Whatever it is will post from today hoping that no confusions occur
Printable View
Whatever it is will post from today hoping that no confusions occur
வணக்கம் அன்பு சிவாஜி திரி நண்பர்களுக்கு
வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதில் மகிழ்ச்சி
கடைசியாக நான் எழுதியது உனக்காக நான்
கிட்ட தட்ட 2 மாத கால இடைவேளைக்கு பிறகு இந்த பதிவு
திரு சந்திரசேகர் அவர்களின் டிவி பேட்டியை பார்த்தேன்
ஹட்ஸ் ஆப் sir
மற்றும் முரளி சாரின் பதிவுகள் அபாரம்
மற்றும் Subraminam சார் , ஹரிஷ் சார்,ரவி கிரண் சூர்யா சார் , சிவாஜி செந்தில் சார் மற்றும் ரவி சார் ஆகியோர்யின் பதிவுகளை படித்து கொண்டு தான் இருந்தேன்
பாரதத்தில் பிடித்தது -6
இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986
ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்
நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்
பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்
இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்
கதை :
தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி
அன்பான குடும்பம் ,
தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )
முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்
தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்
ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,
தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்
தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை
பாரதத்தில் பிடித்தது -6
இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986
ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்
நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்
பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்
இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்
கதை :
தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி
அன்பான குடும்பம் ,
தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )
முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்
தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்
ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,
தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்
தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை
நடிகர்களின் பங்களிப்பு
சிவாஜி :
சிவாஜி சாரின் படங்களில் யார் எப்படி நடித்தாலும் limelight அவர் தான் , அதுவும் வெகு நாட்களாக commercial படங்களில் நடித்து விட்டு இந்த படம் அவருக்கும் , ரசிகர்களுக்கும் ஒரு welcome change .
இந்த படத்தில் வியட்நாம் வீடு பாதிப்பு நிச்சயம் உண்டு ஆனால் அதை உள்வாங்கி நடிப்பது நம்ம ஆளு ஆயிற்றே நன்றாகவே வித்தியாசம் காண்பித்து இருக்கார் மனிதர்
என்ன டா இது வியட்நாம் வீடு படத்தின் சாயல் கதை என்று சொல்லி விட்டு அந்த இரு protaginist பற்றி கொஞ்சம் compare & contrast செய்வது அவசியம் என்று எண்ணுகிறேன்
Prestige பத்மநாபன் உழைத்து lower கிளாஸ் socitey ல் இருந்து மேலே வந்தவர் , அதனால் எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம், உழைத்து முன்னுக்கு வந்ததால் ஒரு superiority complex உண்டு திரு Prestige பத்மநாபன்க்கு , தன் வேலையே உலகம் என்று இருந்தவருக்கு retirement என்பது ஒரு இடி , அதை cope up பண்ண முடியாமல் தவிக்கிறார் , தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் யாருக்கும் பொறுப்பு இல்லை என்ற நிலை (இது கொஞ்சம் தான் , Prestige பத்மநாபன் பாத்திரம் படும் அவலம் தான் பிரதானம் , மகன்களால் வேறு பிரச்சனை ) மனைவியிடம் கூட அன்பும் , அக்கறையும் இருந்தும் ஒரு rigid அணுகுமுறை தான் வெளிபடுத்துகிறார்
தசரதராமன் :
ரொம்ப ஜாலி மனிதர்
எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம் , முதல் காட்சியில் சீல் அடிக்க கத்து குடும் பொது அதில் ஒரு நேர்த்தி (படிக்காதவன் போட்டோ பார்த்ததும் ஒரு பரவசம் ) complex என்பது கிடையாது , இவர் compromise தசரதராமன் , எல்லோரிடமும் compromise செய்து சென்று விடும் கேரக்டர் , retirement பயம் துளியும் இல்லாத மனிதர் .
தனக்கு கிழே பணிபுரியம் நபர் தப்பு செய்ததும் தண்டிப்பதும் , பிறகு வேறு ஒரு நபர் மூலமாக பணம் கொடுத்து உதவிகிறார் .
வீட்டுக்கு போகும் நடை இருகிறதே சும்மா ஜிங் ஜிங் என்று குதித்து நடக்கும் பாங்கு டாப் , வீட்டுக்கு போகும் பொது , காய் வங்கி , குடையை , கக்கத்தில் வைத்து நடந்து வரும் பொது ஆச்சு அசல் மிடில் கிளாஸ் வயசான பிராமின் தான் .
அடுத்த காட்சியில் 31ச்ட் திருமண நாள் பொது , வசதி சட்டையில் நல்ல பாந்தமாக இருப்பார் , ராத்திரியில் மனைவியிடம் அரட்டை ,லூட்டி அடிக்கும் பொது , சிரிப்பு தான் (அம்மா அப்பாவுக்கு தெரியாமல் தான் )
அதே போலே மருமகள் முதலில் தன்னை அப்பா என்று அழைத்த உடன் உச்சி குளிர்ந்து மனைவி உடன் அதை பகிர்ந்து கொள்ளும் காட்சி அருமை
அதே மருமகள் தன்னை மாமா என்று அழைத்த உடன் மனசுக்குள் வேம்பி , அதை கண்ணில் காடும் காட்சி , ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .
