சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சாந்தாராம் பாலும் பழமும் படத்தைப் பற்றி எழுதியதை மீள்பதிவிட்டு அவருடைய எழுத்தின் சிறப்பை இங்குள்ளோருக்கு எடுத்துரைத்த விதம் அருமை. அவரும் இங்கு வந்து பங்கு கொள்ள வேண்டும் என எல்லோரோடும் நானும் இங்கே விரும்புகிறேன்.
Printable View
சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சாந்தாராம் பாலும் பழமும் படத்தைப் பற்றி எழுதியதை மீள்பதிவிட்டு அவருடைய எழுத்தின் சிறப்பை இங்குள்ளோருக்கு எடுத்துரைத்த விதம் அருமை. அவரும் இங்கு வந்து பங்கு கொள்ள வேண்டும் என எல்லோரோடும் நானும் இங்கே விரும்புகிறேன்.
வீயார் சார்.
டாக்டர் சாந்தாராம் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து அவன் தான் மனிதன் விழாவுக்கும் அழைத்தேன் ... வருவதாக சொன்னார்..
அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்... நன்றி
'அக்னி புத்ருடு' (1987)
https://i1.ytimg.com/vi/h_TWmSyA-f8/hqdefault.jpg
ஏழைகளின் ஏந்தலாக, புரட்சி வீரன் சைதன்யாவாக நடிகர் திலகம் சில நிமிடத் துளிகளே வந்தாலும் புழுதி பறக்கிறது. ஜமீந்தார் (சத்யநாராயணா) ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய அரிசியை லாரியில் கடத்துவதை மலை உச்சியில் இருந்து கண்காணித்து, அலட்சியமாகத் துப்பாக்கி பிடித்தபடி, மூட்டைகளைச் சுட்டு அரிசியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், ஜமீந்தார் தன் குடும்பத்தையே நிர்மூலமாக்கி அழித்ததும் கொதித்தெழுந்து ('சிவந்தமண்' மலைப்பாறை காட்சி நினைவுக்கு வரும்) ஆவேசம் கொள்வதும் இந்த சிங்கத்திற்கு புதிதா என்ன? ஆனால் நமக்குப் புதிதாகத்தானே தோன்றும்!
http://i1087.photobucket.com/albums/...31355028/3.jpg
வீண் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தண்டனை பெறும்போது, ஒன்றுமே அறியாத இளைஞன் காளிதாஸ் (நாகார்ஜுனா) அதே ஜமீன்தாரால் சிறையில் வஞ்சகமாக தள்ளப்பட்டு, போலீஸால் சித்ரவதை செய்யப்படும்போது வாஞ்சையாக அவனிடம் பரிவு காட்டி, அவனை ஆசீர்வதித்து, அவன் "யார் நீங்கள்"" என்று கேட்டதும் 'மனுஷன், மனசுள்ள மனுஷன்' என்று பதிலளித்து, "விந்தையாக இருக்கிறது உங்கள் பேச்சு..நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?" என்றவுடன் ஹிடலர், முசோலினியைக் காரணம் காட்டி படிப்புக்கு விளக்கம் கொடுக்கும் இந்த படிக்காத மேதையை பாருங்கள். (தாடியும் மீசையுமாக ஜெயில் கைதி உடையில் இடுப்பில் கைவைத்து நாகார்ஜுனனிடம் உரையாடும் போது காமெராவின் டாப் ஆங்கிளில் அம்சமாக இருப்பார்.
http://i1087.photobucket.com/albums/...31355027/2.jpg
1987-இல் வெளிவந்த பலரும் காணத் தவறிய 'அக்னி புத்ருடு' தெலுங்குப் படத்தில் 'சைதன்யா' வாக சிறையில் நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சி. பின்னணிக் குரல்தான் இடிக்கிறது. சிம்மத்திற்கு எலி குரல் கொடுத்தது போல. ஆனால் நடிப்பு? வயதானாலும் அதே துடிப்பு. அதே ஸ்டைல். மலையில் துப்பாக்கியுடன் நிற்கும் தோரணை. ஒரு காலை மடக்கி ஒரு காலை நேராக வைத்து குறி பார்க்கும் பழகிய பக்குவம். 25வயது இளைஞன் போல. சத்யநாராயணா மீது கோபம் கொண்டு பாய்கையில் கால்களும், கைகளும் காட்டும் அபார ஸ்டைல்.
