http://i57.tinypic.com/25a3dc9.jpghttp://i57.tinypic.com/25f29v8.jpg
Printable View
[QUOTE=Muthaiyan Ammu;1171707]அடேயப்பா அண்ணாவின் 59 வது பிறந்தநாள் விழா நோட்டீஸ் மற்றும் கலைப்பேரொளி எம்ஜிஆர் ரசிகர் மன்றம் & படிப்பகம் நோட்டீஸ் சிறப்பாக உள்ளது
VERY NICE STILL. THANKS MUTHTAYAN SIR
http://i61.tinypic.com/fc6xkj.jpg
COURTESY -NET
டேக் 10
" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !
எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.
1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.
பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.
அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.
தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.
திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.
'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த
நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.
தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.
அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.
கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).
பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த
காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்'
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.
'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.
இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்
" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் "
- என்று ஆசைப்பட்டார்.
-----------
' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,
" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "
- என்று வருத்தப்பட்டார்.
---------
" புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ''
- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
---------
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "
அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,
" தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."
- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
------
திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..' பாடலில்
" கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் " என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=B09X...ature=youtu.be
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy- rajbav
http://mgrroop.blogspot.in/2014/10/m...s-miracle.html
srimgr.com update.
Our Puratchi Thalaivar has quoted in his speech that Karunanidhi had said why MGR party succeeded because MGR is handsome and due to his make up the people voted him. MGR answered by asking one question "Why millions went behind Mahatma Gandhi is he too used makeup". He clearly stated that his political success is nothing to do with makeup and handsomeness.
மலேசியாவில் நடைபெற்ற விழாவில் மக்கள் திலகத்தை பற்றி மதுரை வானொலியின் முன்னாள் இயக்குனர் முனைவர் திரு இளசை சுந்தரம் நிகழ்த்திய அற்புத பேச்சு குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. குருந்தகடின் முகப்பு.
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
http://i60.tinypic.com/2v278e8.jpg
Courtesy - tamil desam
கண்ணதாசனின் கருத்து
கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
‘மதுரைவீரன்’ 175 நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!
வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.
ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.
காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.
(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)
இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.
1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.
தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!
ரஜினி மற்றும் விஜயை தங்களுக்கு ஆதரவாக களம் இறங்க வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று திட்டம் போடுகிறதாம் வட ஹிந்திய வாத்திய கோஷ்டி ;
அதாவது தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகம் உள்ளவங்க ; உச்ச நடிகர்களை முன்னே நிறுத்தினால் ஓட்டை கண்ண மூடிட்டு அப்படியே குத்திருவாங்க ... அப்படித்தான் எம்ஜியார் செயலலிதா ஆட்சிய புடிச்சாங்க ; நாமளும் அந்த ரூட்டையே பாலோ பண்ணி ஆட்சிய புடிச்சிரலாமுன்னு அரை கிறுக்கனுங்களும் குறை கிறுக்கனுங்களும் சேர்ந்து ரூம் போட்டு யோசிச்சி மாஸ்ட்டர் பிளான் போட்டு இருக்காங்களாம்... அந்த மாஸ்ட்டர் மண்டையன் சுப்பிரமணிய சாமி.
அட மட சாம்பிராணிகளா...
புரட்சி தலைவர் எம்ஜியார் வெறும் நடிகனா மட்டும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தால் பரவாயில்லை ; அவர் திரைப்படங்களில் நடிக்கும்போதே அரசியலில் ஈடுப்பட்டார் ; சமூக பார்வை கொண்டிருந்தார் ; மக்களோடு கலந்திருந்தார் ; தான் சார்ந்த திராவிட கட்சியின் கொள்கையை திரைப்படங்களில் புகுத்தி பட்டி தொட்டியெங்கும் கட்சியின் கொள்கைகளை மக்கள் மனதில் தூவி அப்போதே மக்கள் தலைவராக அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்தார் ;
அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரம், பொதுகூட்டம் மூலம் தொடர்ந்து மக்கள் தொடர்பில் இருந்தார் .... எந்த காலத்திலும் தன் சுயநலத்திற்காக மக்களையும் ரசிகர்களையும் அவர் பயன்படுத்தியதே இல்லை ; அதனால்தான் அண்ணாவின் இதயக்கனி புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களால் அரசியலில் வெற்றிக்கனி பறிக்கமுடிந்தது ...
courtesy net
டியர் கலைவேந்தர் சார்
நேற்று மாலை நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விக்கரமாதித்தன் படத்தின் 'தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் ' பாடலை பற்றி நீங்கள் எழுதி மேலும் இந்த பாடல் பார்க்கும் போது என் நினைவு வந்ததாக நீங்கள் எழுதி உள்ளதாக சொன்னார் .நேற்று இன்டெர்நெட் டௌன் ஆகி இருந்ததால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் . இன்று காலை இப்போது முழுமை ஆக படித்தேன். மிக சிறந்த கலை ரசிகர் நீங்கள் என்றால் சொன்னால் அது மிகை ஆகாது .புகழ்ச்சிக்கு கூறுகிற வார்த்தை அல்ல இது.மனதின் அடித்தளத்தின் இருந்து வரும் வார்த்தைகள் .
நீங்கள் கூறியது போல் நானும் கர்நாடக சங்கீதம் ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பிட்டு பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். இந்த பாடல் மிக அருமையான பாடல். சற்று கல்யாணி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் போல் இருக்கும். ஆனால் இது வாசஸ்பதி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் என்று நினைக்கிறன் .
வாசஸ்பதி,லதாங்கி,கல்யாணி மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே ராகம் போல் இருக்கும் .63,64 மற்றும் 65வது மேள கர்த்த ராகங்கள் இவை.
ஒரு சுரம் மற்றும் ஒன்று கொன்று மாறும் .இந்த படத்தின் இசை அமைப்பாளர் ராஜேஸ்வர் ராவ் என்று நினைவு .
இந்த பாடலின் போது நீங்கள் சொன்னது போல் மக்கள் திலகம் தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் போன்று தான் இருப்பார் . சும்மாவா சொன்னார் கவிஞர் 'தேக்கு மரம் உடலை தந்தது ' என்று
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
இந்த பாடலை மீண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டு நிச்சயம் ஒரு நீண்ட ஆய்வு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. அது நடக்கும் என்றே நம்புகிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
இந்த நேரத்தில் நண்பர் எஸ்வி அவர்களையும்,முரளி அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்
ENJOY THIS SONG
https://www.youtube.com/watch?v=hvRjaE1q_cM
ANNAMITTA THEIVAM
http://i1170.photobucket.com/albums/...ps89ca39ac.jpg
ராமச்சந்திர தெய்வம் சூரிய பிரகாசமா? சந்திர பிரகாசமா?
http://i58.tinypic.com/1zvwy9j.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தமிழக சட்டசபைக்கு திடீர் தேர்தல் வந்தால் யார் வெல்வார்கள்?
திமுக
13.86%
954 Votes
இல்லை, அதிமுகவே வெல்லும்
44.5%
3,062 Votes
ரஜினி வந்தால் பாஜக வெல்லலாம்
10.86%
747 Votes
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது
6.29%
433 Votes
அமையும் கூட்டணிகளைப் பொறுத்தது
15.07%
1,037 Votes
சத்தியமா 'கெஸ்' பண்ணவே முடியலைங்க
9.42%
648 Votes
மொத்த ஓட்டுக்கள்: 6,881
Thank you for voting
Click here for Free Coupons
courtesy one india
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
விக்கிரமாதித்தன் படத்தில் இடம் பெற்ற''தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் '' பாடல் பற்றிய முழு விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை நீங்கள் பாராட்டும்
விதம் அருமை .உங்கள ரசனைக்கு வாழ்த்துக்கள் . நடு நிலைமை வகிக்கும் உங்களது துணிச்சலுக்கு ஒரு சபாஷ் ,
Impact of Makkal Thilagam Films referred by the Judge on quality of Tamil Films
http://i501.photobucket.com/albums/e...ps6fbf97b5.jpg
http://i57.tinypic.com/2i8dvtk.jpg
Couresty: Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு,
எனது வேண்டுகோளை ஏற்று ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’ பாடல் வாசஸ்பதி ராகம் என்று தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நான் உங்களை நேரில் பார்த்தில்லை, பேசியதில்லை. இருந்தாலும் மனதைக் கவரும் மதுரகானங்கள் திரியில் தங்கள் எழுத்துக்களை படித்ததை வைத்து நீங்கள் சிறந்த சங்கீத ரசிகராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது கணிப்பு தவறவில்லை. என்னைப் பாரட்டியதற்கு நன்றி. என்றாலும் நான் அதற்கு தகுதியில்லாதவன். (ஏதோ அடக்கத்துக்காக கூறவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராகங்கள் பெயரைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் 63,64, ....65வது மேளகர்த்தா ராகங்கள் என்பது நெஜமாவே புரியல சாமியோவ்..)