மகன் தன்னிடம் மாச சம்பளத்தை kodukamal , தன் மனைவிடம் கொடுக்க போகும் பொது , அதை லட்சமி எதிர்ப்பதும் , அதை லாவகமாக
சமாளித்து குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்துகொள்ளும் இடத்தில் ,எப்படி பிரச்னையை அணுக வேண்டும் என்பது ஒரு எடுத்துகாட்டு
லேடி கிருஷ்ணா அய்யர் வந்து சம்பந்தம் பேசிய உடன் , தன் மகன்கள் இருக்கும் தைரியத்தில் அவர் கேட்டதுக்கு அதிகமாக செய்வதாக ஒப்பு கொண்டு விடுகிறார்
தன் முத்த மகன் வெளியே போக போதும் பொது , லட்சமி கெஞ்சுகிறார் , அந்த சமயத்தில் அங்கே வரும் சிவாஜி ஒரு பார்வை வீசுவார் பார்குங்கல் , ராஜீவ் & ராஜலக்ஷ்மி இருவரும் பின்னாடி நடக்க ஆரம்பிப்பார்கள் , அந்த காட்சியில் RR டாப் கிளாஸ் (சங்கர் கணேஷ் ) , சிவாஜி அவர் காலில் விழ போவது போலே ஒரு தோற்றம் வரும் , ஆனால் அவர் சூட் கேஸ்யை எடுத்து கொடுத்து , வெறும் action ல் அவர்களை வெளியே போக சொல்லுவர் பாருங்கள் , 1000 கிளாப்ஸ் , உடனே அடுத்த குண்டு
இளைய மகன் ராஜாராமன் ஜோசப் ராஜா என்று பெயர் மாற்றி ,chirstian பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்பது தான் அதிர்ச்சி
இந்த விஷயம் அவருக்கு தெரிந்து இருந்தது தான் அதில் விந்தை , சிவாஜி பேசும் பொது , உன் கல்யாணத்தை நடித்தி வைத்தது Rev father -------, உன் பெயரை மாற்றியது Rev father --------------------- எல்லா பாதர்க்கும் தெரிந்து இருக்கிறது ,ஆனால் உன்னை பெற்ற இந்த பாதர்க்கு தெரியவில்லை , மேலும் பூணல் 1000 போட்டது , பெயர் வைத்தது என்று பழைய விஷியத்தை பற்றி சொல்லும் பொது , நம்மளை கண் கலங்க வைக்கிறார்
தசரதராமன்யின் பெருந்தன்மை , லேடி கிருஷ்ணா அய்யர்யின் யோசனை வடிவம் பெற்று , பிறகு கட்டளை என்ற வடிவம் ஆகிறது , தன் தந்தையின் நிலைமை கண்டு ரவி ராகவேந்தர் உண்மையை சொன்ன உடன் நிபந்தனை வடிவம் பெறுகிறது
மனிதன் அறிவு தான் எத்தனை விசிதிரம் , பிரச்சனை தீர்ந்து போகும் என்று எண்ணினால் , நடந்து அதற்க்கு நேர் எதிர்
தன் மனைவியின் பேச்சை கேட்டு மகன்கள்யிடம் உதவி கேட்டு அவர்கள் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் , கல்யாணத்துக்கு என்ன அவசரம் , எழவு என்ற அசுபம் வார்த்தைகளால் பேச்சு வந்த உடன் , அவர் போய்டுங்கோ என்று கையை வைத்து சொல்லுவர் பாருங்கள் , என்ன ஒரு expression , அக்டிங்
கல்யாண நடத்த வழி இல்லாமல் தவிக்கும் பொது , தலையில் அடித்து அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் , அதே தசரதராமன் தன் chirstian மருமகள்யை ரோடு ல் சந்தித்து பேசும் காட்சி , மத
நல இணக்கத்துக்கு ஒரு எடுத்துகாட்டு
அதில் அவர் நானும் வேளாங்கன்னிக்கு போவேன் ஆனால் என் பெண் கல்யாணம் நடக்கணும் அதனால் கொஞ்சம் தள்ளி இருப்போம் என்று சொல்லும் காட்சி , இந்த சமுகம் எத்தனை பின்தங்கி இருக்கிறது என்பதும் , ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் சூழ்நிலை கைதியாக இருபதுக்கு ஒரு எடுத்துகாட்டு
கடைசியில் தன் சம்பந்தி யின் பேச்சை பொறுக்க முடியாமல் , திட்டவும் முடியாமல் , தன் chirstian மருமகள் வெளியே செல்லும் பொது மௌனமாக இருப்பதும் , பின் சாப்பாடு எடுத்து செல்வதும் என்று தான் நல்லவன் தான் என்பதை நிருபித்து விடுகிறார்
தன் கிட்னியை தானம் கொடுத்து , தன் மகளின் கல்யாணத்தை நடத்தி முடக்கும் பொது , நாம் நெஞ்சில் குடி புகுகிறார் தசரதராமன் , அந்த காட்சியில் அவர் தன் உடமையை கொடுக்கும் காட்சி நம கண்களில் கண்ணீர் வரவைக்கும் காட்சி
லக்ஷ்மி
இவர் நடிப்பை பற்றி என்ன சொல்வது , சிறந்த நடிகை , வியட்நாம் வீடு பத்மினி கொஞ்சம் ஓவர் அக்டிங் , (நாடகத்தை பார்த்த என் தந்தை , படத்தை பார்த்து விட்டு என்னிடம் சொன்ன்னது) லக்ஷ்மி எதில் சிவாஜிக்கு கொஞ்சமும் சளைக்காத performance , apt foil போர் சிவாஜி சார்
தன் முத்த மகன் வெளியே போகும் பொது கெஞ்சும் காட்சி உணர்ச்சி பிழம்பு , அதே மகன் தன் கணவரின் financial handling capacity யை கேள்வி கேட்கும் பொது கொதிக்கும் காட்சி , புருஷனுக்கு ஒரு இழுக்கு என்ற உடன் கொதிக்கும் காட்சி , சம்பந்தி அதிகமாக பணம் கேட்டதுடன் என் பையன் 10த் கிளாஸ் ல் 8 தடவை fail ஆகிவிட்டான் , அதற்கும் ஒரு ரேட் சொல்லுங்க என்று தன் கோபத்தை வெளி படுத்தும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்
விசு :
தஞ்சாவூர் பப்பைய்யர் என்ற பாத்திரம் , சரியான சாப்பாடு ராமன் , வயறு சரி இல்லை என்று அவர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ் ,
தன் மகளை பெண் பார்க்க தன் அத்திம்பேர் வர வைக்கும் காட்சி , ஒரு ஏழை தந்தையாக காட்சி அளிக்கிறார் , அவர் மகள் பிரச்சனை செய்யும் பொது , கடைசியில் நாக்கை பிடுங்குவதை போலே அவர் உண்மையை உடைக்கும் காட்சி , அவர் உண்மையின் பக்கம் தான் என்று நிலை நாட்டுகிறார்
குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி, ரவி ராகவேந்தர் லவ் scenes தான்
பாடல்கள் சுமார் ரகம்
கதை வசனம் : பரத் , இயக்கம் : விஜயன்,
மொத்தத்தில் under rated நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று
DVD- Moser Baer 3 in 1 , raj Video vision
Kindly excuse for spelling mistakes
வெள்ளி முதல் கோவை ராயலில் அவன் தான் மனிதன்
[QUOTE=RavikiranSurya;1109240]நடிகர் திலகம் பிறந்தநாளை முன்னிட்டு SUNLIFE தொலைக்காட்சி ஒளிபரப்பிய " பாக்ஸ் ஆபீஸ் மன்னன் " -
நடிகர் திலகம் அவர்கள் தமிழ் சினிமாவை பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை உணரவைக்கும் சிறப்பு நிகழ்ச்சி.
அன்புள்ள ரவிகிரன் - உங்கள் பதிவுகள் மிகவும் அருமை - எங்கள் எல்லோருடைய உள் கொதிப்பையும் மிகவும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் . ோகன் ராமின் வருணனை அபாரம் - அவர் நம் NT யின் மீது எவள்ளவு அன்பும் , மரியாதையும் வைத்து இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருகின்றது . Innum சிறப்பாக சொல்லியிருக்கலாம் என்று கூட சில சமயம் தோன்றுகின்றது .
உதாரணத்துக்கு சில
1. கர்ணன் - re ரிலீஸ் - பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ( மறைந்த பிறகும்) NT தான் என்று நிரூபித்ததே – தைபற்றி சொல்ல மறந்து விட்டார்
2. வசந்த மளிகை , ராஜா, பட்டிக்காடா பட்டணமா , ஞானஒளி போன்ற படங்கள் வசூல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பறை சாற்றிய படங்கள் - இதை பற்றியும் அவர் ஒன்றுமே சொல்ல வில்லை
3. Box office க்கு மறு பெயர் Muthal Mariyathai - அதை பற்றியும் குறுப்பிடவில்லை
ொத்தத்தில் நன்றாக இருந்தாலும் , சில விஷயங்களை இன்னும் ஆணித்தரமாக கூறியிருக்கலாம்
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
அருமையான பதிவு
http://youtu.be/7q48ybLXwQc
அன்புடன் ரவி
அருமையான பதிவு -2
http://youtu.be/bbaM3yqgXm0
அருமையான பதிவு -3
http://youtu.be/TbHsgmSCglo
வெள்ளி முதல் (31-01-2014)கோவை ராயல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் "அவன்தான் மனிதன்" .