மன்றத்தில் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியவுடன் கொக்கரிப்பு சிரிப்பு. நாகர்ஜுனன் மேல் கருணை வைக்க நீதிபதியிடம் கம்பீரக் கோரிக்கை.
பாயசத்தில் முந்திரிப்பருப்பு போல முக்கியத்துவம். ஆனால் ஒரு சில நிமிடங்களே. கௌரவ ரோல். ஆனால் கம்பீரமானது. தன் ஆத்ம நண்பன் நாகேஸ்வரராவின் அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிப்பிற்காக பங்களித்தது. நிஜமாகவே 'அக்னி'தான் நடிப்பில்.
http://i.ytimg.com/vi/cOgqQn6vfoc/mqdefault.jpg
இதோ அறிமுகக் காட்சி. அன்னபூர்ணா ஸ்டுடியோவே தரவேற்றியிருக்கிறது. பெருமைதானே நமக்கு. கண்டு களியுங்கள்.
https://youtu.be/h_TWmSyA-f8
Guest Role of Inanimate Objects in NT movies!
Part 2 : Mirror Miracles!
நவரச நடிப்பின் உருவ(க)ம் பிரதிபலித்த நிலைக் கண்ணாடிகள் : கண்ணாடி முன்னாடி நடிப்பின் முன்னோடிப் பண்ணாடி!!
வசந்த மாளிகை காவியத்தில் ஹோட்டலில் வாணிஸ்ரீ முன்னிலையில் ராமதாசுடன் போடும் அதிரடி சண்டைக் காட்சியில் பஞ்ச்களுக்கு நடுவே கண்ணாடி முன் அழகு பார்த்து கலைந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிவிடும் காட்சி தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கும் ரசிக அலப்பரைக் காட்சியே !!Quote:
நிலைக்கண்ணாடி நாகரிக மனித வாழ்வியலில் அழகுணர்ச்சிக்கான ஒரு தவிர்க்க முடியாத அங்கமே!
மனித இனத்தவர் மதம் மொழி இனங்களைக் கடந்து ஏதோ ஒரு வகையில் அழகானவர்களே அழகு என்பது தோற்றமும் தோலின் நிறமும் மட்டுமே அலகாகக் கொண்டு கணிக்கப்படுவது பேதமையே!! என்றாலும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை 'நாம் அழகாக இரு க்கிறோமா.....?!' என்ற சந்தேகத்தில் (Beauty Conscious) நிலைக்கண்ணாடி முன் நின்று ஒருகணமேனும் அழகு பார்க்காத பெண்டிரோ ஆடவரோ இவ்வுலகில் உளரோ ?
நடிப்பின் முன்னோடியும் கண்ணாடிக்கு முன்னாடி அழகு பார்க்கும் காட்சிகள் ரசனைக்குரியவையே !!!
watch from 17 : 55
https://www.youtube.com/watch?v=m33YNkPGGfw
அழகின்மை காரணமாக குழந்தையிலேயே கைவிடப்பட்ட தெய்வமகன் தனது அருவருப்பான புறமுகத்தின் பிரதிபலிப்பை நிலைக்கண்ணாடியில் நோக்கி 'ச்சே' இதற்காகத்தானா பெற்றோர் என்னை ஒதுக்கிக் கைகழுவினீர்கள்' என்று கழிவிரக்கம் மிக காறி உமிழும் நிலைக்கண்ணாடிக் காட்சியும், மூன்று சிவாஜிகளும் சங்கமிக்கும் உணர்வலைகளின் உச்சகட்டத்தில் தந்தை சிவாஜி தனக்களித்த காசோலையை தம்பிக்கே தந்துவிடுமாறு நிலைக்கண்ணாடி பின்னாடியிருந்து வேண்டும் காட்சியிலும் கண்ணாடியும் நம் கண்களுக்கு ