Originally Posted by Nerd
ரஜினி என்னை அதிர்ஷ்ட நடிகையாக்கினார்! - ஸ்ரேயா
(Tuesday, 23rd June 2009)
சிவாஜியில் தமிழ்ச் செல்வி என்ற பாத்திரத்தில் தலைவருக்கு ஜோடியாக நடித்த பிறகு நடிகை ஸ்ரேயாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. காரணம் அதற்கு முன் அவர் தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு இடத்தில் கூட இல்லை.
தனது இந்த உயர்வுக்குக் காரணம் என்னவென்று சமீபத்தில் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா, அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது.
ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக இருந்தது. அவருடன் நான் நடித்த “மழை” படம் சரியாக போகவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என எனக்கு முத்திரை குத்தினார்கள்.
இனி தமிழ் படங்கள் அவ்வளவு தான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது தான் “சிவாஜி” படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரஜினியால் நான் அதிர்ஷ்ட சாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற “இமேஜ்” விலகியது. என் வாழ்க்கையில் சிவாஜி ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இப்போது கந்தசாமி படம் வரை கொண்டு வந்து விட்டுள்ளது.
நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார். சினிமா என்பது கோடிகள் புரளும் தொழில். இதில் கிளாமர் முக்கியம். அழகு, உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றும் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
முதல் படத்தில் இருந்தே என்னை கிளாமர் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடைய உடல் வாகுக்கு புடவை கட்டி நடித்தால் எடுபடாது. ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். கிளாமருக்கும் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன். அளவோடு தான் இருக்கும். கதைக்கு தேவையான அளவு கவர்ச்சி காட்டுவேன்.
நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல, என்கிறார் ஸ்ரேயா.
:cool2: