1977-ஆண்டு சூன் 30-ந் தேதி, 14 பேர் கொண்ட அமைச்சர்களுடன் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றார் நமது #மக்கள்திலகம் அவர்கள்.
1977-ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற #அதிமுக-வை ஆட்சி அமைக்க அன்றைய தமிழக ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பினை ஏற்று, ஆளுனரை சந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் 14-பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலை கொடுத்தார்.
தலைவரின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் பெயர்களும், இலாகா விவரமும்...
01. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
02. நாஞ்சில் மனோகரன் நிதி.
03. நாராயணசாமி முதலியார் சட்டம்.
04. எட்மண்ட் உணவு
05. பண்ருட்டியார் பொதுப்பணி.
06. ஆர்.எம்.வி. செய்தி,மக்கள் தொடர்பு
07. அரங்கநாயகம் கல்வி.
08. சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
09. காளிமுத்து ஊராட்சி.
10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
14. கே.ராஜா முகமது கைத்தறி.
(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)
பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள்.
கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு ஆளுனர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.
ஆளுனரின் வருகைக்கு பின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.
ஆளுனர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து ஆளுனருக்கு தனது அமைச்சரவை சகாக்களை எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் ஆளுனர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.
ஆளுனர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் ஆளுனர் ஆங்கிலத்தில் வாசிக்க, அந்த வாசகங்களை அழகுத் தழிலில் கூறி பதவி ஏற்றார் நம் அன்புத்தலைவர்.
அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்து போட்ட புரட்சித்தலைவர். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி-யுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு ஆளுனர் புறப்பட்டுச் செல்கிறார்.
பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினர் என் எக்கச்சக்மான பேர் வந்து சிறப்பித்தனர்.
முதல் அமைச்சர் அறை...
மணி காலை 11.15 மணி. அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்க.. அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்கிறார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரும் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.
எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும்.
ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார்.
சிறையில் இருந்து விடுதலையான ஜேப்பியாரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்......... Thanks...