அவன்தான் மனிதன் ஒரு சிறு குறிப்பு
நடிகர் திலகத்தின் 175வது படம்
வெளிவந்த ஆண்டு 1975. அதாவது நடிகர் திலகம் நடிக்கவந்து 23வது வருடம்
சராசரி வருடத்திற்கு 7.61 படங்கள். அதாவது 8 படங்கள் வருடத்திற்கு.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு ஒரு திரைப்படம் ! இமாலய சாதனை !
100 நாட்கள் ஓடிய இடங்கள் :
சென்னை - சாந்தி, கிரௌன் மற்றும் புவனேஸ்வரி
திருச்சி - ராஜா
சேலம் - நியூ சினிமா
மதுரை - சென்ட்ரல்
நெஞ்சை தொடும் பாடல்களும், ஆழ்ந்த நடிப்பும், சிறந்த திரைக்கதையும் கொண்ட மாபெரும் வெற்றி சித்திரம்.
நடிகர் திலகத்தின் வாழ்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பது போன்ற பாடல்...ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ..கண்ணதாசன் வைர வரிகள் !
அவன்தான் மனிதன் திரையரங்கு பேநெர் மற்றும் 100 நாட்கள் விளம்பர ஆவணம் அனைவர் பார்வைக்கும் ! - courtesy : "Proof Samraat" Pammalar
தன்னால் ஒன்றும் பதிவு செய்ய முடியாவிட்டாலும் சிவாஜி படம் ஓடியதற்கு சாட்சி கேட்கும் கனவான்கள் இந்த உலகத்தில் நிறைய இருப்பதால் ஆவணம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது ! பார்த்து பதிவிறக்கி வைத்துக்கொள்ளட்டும் !
Attachment 3044
Attachment 3045
திரு ராகுல்ராம் சார்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் பதிவை படித்ததும் கண்களில் ஆனந்தகண்ணீர்.மிக்க நன்றி சார்,இதே போல தொடருங்கள்.இந்த திரி பழைய பொலிவை பெறவேண்டும் என்று நினைக்காத நாளில்லை.பழைய உறுப்பினர்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
திரு ரவி சார்,
வீடியோ பதிவுகள் அருமை.
Dear Gold star sir,
As Iam going to Shiridi tommorow I cannot watch Avan thaan Manithan sorry, but will post at least 2 movies
Dear Harish sir, KC sekar sir,
Thanks for acknowledgement
அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று திரிக்கு மீண்டும் வருகை புரிந்துள்ள திரு. ரகுல்ரம், திரு ரவி, திரு கோல்ட் ஸ்டார் , திரு. ஹரிஷ் அவர்களை வரவேற்பதில் இந்த திரி மகிழ்ச்சிகொள்கிறது.
அந்த மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்
மீண்டும் நம் திரி வீறு நடைபோடும் என்று நம்புவோம். !
முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!
Posted by: Jayachitra Updated: Thursday, January 30, 2014, 9:35 [IST]
சென்னை: தமிழகத்தில் இடையூறு விளைவிக்கும் 16 ஆயிரம் சிலைகளை அகற்றுவது குறித்து விளக்கமளிக்கமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!
அந்த மனுவில், தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் பொது இடங்களிலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...es-192403.html
Thank you Ragulram and have good Shirdi darshan.
Thanks for your your excellent writing about Anandha Kanneer and one of the NT's hit movie in 1980's. In Madurai this movie released in Madurai Meenakshi Paradise and been there every day to check crowd and always people stand big queue which goes beyond Meenakshi theatre and run more than 12 weeks with houseful days and just missed 100 days...
http://i1302.photobucket.com/albums/...ps582a5145.jpg
http://i1302.photobucket.com/albums/...ps5911f102.png
http://i1302.photobucket.com/albums/...ps7a2df8fc.png
http://i1302.photobucket.com/albums/...ps572eefc5.png
http://i1302.photobucket.com/albums/...ps572eefc5.png
http://i1302.photobucket.com/albums/...psa28e71a4.png
http://i1302.photobucket.com/albums/...ps5517259d.png
http://i1302.photobucket.com/albums/...ps914485dd.png
http://i1302.photobucket.com/albums/...ps1b632cf1.png
There is unique records in the combination of NT and director B.R. Bandhlu.
Only NT movies directed by B.R. Bandhlu run more than 100 days in Madurai.
http://chennai365.com/wp-content/upl...anesan-001.jpg
http://upload.wikimedia.org/wikipedi...man_Poster.jpg
http://imageshack.us/a/img440/5999/z2tt.jpg
http://im.rediff.com/movies/2012/aug/07sld1.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...Pt7zyvdOGA9cv3
http://2.bp.blogspot.com/-v5kS3JLDfE...A/s1600/12.jpg
https://encrypted-tbn2.gstatic.com/i...pd0Fq5Tj4yM9Be
http://www.kalyanamalaimagazine.com/...ha_sandhya.jpg
http://www.aptalkies.com/modules/gal...%20(1959)2.jpg
http://www.aptalkies.com/modules/gal...%20(1959)1.jpg
http://3.bp.blogspot.com/-iGeIijrN1u...a%2B(1959).jpg
https://encrypted-tbn1.gstatic.com/i...7ZmyiG7k-YPAOA
WELCOME BACK DEAR VETERANS ...!
LET SUCCESS MARCH FROM HERE ON ONCE AGAIN THOUGH THERE WAS SOME SETBACK..!
http://www.youtube.com/watch?v=JF7lwmfaNTs
Dear Gold star Satish Sir,
Superb pics of VPKB and Anantha Kanneer
Hats off
Dear Ravi Kiran Surya,
Thanks for posting a good news & for timely song
கோவை மாநகரில் ஆங்காங்கே பட்டாக்கத்தி பைரவனின் அட்டகாசங்கள் (போஸ்டர்கள்.).ஞாயிறு அன்று ராயலில் அட்டகாசங்கள் மேழும் அதிகரிகக்கும் என்று நம்பத்த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிரிகள் ஜாக்கிரதை..
தத்துவ பாடல்கள் ...கயவர்களை சாடும் பாடல்கள் ....உதாரணம் இந்த ஒன்று...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள்...உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்...!
அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்...
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்...
சதிகார கூட்டம் ஒன்று சபை ஏற கண்டேன்...
தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன்...
கொள்ளை அடிப்போன் வள்ளலை போலே ...
கோவிலை இடிபோன் சாமியை போலே வாழ்கின்றான்..
ஊழல் செய்பவன் யோகியன் போலே...
ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றான்..
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள் ....
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்...
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்...
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் !
நாடக வேஷம் கூட வராது ...நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்..
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்...பாவம் செய்தவன் தலைமுறைவரையில் பார்கின்றேன்...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள்...உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்...!
[QUOTE=RavikiranSurya;1110303]தத்துவ பாடல்கள் ...கயவர்களை சாடும் பாடல்கள் ....உதாரணம் இந்த ஒன்று...
கொள்ளை அடிப்போன் வள்ளலை போலே ...
கோவிலை இடிபோன் சாமியை போலே வாழ்கின்றான்..
ஊழல் செய்பவன் யோகியன் போலே...
ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றான்..
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள் ....
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்...
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...
பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே நமது தலைவர் பாடலால் நடித்து காட்டியது இந்த உலகம் உணரும்.
thanks for situation song Mr.Ravikiran Surya
கடந்த ஜனவரி 9 அன்று பிறந்த நாள் கண்ட நகைச்சுவை சக்ரவர்த்தி சிவாஜி படையின் போர்வாள் அடங்காத் தமிழன் திரு. ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் எல்லா வளமும் பெற்று உலகத்தமிழர்களின் மற்றும் உலக சிவாஜி பக்தர்களின் வாழ்த்துக்களோடு நீடுழி வாழ்க என வாழ்த்துகிறோம்
டியர் goldstar SATHISH sir
தலைவரின் ஆனந்தக்கண்ணீர் மற்றும் வீர பாண்டிய கட்டபொம்மன் பதிவுகள் மிக அருமை
பார்த்ததில் பிடித்தது -7
இந்த பதிவில் இது வரை அலச படாத படமான 1973 ல் வந்த தாய் படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன் , நடிகர் திலகத்தின் படங்களின் வரிசையை பார்க்கும் பொது , அதை பார்த்து கடைகளில் dvd தேடும் பொது காண கிடைக்காத படங்களில் இதுவும் ஒன்று , அப்படி தேடி தேடி அலைந்து கிடைத்த படம் தான் இந்த படம்
இது வரை அலச படாத படம் என்பதாலும் மற்றும் என்னைப்போல் இருக்கும் ரசிகர்களுக்கு அந்த படத்தை பார்த்த அனுபவம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தின் கதையை சற்று விலாவரியாக எழுதி உள்ளேன்
கதை :
படத்தின் ஆரம்பத்தில் கற்பகம் (வரலக்ஷ்மி ) அவர் கணவனின் வரவுக்கு காத்து கிடக்கிறார் , அவர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத நபராக இருக்கிறார் , தன் மனைவி கர்பமாக இருப்பதாய் கூட எண்ணாமல் குடித்து விட்டு சீட்டு ஆடுகிறார் , இதில் பொய் சத்தியம் வேறு செய்து விடுகிறார் சாமிதுரை ( சுந்தர் ராஜன் )
சீட்டு ஆட்டத்தில் கைகலப்பு வந்து , அங்கே இருந்து வீடு வந்து சேருகிறார் , தன் மனைவி அவருடன் வாக்குவாதத்தில் இடுபடுகிறார் , வாக்குவாதம் முற்றி கற்பகத்தை தள்ளி விடுகிறார் சாமிதுரை. கற்பகம் இறந்து விடுகிறார் , தன் தவறை உணர்த்து குற்ற உணர்ச்சியில் , அதே சமயம் இங்கே இருந்தால் போலீஸ் பிடித்துவிடும் என்ற எண்ணத்தில் , சிங்கபூர் சென்று விடுகிறார் , அங்கே அவர் தங்கை (சுகுமாரி ) அவர் பெயரை துரைசாமி என்று மாற்றி இங்கிலீஷ் துரையிடம் வேலைக்கு அனுப்புகிறார்
போலீஸ் வந்து கற்பகம் மயங்கி இருப்பதை பார்த்து அவரை காபத்தி விடுகிறார்கள்
கற்பகம் VKRயின் உதவியால் வாழ்கையை நடத்துகிறார்
வருடங்கள் உருண்டு ஓடி விடுகிறது
துரைசாமி தன் தவறை எண்ணி தவிக்கிறார் , இப்பொது அவர் கொடை வள்ளல் , தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட எண்ணுகிறார் ,அவர் தன் தங்கை , மற்றும் தங்கை மகன் குமார் (M N Nambiyar ) உடன் சென்னையில் வசிக்கிறார் , குமார் ஒரு ஊதாரி , spoiled brat
இங்கே கிராமத்தில் கற்பகத்தின் தன் மகன் அனந்தன் (நம்ம சிவாஜி சார் ) மற்றும் மகள் காவேரி (குமரி பத்மினி ) உடன் வசிக்கிறார்
அனந்தன் சதா அடி தடியில் இடுபடுகிறார் , தன் நண்பர் மிராசு
(MRR வாசு ) உடன் பொழுதை கழிக்கிறார்
இந்த மிராசு சரியான 420, இவர் VKRயின் மருமகன் , அனந்தன் , மிராசு இருவரின் சந்திப்பு ஹப் பாலக்காடு பாப்பம்மாவின் டி கடை
இந்த மிராசு தன் முறை பெண் சிவகாமிடம் வம்பு செய்து நன்றாக வாங்கி கட்டி கொளுகிறார்
ஊருக்கு போவதாக சொல்லி விட்டு அந்த மிரஸின் பிறந்தநாள் ல் குடித்து விட்டு இருக்கும் பொது , தன் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் , ஆனந்தன் அதை தடுத்து மிரஸின் கையை ஒடித்து விடுகிறார்
தன் மகனின் எதிர்காலம் வீனா போக கூடாது என்ற எண்ணத்தில் தான் சேமித்து வைத்த 10000 ருபாய் பணத்தில் ஒரு பூமி வாங்கி கொடுக்கிறார் கற்பகம் , அதை எந்த கஷ்டம் வந்தாலும் விற்க கூடாது என்று அறிவுர்திகிறார், அவர் வாங்குன பூமியை ஒற்றி இருக்கும் இன்னும் கொஞ்சம் பூமியையும் கவனிக்கும் பொறுப்பு அனந்தனுக்கு வருகிறது ,துரைசாமி 100 ஏகர் வாங்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பை VKR வசம் ஒப்படைக்கிறார் , அவர் கொஞ்சம் நிலத்தை ஆனந்தனின் கட்டுபாட்டில் விடுகிறார்
துரைசாமி சென்னையில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க ஆனந்தனுடன் VKR செல்லுகிறார்
துரைசாமியின் வீட்டில் குமார் உடன் சண்டை போடுகிறார் அனந்தன் , ஆனால் ஆனந்தனை பார்த்த உடன் பிடித்து விடுகிறது துரைசாமிக்கு
ஆனந்தனை ஊரை சுற்றி பார்க்க குமார் உடன் அனுப்புகிறார் துரைசாமி
குமார் நைட் கிளப்க்கு ஆனந்தனை அழைத்து செல்லுகிறார் , அங்கே குமாரை தாக்க வரும் நபர்களிடம் இருந்து அவரை காபாதுகிறார் ஆனந்தன் , அதனால் துரைசாமி மனதில் நல்ல இடத்தை பிடிக்கிறார்
அதே இரவில் குமார் பணத்தை திருட முயற்சிக்கும் பொது அதை தடுத்து நிறுத்துகிறார் ஆனந்தன் , அனைவரும் ஆனந்தன் தான் திருடன் என்று சொல்லும் பொது துரைசாமி ஆனந்தனின் கண்ணை பார்த்தே அவர் நிரபராதி என்று கண்டுபிடித்து விடுகிறார்
இந்த சம்பவம் இருவரின் மனதிலும் ஒரு மாரா பற்றை உருவாகிறது ,
ஊருக்கு திரும்பும் அனந்தன் தன் தங்கை விரும்பும் பையன் உடன் தன் தங்கையை சேர்த்து வைக்க எண்ணுகிறார்
குமார் தன் மாமா ஊருக்கு வருவதற்கு முன்பாக ஊருக்கு வந்து சேருகிறார் , வந்த இடத்தில அவருடன் கூடு சேருகிறார் மிராசு , இருவரும் செருந்து சிவகாமி , காவேரி உடன் வம்பு செய்கிறார்கள் , அதை ஆனந்தன் தட்டி கேட்கிறார் , இது பஞ்சய்து வரை செல்லுகிறது , ஆனால் அங்கே ஒன்றும் நடக்காததால் , இருவரும் ஆனந்தனை pazhi வாங்க எண்ணுகிறார்கள்
இந்த சமயத்தில் துரைசாமி அந்த கிராமத்துக்கு வருகிறார் , துரைசாமியின் உயிரை காப்பாத்துகிறார் ஆனந்தன். ஆனந்தனின் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்ட துரைசாமி கேட்க , ஆனந்தன் தன் இயலாமையை சொல்லிவிடுகிறார் , இது புரியாமல் கற்பகம் தன் மகன் உடன் வாக்குவாதம் செய்கிறார்.
காவிரியின் கல்யாணத்தில் கலவரம் செய்து நிறுத்தி விடுகிறார்கள் , இதனால் ஆனந்தன் நியாயம் கேட்க போகும் பொது குமார் ஆனந்தனை தாக்கி விடுகிறார் , துரைசாமி ஆனந்தனை அவர் வீட்டில் கொண்டு போய் விடுகிறார் , அங்கே காவேரியை சந்திக்கிறார்
ஆனந்தனின் அம்மாவை சந்தித்து மனிப்பு கேட்க எண்ணுகிறார் , ஆனால் கற்பகம் வீட்டில் இல்லாததால் , பணம் கொடுத்து விட்டு வருகிறார்
ஊரில் இருந்து வரும் கற்பகம் இந்த பணத்தை கொடுத்து துரைசாமி நிலத்தை அபகரித்து கொள்ளுவர் என்று நினைத்து பணத்தை திரும்பி கொடுத்து வர சொல்லுகிறார்
குமாரை கண்டிக்கிறார் துரைசாமி , தன் மகனிடம் துரைசாமி கொலை செய்ததை சொல்லி விடுகிறார் , அதை வைத்து தன் இஷ்டப்படி துரைசாமி யை ஆட்டிவைகிறார் . ஆனந்தன் பணத்தை திரும்பி
கொடுக்க வரும் பொது குமாரின் எண்ணம் படி துரைசாமி நடந்து கொளுகிறார்.
குமார் சிவகாமியை பெண் கேட்கிறார் , அதை தடுத்து சிவகாமி தன் புதி சாதுர்யத்தினால் தடுத்து விடுகிறார் , அதை துரைசாமியின்
மனம் கோணாமல் தன் வாதத்தை எடுத்து வைக்கிறார் .
சிவகாமி & vkr இருவரும் ஆனந்தனிடம் துரைசாமியை குமார் எதோ ஒரு விஷியத்தை வைத்து ப்ளக் மெயில் செய்வதாக சொல்லி விட ,
ஆனந்தன் துரைசாமி யின் வீட்டுக்கு சென்று ,அவர் அறையில் உண்மையை அறிய என்னும் பொது அங்கே இருக்கும் தன் தாயின் படத்தை பார்த்து , , இது தன் தாய் என்றும் சொல்லி விட , அங்கே நடப்பது ஒரு பாச சந்திப்பு
துரைசாமி தான் வீட்டை விட்டு செல்லும் பொது கற்பகம் வயற்றில் இருந்தது தான்(ஆனந்தன் ) என்றும் அப்படி இருக்கும் பொது எப்படி உனக்கு ஒரு தங்கை என்று கற்பகத்தின் நடத்தையை சந்தேகிறார்
கற்பகம் இதை அறிந்து ஆனந்தனிடம் கற்பகம் தன் தோழியின் மகள் என்றும் , தொழி அகால மரணம் அடைந்ததால் , தான் காவேரியை மகளாக வளர்த்து வருவதாக கூறுவதை கேட்டு துரைசாமி நெகிழ்ந்து போய் நிக்கிறார்
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது
தன் மனைவியின் பெயரில் ஆஸ்பத்திரி கட்ட முயற்சி எடுக்கிறார் ,
காவிரிக்கும் , ஆனந்தன்க்கும் அவர்கள் விரும்பும் வாழ்கை அமைகிறது
சுபம்
படத்தை பற்றி
இந்த படத்தில் வழக்கமாக கிராமத்தில் வரும் cliches திமிர் பிடித்த பண்ணையார் , அவரை அடக்கும் கதாநாயகன் , இருவருக்கும் நாடாகும் மோதல் போன்ற விஷியங்கள் இல்லை . நடிகர் திலகத்தின் கிராமிய படங்கள் என்று சொன்ன உடன் நினைவுக்கு வரும் சவாலே
சமாளி , பட்டிகாட்ட பட்டணமா படத்தில் கூட கொஞ்சம் commercial elements , மசாலா அதிகம் (with due respects to both classics Not mentioned with an intention to defame them )
இந்த படத்தை ஒரு தெளிந்த நீர் ஓடை போல , முழு நெல குடும்ப சித்திரமாக கொடுத்து இருப்பார் இயக்குனர் திரு யோகானந்த்
அதற்க்கு காரணம் திரு சோலைமலை அவர்களின் கதை மற்றும் வசனம்
மற்றும் MSV யின் இசை
பாடல்கள் க்கு 60 % என்றால் RR க்கு 100 %. ஒரு ஆர்பாட்டம் இல்லாத கதை , அதுவும் ஒரு மெல்லிய கிராமிய குடும்ப கதை , அதை கெடுக்காத வண்ணம் இருபது அவர் இசை மற்றும் RR , அதுவும் தந்தையும் மகனும் உண்மை அறிந்து சந்திக்கும் காட்சியில் ஒரு நிமிடம் மௌனம் அதில் MSV நடத்தி இருபது ஒரு ராஜாங்கம்
படத்தில் மொத்தம் 4 பாடல்கள் தான்
அதில்
1. நான் பார்த்தாலும் என்ற பாடல் சிவாஜி பட்டணத்தை பற்றி பாடி இருப்பார் பாருங்கள் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,
கண்ணதாசன் வரிகளும் , டாப்
2. நாடு ஆல வந்தாரு பாடல் - செம அரசியல்
3. கிளப் ல் வரும் BGM தூள்
படத்தில் அரசியல் வசனத்துக்கு பஞ்சம் இல்லை
உதரணத்துக்கு :
VKR : அவரு 100 acres வாங்கி இருக்காரு
சிவாஜி : எப்படி அவர் பரம்பர பணக்காரனா இல்லை இப்போ 5 வருஷத்துல வந்தவரா. இப்போ நிறைய நபர் அபப்டி தான்
MRR வாசு பிறந்த நாள் கொண்டதுவது அதில் தண்ணி பார்ட்டி வைத்து , பேசுவது
பஞ்சயத்து தலைவரின் தகுதி என்று MRR வாசு சாராயம் வியாபாரம் செய்வதை குறிபிடுவது , பணக்காரன் தான் தலைவர் என்று சொல்லுவது
சிவாஜி செந்தாமரையின் நடத்தையை வெளி படுத்துவது
நாடால வந்தாரு என்ற பாடல் , MRR தனக்கு தானே பிறந்தநாள் கொண்டாட போஸ்டர் அடிக்க அலைவது என்று ஏக பட்ட அரசியல் அதிரடி
நடிகர்களின் பங்களிப்பு :
மிக மிக சுமாரான கதையை கொடுத்தாலே நம்மவர் பிச்சு உதறி விடுவார், நல்ல கதையை கொடுத்தால் ?
நடிகர் திலகம் ஒரு நடிப்பு சூப்பர் மார்க்கெட் , அவரிடம் எல்லாம் கிடைக்கும் , இந்த அற்புத நடிகரை சரியாக handle செய்தால் , கிடைக்கும் ரிசல்ட் 100 %
அந்த விஷியத்தில் யோகானந்த் சரியாக வேலை வாங்கி இருக்கார் என்று சொல்ல வேண்டும்
முதலில் மிராசு உடன் திரிவது , சண்டை போடுவது என்று செல்லும் அவர் கேரக்டர் அவர் சென்னை சென்ற உடன் , அதுவும் மேஜர் யை சந்தித்த உடன் அடியோட மாறுகிறது
அந்த கிளப் ல் கவர்ச்சி நடனம் பார்க்கும் பொது அசல் கிராமத்தான் தான் , அதுவும் கழுத்தை ஆட்டுவார் பாருங்கள், மற்றும் தான் திருடன் என்று அனைவரும் சொல்லும் பொது அவர் திகைத்து போய் நிற்பதும் , மேஜர் தான் திருடன் இல்லை என்று சொன்ன உடன் அவர் முக பாவத்தை காண கண் கோடி வேண்டும்.
ஒரு கிராமத்தான் சென்னையை பற்றி என்ன நினைப்பான் , எப்படி விவரிப்பன் தெரிந்து கொள்ள வேண்டுமா நான் பார்த்தாலும் பாடல் தான் அதற்கு சாட்சி
அதே சிவாஜி தன் தங்கையை கற்பழிக்க முயற்சிக்கும் MRR வாசுவை தாக்கும் பொது , ஒரு மனிதர் முதல் முறையாக குடிக்கும் பொது , எப்படி நடப்பான் ,அதே ஆள் தெளிந்த உடன் balance இல்லாமல் அடிப்பார் , அதை அப்படியே பிரதிபலித்து இருப்பார் , அதனால் தான் இவர் நடிகர் திலகம்
நாடு ஆல வந்தாரு பாடலில் சும்மா மான் குட்டி போல் துள்ளி ஆடி இருப்பார் , icing of the cake அவர் முக பாவனைகள் .
பஞ்சயத்து காட்சில் அவர் பேசும் வசனம் அனல் .
தான் மிகவும் மதிக்கும் நபர் தான் தன் தந்தை என்பதை அறிந்து கொள்ளும் பொது , வசனம் இல்லை , ஆர்பாட்டம் இல்லை , வெறும் கண்ணே 100 வார்த்தை பேசி விடுகிறது
அவர் உடை முழு கை சட்டையை மடித்து விட்டு இருக்கும் பாங்கு , குண்டாக இல்லாமல் , ஒல்லியாகவும் இல்லாமல் அவர் வேஷ்டி சட்டையில், pant shirt இரண்டிலும் கலக்கி இருக்கார்