Movie : Aadhi ParAsakthi
Singer : P Susheela for Padhmini
Music: K V Mahadevan
Lyric: Udumalai Narayanakavi
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் !
watch :
http://s102.photobucket.com/albums/m...%20Devotional/
Padmini , Major SunderRajan