http://i59.tinypic.com/27xdnqx.jpg
Printable View
http://i60.tinypic.com/epoisy.jpg
CONGRATULATIONS Mr. LOGANATHAN for having crossed 7,000 posts.
திரு.சைலேஷ் சார்,
போலந்து நாட்டின் மொழியில் வெளியாகும் கட்டுரையில் தலைவரைப் பற்றி அதுவும் அவர் மறைந்து 27 ஆண்டுக்கு பிறகு வெளியாகிறது என்றால் அவரது புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருப்பது நமக்கெல்லாம் பெருமை.
நீங்கள் கொடுத்துள்ள இணையதள இணைப்பைப் பார்த்தேன். அதில் போலிஷ் மொழியில் கட்டுரை வெளியாகியிருப்பது தெரிகிறது. அதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளீர்கள். உங்களுக்கு இந்திய மொழிகள் பல தெரியும் என்று எனக்குத் தெரியும், போலிஷ் மொழியும் தெரியும் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள். தகவலை பதிவிட்டமைக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,
ஹேட்ஸ் ஆஃப் சார். அடிமைப்பெண் படத்தைப் பற்றிய விரிவான தகவல்கள், தங்களின் படம் பார்த்த அனுபவங்கள், படத்தின் சாதனைகள், இந்தியில் நலிந்த கலைஞர்களுக்கு தலைவர் உதவி வழங்கியது, ஆதாரபூர்வ செய்திகள், படங்கள், பொருத்தமான ஸ்டில்கள் என்று பெரிய விருந்தே படைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.
எனது கணிப்புப்படி தகவல்களை நினைவுபடுத்தி, அதை கோர்வையாக தொகுத்து, டைப் செய்து, ஸ்டில்களையும் புகைப்படங்களையும் பொருத்தமான இடங்களில் போட்டு....குறைச்சலாக பார்த்தாலும் இந்தப் பதிவுக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரின் பக்தர் என்பதை தங்கள் உழைப்பின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
சமீபத்தில் மதுரையில் அடிமைப்பெண் படம் திரையிடப்பட்டு (அதுவும் அடிக்கடி திரையிடப்பட்டும்) ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வசூலைக் குவித்துள்ளது என்றால் படம் வெளியாகி 46 ஆண்டுகள் கழித்தும் இப்படி என்றால், வேங்கையனின் பாய்ச்சலை வியந்து பார்த்து வணங்குவதைத் தவிர, வேறென்ன செய்ய? இதுவே, ஏ.சி. திரையரங்கமாக இருந்தால் கட்டணம் இருமடங்காக இருந்திருக்கும். வசூல் ரூ.2 லட்சத்தைத் தாண்டியிருக்கும் என்பதற்கு ஏ.சி. அல்லாத தியேட்டரில் வசூலான ரூ.1 லட்சத்து 9 ஆயிரமே சாட்சியாக உள்ளது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.செல்வகுமார் சார்,
உழைப்பாளர் தினத்தையொட்டி தலைவரின் கையெழுத்தை எல்லாரின் பார்வைக்கும் பரிசாக வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி புரட்சித் தலைவர் அரசு காரணமின்றி கலைக்கப்பட்டது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படத்தை தலைவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசு கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்போதும் தலைவர் நிலை குலையவில்லை. சமையல் கலைஞர் மணி என்பவரை அழைத்து ‘என்ன ஸ்வீட் இருக்கிறது?’ என்று கேட்டு வீட்டில் இருந்த லட்டுகளை வரவழைத்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். முழு படத்தையும் அமைதியாக பார்த்து ரசித்து பாகவதரின் நடிப்பையும் பாடல்களையும் பாராட்டியிருக்கிறார். இந்த தகவல்களை திரு.மணியன் பதிவு செய்திருக்கிறார்.
இதயம் பேசுகிறது வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்று ஒரு ஜோதிடர் ராசிபலன்கள் எழுதுவார். அவர் ‘தலைவரின் ஜாதகப்படி இப்போது நேரம் சரியில்லை. அதிமுக ஆட்சிக்கு ஆபத்து’ என்று ஆட்சி டிஸ்மிஸ் ஆவதற்கு முன்பே கூறியிருந்தார். டிஸ்மிஸ் ஆன பிறகு, நம்புங்கள் நாராயணனை தோட்டத்துக்கு வரும்படி போனில் அழைப்பு சென்றிருக்கிறது. தயக்கத்துடனேயே திரு.நாராயணன் போயிருக்கிறார்.
தலைவர் அவரை சாப்பிடச் சொல்லி உபசரித்து, குடும்ப விவரங்கள் கேட்டறிந்து ஒரு தட்டில் ரூ.5,001 பணம் வைத்து (80-ம் ஆண்டில் இது பெரிய தொகை) நாராயணனிடம், ‘உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்’ என்று சொல்லி கொடுத்திருக்கிறார். தலைவர் மறைந்த பிறகு ஒரு பேட்டியில் இதை திரு. நாராயணன் தெரிவித்திருந்தார்.
அரசு டிஸ்மிஸ் ஆன பிறகு 41வது நாளில் மார்ச் 31ம் தேதியன்று உங்களுக்கு நோட்டு புத்தகத்தில் தலைவர் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்ததும் மேலே சொன்ன நினைவுகள் வந்து கண் கலங்கினேன். இப்படி, எந்த சூழலிலும் நிலைகுலையாத உறுதியோடு, தனது ஆட்சி டிஸ்மிஸ் ஆகும் என்று சொன்னவரின் திறமையையும் பாராட்டி பரிசளித்து , நெருக்கடியான சூழலிலும் பார்க்க வந்த உங்களைப் போன்ற தொண்டர்களையும் சந்தித்து கையெழுத்து போட்டு கொடுக்கிறார் என்றால், அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அடிமைப் பெண் திரைப்படம் வெளியான நாள் மற்றும் உழைப்பாளர் தினத்தையொட்டி செய்திகள், படங்கள், விளம்பரங்கள், ஆவணங்களை வெளியிட்ட திரு.குமார் சார், திரு.வினோத் சார், திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. முத்தையன் அம்மு, திரு.வி.பி.சத்யா ஆகியோருக்கு நன்றி.
கோவை டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டுள்ள தகவல் மற்றும் கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்கள் புரட்சித் தலைவரைப் பற்றிய நூலை உருவாக்கி வருவது குறித்தும் தகவல் தெரிவித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பு நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.லோகநாதன் சார்,
தாங்கள் குறிப்பிட்டுள்ளது மிகச்சரி. வாஹினி படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து பற்றி அறிந்ததும் மக்கள் திலகம் அங்கு சென்று உதவியதும் அதற்கு திரு.நாகிரெட்டியார் நன்றி தெரிவித்ததும் பத்திரிகைகளில் வந்து எல்லாரும் அறிந்த செய்தி.
திருமதி. சரோஜாதேவி அவர்களுக்கும் இது தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்ததுதானே என்று அவர் கூறாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர் கூறியும் நாளிதழில் அந்த தகவல் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். அப்படி பேசி வெளியிடாமல் இருந்திருந்தால், வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள். மேலே உள்ள படத்துக்கு கீழே பாருங்களேன்.
‘சரோஜா தேவி பேச்சு’ என்று இருக்க வேண்டியதற்கு பதிலாக ‘ச ர ஜோ ஜா தேவி பேச்சு’ என்று தவறாக அச்சாகியிருக்கிறது. என்னத்தைச் சொல்ல.... ? பாவம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வார இதழ்கள், நாளிதழ்களில் தலைவரைப் பற்றிய என்ன செய்தி வந்தாலும் அதை தவறாமல் பதிவிட்டு, 7,000 பதிவுகள் கண்டு தலைவரின் புகழ் பாடி வரும் திரு.லோகநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i62.tinypic.com/2h5tz6p.jpg
அடிமைப்படுத்தும் பெண்
அடிமைப்பெண் திரைக்காவியம் தலைவரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. நம் எல்லாருக்குமே மனதுக்கு எழுச்சியூட்டும் காவியம். படத்தைப் பற்றிய ஆதாரபூர்வ அரிய தகவல்கள், சிறப்புகளை பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுபடத்தைப் பற்றியும் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பையும் எழுத வேண்டுமானால் நமது திரியின் இந்த பாகம் போதாது. நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக பார்ப்போம்.
