முக்கனி போல்
முப்பால் போல்
முத்தமிழ் போல்
மூவேந்தர் போல்
தமிழ் திரையுலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, என்றுமே மறைக்க முடியாத, காலத்தால் அழியாத காவியங்களாக 1961-ம் ஆண்டு திரையில் பூத்த மூன்று முத்துக்களில் மூன்றாம் முத்து இன்று [செப்டம்பர் 9] தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி வந்த Dr. ரவி அகவை ஐம்பதை தொடுகிறார். ரஹீம், ராஜசேகர், ரவி மூவருமே பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டு விழாவும் காணுவார்கள் என்பது நிச்சயம்.
பாவ மன்னிப்பு - 16.03.1961
பாச மலர் - 27.05.1961
பாலும் பழமும் - 09.௦9.1961
இந்த இனிய நினைவை கொண்டாடுவதோடு மிக விரைவில் செக்கிழுத்த செம்மல் அவர்களின் திரையுலக பொன் விழா தொடங்குகிறது என்பதையும் நினைவில் கொள்வோம்.
அன்புடன்