http://youtu.be/0pj5iZOzX74
Printable View
வினோத் சார்,
'முத்துக் குளிப்பவரே' பாடலை upload செய்தது யாரென சொல்லுங்கள் பார்ப்போம்.
வினோத் சார், முத்துக்குளிப்பவரே பாடலைத் தரவேற்றியவர் யார் தெரியுமா, கொஞ்சம் பக்கத்திலே வாங்க.. உங்களுக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொல்லுகிறேன்..
முள்வேலி, நூல்வேலி, நெய்வேலி இதையெல்லாம் விட நம்மை கட்டிப் போடும் அன்பு வேலி வாசு சார் தான்... அவருக்கு மிகவும் நன்றி. அதுவும் என் விருப்பமாக தர வேற்றினார். ஸ்பெஷல் தேங்க்ஸ்.
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் தேவனாரே
உம்மை தவிர வேறு யாராக இருக்க முடியும்
விநோத் சார்,வாசு, வேந்தர்,
நான் ஒரு customer visit போயிட்டு வரதுக்குள் என் favourite பாட்டுகளா போட்டு நிரப்பி ஆனந்தத்தில் திணற அடிச்சு ரவி வாரம் கொண்டாடி விட்டீர்களே.
நன்றி நண்பர்களே.
ரொம்ப காலத்துக்குப் பிறகு, மூன்று நாட்களுக்கு முன் 'எங்க பாப்பா' படத்தில் இடம்பெற்ற ரவி - பாரதி டூயட் பாடலான "சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால் இந்த மாதிரித்தான் இருப்பாள்" என்ற பாடலை வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, பார்த்து மகிழ்ந்தேன்.
பாடலைக்கேட்டதும் என் மனதில் தோன்றிய தீர்க்கமான முடிவு, "ராட்சஸ பாடகியை ரீப்ளேஸ் பண்ண ஆளே கிடையாது" என்பதுதான். சிலர் அனுராதா ஸ்ரீராம் (சில பாடல்கள்) , சினம்யி (நான் முத்தம் தின்பவள்) போன்றோர், ராட்சஸியை ரீப்ளேஸ் செய்து விட்டதாக சொல்கிறார்கள்.
கிடையவே கிடையாது என்பதற்கு இந்தப்பாடல் (இந்தபாடலும்) ஒரு சான்று. (பாடலை பதிவிடும் வசதியெல்லாம் என்னிடம் இல்லை. அதனால் என்ன, நம்ம ஜாம்பவான்கள் தான் இருக்கிறார்களே).
எங்க பாப்பா (1966)
http://raretfm.mayyam.com/pow07/images/enga_pappa.jpg
தாதா மிராசியின் கதைக்கு மா.ரா.வசனம். தங்கப்பன் மாஸ்டர் நடனம். உதவி சின்னி சம்பத். ஒளிப்பதிவு வி..ராமமூர்த்தி. கண்ணதாசனின் பாடல்களுக்கு இசை 'மெல்லிசை' மன்னர். தயாரிப்பு பி.ஆர்.பந்துலு. பத்மினி பிக்சர்ஸ்.
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
நான் போட்டால் தெரியும் போடு (டிஷ்யூம் பாட்டு)
ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
ஓஹோஹோ... ரசிகனே
என்று அருமையான பல்சுவைப் பாடல்கள். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் சிறுவர் கதை, கொஞ்சம் காமெடி என்று பந்துலு கொடுத்த படம். 'நான் போட்டால் தெரியும் போடு' 'டிஷ் டிஷ்'ஷோ மிகப் பெரிய ஹிட்.. 'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு' காஞ்சித் தலைவனின் 'ஒரு கொடியில் இருமலர்களை' ஞாபகப்படுத்தும். பாரதி படம் முழுக்க சோகமாகவே காட்சியளிப்பார். புது வீடு டூயட் நன்றாக இருக்கும். ரவியின் வழக்கமான 'கும் கும்' குத்துக்களும் உண்டு. நல்ல வெற்றி பெற்ற படமும் கூட.
கார்த்திக் சார்,
இப்போதைக்கு ஸ்டில்களைப் பாருங்கள். விரைவில் பாடல்களின் வீடியோக்களை அளிக்கிறேன். மேற்கொண்டு கோபால் அண்ணாச்சி தொடருவார்
http://ttsnapshot.com/out.php/i23226...2914h09m34.pnghttp://ttsnapshot.com/out.php/i23219...2914h11m31.png
http://ttsnapshot.com/out.php/i23220...2914h12m11.pnghttp://ttsnapshot.com/out.php/i23222...2914h12m59.png
http://ttsnapshot.com/out.php/i23223...2914h13m24.pnghttp://ttsnapshot.com/out.php/i23225...2914h14m30.png
http://ttsnapshot.com/out.php/i23224...2914h14m15.pnghttp://ttsnapshot.com/out.php/i23221...2914h12m41.png
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் (அப்பா!பாரதி என்ன ஒரு அழகு!)
https://www.youtube.com/watch?v=xf7O...yer_detailpage