படத்தின் ஹைலைட்களான ஈட்டி முனைகளுக்கு மேல் கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் தலைவர் போடும் வாள் சண்டை, உடலை பிய்த்து எறியும் வகையில் இரு கைகளும் கட்டப்பட்டு அந்த கயிறு பெரிய உருளையுடன் பிணைக்கப்பட்டு இழுக்கப்படும்போது திரண்டிருக்கும் கட்டுடலை காட்டியபடி கைகளை ஒன்று சேர்த்து கயிறை அறுந்து விழச் செய்யும் இடம் (தியேட்டரில் இந்தக் காட்சியின் போது சூடம் காட்டப்படாமல் நான் பார்த்த காட்சிகள் குறைவு) மனோகருடன் மோதும் காட்சி, பின்னர் அரண்மனையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சியில் தலைவரின் சுறுசுறுப்பு,பாடல்கள், ஜஸ்டினுடன் சண்டை, கிளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை என்று ஒவ்வொன்றையும் பிரித்து மேய ஆசை.
இப்போதைக்கு, நம் எல்லாரையும் ‘கவர்ந்த தாயில்லாமல் நானில்லை..’ படத்தின் பாடலுக்கு முன் வரும் காட்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் திரைப்படத்தில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம் இழையோடும். (தலைவர் நடித்த தாயின் மடியில் படத்திலும் ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்... பாடல் உட்பட) ஆனால், தாயைப் பற்றி உற்சாகமாக, பாடலை கேட்டாலே தாயைப் பற்றி பரவசமாக மகிழ்ச்சியாக நினைக்கத் தூண்டும் பாடல் ‘தாயில்லாமல் நானில்லை...’.
பாடலுக்கு முன்பு ‘உங்கள் தாயை காட்டுகிறேன்.. ’என்று தலைவரை செல்வி.ஜெயலலிதா அவர்கள் அழைத்துச் செல்வார். தாயை அவர் காட்டியதும் பசுவைக் கண்ட கன்று போல ‘அம்மா.. அம்மா...’ அழைத்தபடியே கைகளை உயரே தூக்கி கும்பிடுவார் தலைவர். தாயிடம் தனக்குள்ள பக்தியை காட்டியிருப்பார் என்று கூட சொல்ல முடியாது. உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டு கும்பிட்டிருக்கிறார்.
அந்தக் காட்சியில், மலைப்பகுதியில் எதிர் திசையில் உள்ள தாயைப் பார்க்கும் ஆர்வத்தையும் அவசரத்தை காட்டும் வகையில் 60 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து கீழே ஆற்றில் குதிப்பதாக காட்சி. (இந்தக் காட்சியில் தனக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கு படத்துக்காக பேசியதை தவிரவும் தனிப்பட்ட முறையில் பணம் அளித்திருக்கிறார் தலைவர். 25 ஆண்டுகளுக்கு முன் ‘தேவி’ வார இதழில் எஸ்.விஜயன் எழுதிய தொடரில் அந்த நடிகரின் பேட்டியை வெளியிட்டிருந்தனர். பேசிய பணத்தை கொடுத்தாலே போதும் என்றாலும் சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கிறார் என்றால் அது உழைப்பாளிகளுக்கு தலைவர் தரும் மரியாதை. அப்படி கூடுதலாக பணம் கொடுத்தது கூட யாருக்கும் தெரியாது. தலைவர் மறைந்த பிறகு அந்த நடிகர் பேட்டியில் சொல்லித்தான் தெரிந்தது.) உயிரை துச்சமாக மதித்து மலையில் இருந்து குதிக்கும் அளவுக்கு தாய் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சி.
