https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a7&oe=57A08F2B
Printable View
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...cd&oe=579C08A7
From Divya Films' FB page.
May 1 உழைப்போர் மேன்மை தினம் இன்று! உழைப்பால் உயர்ந்தவர்தம் நினைவுகளைப் போற்றுவோம் !
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?
உழைப்பின் பலன் மட்டுமே இனிக்கும் !
https://www.youtube.com/watch?v=YtejNDSHCKkQuote:
உழைப்பும் நேரம் தவறாமை மற்றும் நேர்மை என்னும் நடிகர்திலக உதாரண குணங்களைக் கடைப்பிடிக்கும் போதுதான் மேன்மை பெறும் !
https://www.youtube.com/watch?v=geYyN5_QYKg
https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo
புனித வாழ்க்கை வாழ்ந்த பொன்னான தம்பதியரே! உங்கள் திருமண நாளில் நீங்கள் இல்லாவிடினும் நீங்கள் வாழ்ந்த உதாரண வாழ்க்கை உலகம் அறிந்ததே. இந்த நன்னாளில் உங்கள் திருவடிகளை மனதில் நினைத்து வணங்கி ஆசி பெறுகிறோம். உங்கள் இல்லறமே நல்லறம். அருள் புரிக...ஆசி தருக.
http://archives.deccanchronicle.com/...t3%20(1)_0.jpg
Thanks to palakkadwalks.blogspot.in.
'King Of Acting', Shivaji Ganesan Greeted By 'Emperor Of Music', Chembai Vaidyanatha Bhagavathar. Photo Took On The Actor's Residence In Chennai.
https://2.bp.blogspot.com/-uOjNs72LB...aryChembai.jpg
இன்று நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
வள்ளுவருக்கு வாசுகி போல நமது கடவுளுக்கு பத்தினியின் வருகை நாள்.
உழைப்பவர் உயர வேண்டும் என்ற நோக்கில் ,உழைப்பவரின் உரிமையை இறுதி செய்த உழைப்பவர் தினம் மே திருநாள்.
உழைப்பாளிகளுக்கே ,தன திறமை சார் அயலா உழைப்பால் பெருமை சேர்த்த நமது கடவுள் நடிகர்திலகத்தின் மூன்று படங்களை இன்று
பிரசாதமாய் படைப்பது எனது வருடாந்தர வைதீகம்.
ஒன்று தற்செயலாய் சங்க நடிவடிக்கையில் தள்ள படும் ஆலை தொழிலாளி, ஒன்று நில சுவாந்தார்களுடன் முரண்படும் விவசாய தொழிலாளி,மற்றது உயரிய நோக்கம் கொண்ட நகர ரிக்ஷா தொழிலாளி.
மூன்றும் மூன்று வேறுபட்ட காலங்களின் வெவ்வேறு நடிப்பு முறைகள்.
படைப்பது என் கடமை,பெருமை,உரிமை.
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.
இரும்புத்திரை (iron curtain )- 1960
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.
நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.
அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).
ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
பாபு- 1971.
சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.
உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.
சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.
பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.
பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.
நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.
பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.
தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)
சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.
டாக்டர் சிவா .. நடிகர் திலகத்தின் உணர்வுப் பிரதிபலிப்புகள்
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...ce&oe=57A6B858
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...c8&oe=57ACEADC
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...e5&oe=579C82E7
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2e&oe=57ACBE73
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...32&oe=579FE93B
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...82&oe=57A6BF65
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...c1&oe=57A84389
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...1e&oe=57B27295
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...13&oe=57BD9725
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f5&oe=57AF486E
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f0&oe=57B5D0C5
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...6b&oe=57E6CD91
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a2&oe=579EF9A2
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...8b&oe=57A26A81
ராகவேந்திரன் சார்,
டாக்டர் சிவா நிழற்படங்கள் படுநேர்த்தி. அனுபவித்து இமேஜ் எடுத்துள்ளீர்கள். பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன். இந்தப் படத்தில்தான் தலைவர் என்ன ஒரு அழகு! நம்மில் சிலருக்கு இப்படத்தில் தலைவரின் ஹேர்ஸ்டைல் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தங்கள் சிரத்தையான உழைப்புக்கு என் நன்றிகள்.
'கைகொடுத்த தெய்வம்' 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா'விற்கு கை கொடுத்துப் பாராட்டிய ராகவேந்திரன் சார், முரளி சார், ஆதிராம் சார், கோபால் சார் மற்றும் 'லைக்'குகள் வழங்கிய சிவா சார், கோபு சார், பரணி சார் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
http://i67.tinypic.com/sq79eh.jpg
(முகநூல்களில் இருந்து)
http://i64.tinypic.com/2yoxq21.jpg
(முகநூல்களில் இருந்து)
http://i67.tinypic.com/2yvtkwg.jpg
(முகநூல்களில் இருந்து)
http://oi66.tinypic.com/zl6es3.jpg
(முகநூல்களில் இருந்து)
http://i68.tinypic.com/f9fa79.jpg
(முகநூல்களில் இருந்து)
சிவா சார்,
முக நூலிலிருந்து இருந்து தலைவரின் அற்புதமான பல்வேறு படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
வரும் 6.5.16 வெள்ளி முதல்
மதுரையை கலக்க வருகை தரும்
மக்கள்தலைவரின் பச்சை விளக்கு கொண்டாட்டம் ஆரம்பம்.
பச்சை விளக்கு படத்திற்கு
மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு தியேட்டரில் வைக்கப்பட்டது.
http://i64.tinypic.com/1z6s7zp.jpg
(முகநூல்களில் இருந்து)
சிவகாமியின் செல்வன்
35 வது நாள் .
http://i67.tinypic.com/a9whlk.jpg
(முகநூல்களில் இருந்து)
இப்படி ஒரு போஸ் தர உலகின் எந்த மூலையில் உள்ள நடிகனாலும் முடியாது..
http://i67.tinypic.com/21p04g7.jpg
(முகநூல்களில் இருந்து
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
Visali Sriram·Saturday, 30 April 2016
நடிகர் திலகம் திருமணநாள் பதிவு.....
என்றும் நாம் அனைவருமே மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு நிகழ்வு....திருமணம்...இரு மனம் கொண்டு இணந்து ஒரு மனமாகி வாழ்ந்து வளம் பெற வேண்டிய இனிய நாள்.இல்லறமே நல்லறம்...தாம்பத்தியம் ஒரு சங்கீதம்....எல்லாம் தெரிந்தது தானே?....இல்லை என்கிறேன் நான்...
ஒரு பருவத்தில் துணையை நாடி சேர்வதோ,மேளமும் தாலியும்,அட்சதையும்,விருந்தும்,முதலிரவும் அதைத் தொடரும் உடலுறவு மாத்திரமே திருமணமா????கேட்டுக் கொள்ளுங்கள் உங்களையே!!!
இல்லை பெற்றவர் கடமை முடிந்தது பிள்ளைகளின் கல்யாணத்தோடு என்பதா???இப்படியெல்லாம் நாம் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே அன்று முதல் இன்று வரை 100க்கு 80 திருமணம் ஒரு அட்ஜஸென்ட்மென்டிலும்(நம் காலம்)மீதி 20 (இக்காலம்)மணமுறிவிலும்...நீதிமன்ற வாசலிலும் நின்று தவிக்கிறது...மொத்ததில் ஒரு ஊசலாடல்.
சரி.....அப்படியென்றால் ஒரு வெற்றியான தாம்பத்தியத்திற்கு சூத்திரம்தான் என்ன????
கவியரசர் சொல்கிறார் அதைப் பகிர்கிறேன்.இந்தப் பாடல் நான் முதன் முதலில் கேட்ட போது எனக்கு வயது 8...அப்போது எனக்குப் புரிந்தது,பிடித்தது பாடலின் இசை......ம்ம் ம்ம் ம்ம்...திரையில் தோன்றிய ஆணும் பெண்ணும் என்னைச் சுண்டி இழுத்த அழகு...அப்போது வரிகளின் வலிமை புரியவில்லை.
பருவம் வந்தது....வரிகள் புரிந்தும் புரியாமலும்....ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்வு தோன்றியது.திருமணம் ஆனது...அப்போது இப்படியெல்லாம் பாடணும் என்று தோன்றியது.....யதார்த்ததிற்கு அதில் இடம் இல்லை.சரி.....கட்டிலுக்குப் பின் தொட்டில்...பிள்ளைகள்...அவர்கள் கடமை...எப்படி எப்படியோ வாழ்க்கை சக்கரம் சுழன்றாலும் அடி மனதில் பாடல் மாத்திரம் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது...இதில் நாம் அனைவருமே ஏதோ ஒரு முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது....இப்போது பாடல் வரிகள் முக்கியத்துவம் பெற்றது....கண்ணதாசன் என்கிற அந்த மாபெரும் ஞானி எனக்குள் ஒரு கருத்தை ஆழமாக விதைத்தது புரிந்தது...
தாம்பத்தியம் என்பது என்ன???அது கட்டிலோ...தொட்டிலோ,தொடுதலோ இல்லை......அது ஒரு புரிதல்...உடலாலும் மனதாலும் நம்மை கணவனுக்கோ..மனைவிக்கோ ஆத்மார்த்தமாக ஒப்புக் கொடுப்பது....வேறு மூன்றாம் மனிதர் நுழைய ஊசிமுனை இடம் கூட கொடுக்காமல்....மாமியார் பிரச்சினை...நடத்தை சரியில்லை...சுதந்திரம் இல்லை...ஆணாதிக்கம் இதெல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் சப்பைக் கட்டு...அங்கு அறிவுக்கோ,திறமைக்கோ,படிப்பிற்கோ,பணத்திற்கோ,அழகுக்க ோ,சுதந்திரத்திற்கோ...ஆணாதிக்கத்துக்கோ எதற்கும் இடமில்லை.....அங்கு இருக்க வேண்டியது பரஸ்பர அன்பு...நம்பிக்கை...பொறுமை....என்னவள்..என்னவன ் என்கிற சுயம்....
இங்கு ஒரு இளம் ஜோடி...காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று இணைந்த இல்லறம்....அவர்களின் தேன் நிலவுப் பாடல்...மனம் விட்டுப் பேசிக் கொள்வது போல ஒரு பாடல்.
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்...உறவாட வேண்டும்....அவள் ஆசை(திருமணமான புதிதில் மோகம் முப்பது நாள் ரகம் அல்ல இது)என்றும் எப்பொழுதும் இது தம்பதிகளுக்குள் இருக்க வேண்டிய ஒரு நெருக்கம்.
அவனின் ஆசை "நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்.நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்...ம்ம் ம்ம் ம்ம்.அப்படியென்றால் அவன் வேலை நிமித்தமாக உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் இவளையும் கூட்டிக் கொண்டு போக வேண்டுமா?????இல்லை இல்லை...இது.."பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா..உந்தன் பச்சை நிறம் தோணுதடா நந்தலாலா"அந்த ரகம்...
உடல் எங்கிருந்தாலும் நினைவு மட்டும் அவளோடு.....அவளுக்கும் காணும் பொருள் எல்லாம் அவனாகவே இருக்க வேண்டும்...
உயிர் வாழ உணவு வேண்டும்...அந்த உணவு கூட அவனுக்காகவே உண்ண வேண்டும்...அவள் நன்றாக இருக்கும் வரை தானே அவனுக்கு ஆனந்தம்..."பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்..உனக்காக வேண்டும்..ம்ம்
பாவை(நான்)உன் முகம் பார்த்து நீ உண்ணும் அழகையும் நிறைவையும் பார்த்து பசியாற வேண்டும்..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்...எனக்குள்ளே நீ நுழைந்து கொண்டாலே நான் தாய்மையின் பரிபூரணம் எய்துகிறேன்...என் நினைவில் கூட நான் ஒரு தாய்க்கு சமமாக உன்னைப் பேணுவேன்..அப்பொது நீ"மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்..நீயாக வேண்டும்....
இனிமேல் வருவது தான் சூத்திரம்...சொல்லென்றும் மொழி என்றும் பொருளென்றும் இல்லை..பொருளென்றும் இல்லை...சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...விலை ஏதும் இல்லை....."முடிந்த வரை மௌனம் காத்துக் கொள் பெண்ணே...தர்க்கமும்,வீண் விதண்டாவாதமும் வேண்டாம்....இருவரில் ஒருவர் சூடாகும் போது அடுத்தவர்...அதுவும் பெண் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலம்...ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் AVOID ARGUEMENTS.
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே....உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை...இப்படி நாம் ஒருவருள் ஒருவர் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி இரண்டும் ஒன்றாய்க் கலந்திடாதோ???
வேறேதும் இல்லை.ஒவ்வொரு வரியிலும் முடிவில் ஒரே சொற்றொடரையும் ஏன் இரண்டு முறை சொல்கிறார் கவியரசர்...அவருக்கு கற்பனை வளம் இல்லையா????அதன் வலிமையை அழுத்தி உரைக்கவே இரண்டு முறை போலும்.வேறேதும் இல்லை என்று சரோஜா தேவி பாட பிள்ளைச் சிரிப்போடு நடிகர் திலகம் ம்ம் ம்ம் சொல்லும் அழகு இருக்கிறதே..ஆஹா...
பாடல் முழுவதும் சரோஜாதேவி,நடிகர்திலகத்தின் அன்யோன்யம் திரைப்பட ஜோடி என்று ஒரு நொடி கூடத் தோன்றாது என்றால்...பாடி இருக்கும் டி.எம்.எஸ்,சுசீலாம்மாவின் பரிபூரண பங்களிப்பு அர்ப்பணிப்பு என்று அடித்துச் சொல்லலாம்.
இந்தப் பாடலைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி.....நடிகர் நாகேஷ் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்....அழுது விடுவார் பாடலைக் கேட்கும் போதே....
இப்படி ஒரு காலத்தை வென்ற பாடலை சிவரஞ்சனி ராக ரசத்தைப் பிழிந்து வடித்துத் தந்திருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...டி.எம்.எஸ் சுசீலாம்மா டூயட் பாடலில் என்றும் இதற்கு முதலிடம்....
பாடல் உங்களுடன்..https://www.youtube.com/watch?v=G6r...
(முகநூல்களில் இருந்து
Mr Neyveliar,
Fantastic analysis of Ayirathil Oruthiyamma. Awaiting for your stunt series and Dress seris of Thalaivar.
மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 6.5.2016 வெள்ளி முதல் வெளியாகும் மக்கள்தலைவரின் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் தியேட்டரில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்.
http://www.sivajiganesan.in/Images/030516_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.
நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதையால் உலகெங்கும் பரப்பும் கவித்திலகம் திரு.ஆதவன் ரவி அவர்களின் சார்பில் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைக்கபடும் ப்ளக்ஸ் பேனர்
http://www.sivajiganesan.in/Images/030516_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent.xx.fbcdn.net/v/t1.0...45&oe=57A333AE
மக்கள் தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பாடும் பணியில் முன்னணியில் இருக்கும் நமது வசந்த் தொலைக்காட்சி 05.05.2016 அன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் உலகெங்கிலும் உள்ள சிவாஜி ரசிகர்களின் சார்பாகவும் நமது www.nadigarthilagam.com இணையதளம் சார்பாகவும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் வழியில் தங்களுடையே அரசியல் பாதை தொடர்ந்து வெற்றி நடை போடவும் தங்களுடைய தொலைக்காட்சியின் மூலம் தமிழகத்தில் தேசிய நீரோட்டம் மீண்டும் வளம் பெறவும் நல்வாழ்த்துக்கள்.
FRIDAY 6th May ONWARDS Chennai MAHALAKSHMI dts
daily 3 shows GRAND GALA OPENING....
(in TIRUCHI, .TANJORE, MAYAVARAM , TIRUPUR also)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...39086836_o.jpg
முகநூலில் இருந்து
தெய்வப்பிறவி நிழல்படங்கள்
(முகநூலில் இருந்து)
http://i65.tinypic.com/midx09.jpg