எனது ஒரு கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி. இந்தப் பாடலைப் பற்றி ஆய்வு செய்து மக்கள் திலகம் திரியில் எழுத வேண்டும் என்ற எனது இன்னொரு கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்பது, அதற்கான ஆவல் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கூறியதிலிருந்தே தெரிகிறது. விரைவில் வெளியாக இருக்கும் உங்களின் அந்த கட்டுரைக்காக முன்கூட்டியே நன்றி. நான் எழுதியது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவித்த நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி. சார் தங்களது பதிவுகள் பிரமாதம். அதற்கான உழைப்பை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகாலை 5.30 மணிக்கே ஆரம்பித்து விடுகிறீர்கள். திரு.ராமமூர்த்தி சார், திரு.கலியபெருமாள் சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோரின் பதிவுகள் அற்புதம். கலியபெருமாள் சாரிடம் மூட்டைக் கணக்கில் ஆவணங்கள் இருக்கும் போலிருக்கிறது. தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடல் காட்சியை தரவேற்றம் செய்த திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி. திரு. ராமமூர்த்தி சார் குறிப்பிட்டதைப் போல ஸ்டில்ஸ் என்றால் அது திரு. செல்வகுமார் சார்தான்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடித்த படங்களில் இருந்தும் பாடல் காட்சிகளில் இருந்தும் நீங்கள் ரசித்தவற்றை எழுதினால் எல்லாரும் ரசிக்கலாம். முரசு, சன் லைப் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தலைவரின் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றை பார்த்து உங்களை கவர்ந்தவற்றை எழுதலாம். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் ரசித்ததை எழுதலாம்.
குறிப்பாக திரு. ரூப் குமார் சார் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். ஒளிவிளக்கு பற்றி நான் கூறியதைத் தொடர்ந்து, தலைவரும் சோவும் சந்தித்துப் பேசும் காட்சியை அவர் குறிப்பிட்ட விதமும் இரண்டு கேமராக்களை பயன்படுத்தி அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கிய விதத்தையும் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும் சமீபத்தில், பல்லாண்டு வாழ்க படத்தில் ஒன்றே குலமென்று பாடுவோம் பாடல் காட்சியில் இடம் பெற்ற ஸ்டில்லை பார்த்து தலைவரின் விரல்களில் நகம் வெட்டப்படாமல் இருந்தது குறித்து வியப்பு தெரிவித்திருந்தார். என்ன ஒரு கூர்மையான கவனிப்பு. அதன் பிறகுதான் நானே கவனித்தேன். (அதற்கும் காரணம் இருக்கு சார். ஜெயிலர் ராஜன் 6 கைதிகளை திருத்துவற்காக ஊரை விட்டு ஒதுக்குப் புறத்தில் விடுதலை நகரில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருக்கிறார். அது ஒரு அத்துவானக் காடு. பக்கத்தில் கடைகள் கிடையாது. அதனால், கத்திரிக்கோலோ நெயில் கட்டரோ கிடைக்கவில்லை. தலைவருக்கு நகம் கடிக்கும் பழக்கம் கிடையாது. அதான் அப்படி...... எப்பூடி?)
சமீபத்தில் எங்களது சகோதரர்கள் யாரும் எழுத்தில் ‘இளைத்தவர்கள்’ அல்ல என்று கூறியிருந்தேன். அதை அனைவரும் நிரூபிப்போம். (அதற்காக யாரும் பெரிய பாயிண்டில் போட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i60.tinypic.com/4uv14p.jpg
Couresty: The India Movie News, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற இந்த சண்டை காட்சியில் மக்கள் திலகமும் ,நடராஜனும் மோதும் .விறு விறுப்பான காட்சிகள் .மக்கள் திலகத்தின் சுறு சுறுப்பான நடிப்பு அமர்க்களம்
http://youtu.be/jTj2XZ5VPB8 .
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு
"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்."பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.
"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வபடங்கள் மிகவும் அருமை .இதுவரை பார்க்காத நிழற்படங்கள் .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
உங்கள் பதிவுகள் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது .புதுமையாக உள்ளது .ரசனைகள் நிறைந்த உங்கள்
பதிவுகள் மக்கள் திலகத்தின் திரிக்கு பெருமை சேர்க்கிறது . தொடர்ந்து அசத்துங்கள் .
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
மக்கள் திலகம் திரியில் உங்களது பங்களிப்பு மன நிறைவு தருகிறது . நன்றி .:clap::clap::clap::clap::clap::clap::clap: