்பிடியென்றால் மிக அழகாக வந்திருக்கிறது.
தூக்குக்கவி என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.Quote:
Originally Posted by P_R
அதைத்தான் சொல்கிறீர்களா?
தூக்கு என்ற சொற்குப் பல பொருள் உள. "பா" என்ற பொருளிலும் வரும். எ-டு: வஞ்சிப்பா - வஞ்சித்தூக்கு. தூக்கு என்ற சொல், அடிப்படையில் ஒன்றைத்தூக்குதலைக் குறிக்கும்.
அரசர் முதலிய உயர்மக்களைத் தூக்கிப் பாடிய வழக்கத்தினால்
இப்பொருள் எழுந்ததோ ? நன்மணம் பரப்பி மயக்குறுத்தும்
மணப்பொருள் போன்றது என்ற ஒப்பீட்டுப் பொருண்மையினால்
பாக்களையும் குறித்ததோ ? என்பது ஆய்வுக்குரியது. பலவகைத் தூக்குகள் உளவென்ப புலவர்.(பாவாணர் சொல்லாய்வுகளில் விடை காணக்கிடைக்கலாம்.) அது நிற்க.
உங்கள் இருவர் விடைகளும் பொருந்துவனவாகவே
தோன்றுகின்றன. j avl கூறியது பொதுப்பொருள்; ......P_R avl உரைத்தது சிறப்புப்பொருள். வாழ்த்துக்கள்.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
இக் குறளில் எதுகைகளைக் கண்டுபிடியுங்கள்.
கண்டு இன்புறுவோம்.
வெறுத்தோ ஒதுக்குவது வெண்பாவை? இன்னல்
பொறுத்துப் பயிலல் கடன்!
vவணக்கம் பிஐஎஸ் மாலா..
என் வீட்டில் கடந்த இரு நாட்களாக ஒரு எலி விசா இல்லாமல் வந்து படுத்துகிறது.. கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..
குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில் சிறிதாய் ஒடுங்கி இருந்தே
பழியாய்ப் பதுங்கியே படசணம் தானுண்டே
எளிதாய்ப் படுத்தும் எலி
கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணம்யில்
அன்ன்நடை தான்குலையும் வஞ்சியர்க்கே வெண் திரையில்
நன்றாக நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
கண்ட்துண்டு கேட்ட்தில்லை காண்..
(ரொம்ப முன்னாலே – ஐந்து வருடம்முன் எழுதிப் பார்த்த்து...திரைப்பட்த்தில் எப்பொழுதும் நாயகி நாயகன்ஸ்பரிசத்தில் கண் மயங்குவாள் கால் அரைவட்ட்ம் போடும் உதடு கொஞ்சம் மடிந்து ஸ் ஸ் என சப்தம் வரும்...
நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ன... உயர் காலணிகளை எப்படிக்கழட்டுவாள்..எப்படி அரைவட்டம் போட முடியும்..!)