தாய் பண்டரிபாயை சந்திக்கும்போது அவர் முகத்தைக் காட்ட மறுப்பார். நமது நாட்டைச் சேர்ந்த பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட பிறகுதான் என் முகத்தை பார்க்கலாம் என்று நிபந்தனை விதிப்பார். அப்போது, தலைவர் பண்டரிபாயின் காலைக் கட்டிக் கொண்டு அழும்போது, அவரது காலில் சங்கிலி பிணைக்கப்பட்டிருப்பதை பார்ப்பார். உடனே அவரின் அழுகை மாறி, முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க கையாலேயே சங்கிலியை அறுத்தெறிய முயற்சிப்பார். தாயின் காலில் விலங்கு மாட்டப்பட்டிருந்தால் யாருக்கும் இப்படித்தான் கோபம் வரும். சுத்தியல், கத்தியை தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த உணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் தலைவர். அவரை, ‘நமது நாட்டின் அடிமைப்பட்டிருக்கும் பெண்களின் விலங்கொடித்து கடைசியாக என் விலங்கை அகற்று’ என்று பண்டரிபாய் தடுத்து விடுவார். அதற்கு கட்டுப்பட்டு பிறகு தாயிடம் இருந்து விடைபெறுவார் தலைவர்.
அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமது நெஞ்சை பிசையும். அதை சொல்லும்போது அழுதபடியே கும்பிடுவார். இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னை அறியாமல் என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியிருக்கிறது. நான் ஏதோ தலைவரின் நடிப்பை புகழ வேண்டும் என்பதற்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. இந்தக் காட்சியை பார்த்த நம் எல்லாருக்குமே இந்த உணர்வு இருந்திருக்கலாம்.
காட்சியின் சூழலும் சொல்லும் வார்த்தைகளும் அப்படி. தன் தந்தையைக் கொன்று நாட்டை அடிமைப்படுத்தியிருக்கும் சர்வாதிகாரியை வீழ்த்தி நாட்டையும் மக்களையும் காக்க வேண்டும். அந்த சபதத்துக்காக தன் மகனைக் கூட சிறுவயது முதல் பார்க்காமல் தன்னையே வறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாய். தலைவர் ஏற்றுள்ள வேங்கையன் பாத்திரமோ தனது கடமைகளையும் பொறுப்புகளையும் இப்போதுதான் உணரவே செய்கிறது. சர்வாதிகாரியை வீழ்த்த ஆள், அம்பு, சேனைகளை திரட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தாய் இருக்க வேண்டும். படை திரட்டி சர்வாதிகாரியுடன் நடக்கும் போரில் தனது உயிரே கூட போகலாம். அதன் பிறகு தாயை பார்க்கவே முடியாமல் போய்விடலாம்.
இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சியின் சூழலில் தலைவரின் நடிப்பும் சொல்லும் வார்த்தைகளும் நெஞ்சைப் பிழிவது இயற்கைதானே. உருக்கமான அந்தக் காட்சியில் அழுதுகொண்டே கும்பிட்டபடி தலைவர் சொல்லும் வார்த்தைகள்...
‘‘அம்மா... என்ன மறந்துடாதீங்கம்மா’’
இனி எப்போது பார்ப்போமோ? என்ற ஏக்கத்துடன் கூடிய உள்ளக் குமுறலின் வெளிப்பாடாய் வார்த்தைகள்.
உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து ஆளாக்கிய அன்னையின் பாசத்துக்கு அடிமையாகாதார் யார்?
தலைவரின் அடிமைப்பெண்.... நம்மை அடிமைப்படுத்தும் பெண்.... தாய்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
sir nice writing i given you tube link for that particular scene starts from 1.04 mins to 6.04 mins
https://www.youtube.com/watch?v=5XU6P2sdLuI
நான் குறிப்பிட்ட காட்சியை எல்லாரும் பார்க்கும் வகையில் தரவேற்றிய திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி. இந்தக் காட்சியை பார்க்கும் தாய்ப்பாசம் உடைய யாரும், எவ்வளவு கல்நெஞ்சங்களாக இருந்தாலும் கண் கலங்காமலாவது இருக்க முடியாது.
மிக்க நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தற்பொழுது சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
காவல்காரன்
மக்கள் திலகத்தின் மாறு வேட நிழற் படங்கள் மிகவும் அருமை.நன்றி முத்தையன் சார் .
அடிமைப்பெண் -தாய்ப்பாசம் பற்றி அருமையாக எழுதிய திரு கலைவேந்தனுக்கு பாராட்டுக்கள் .
THANKS RAVICHANDRAN SIR
MY FAVOURITE SCENES
https://youtu.be/NLXGf8hSqCw
https://youtu.be/85rU6F8MzD8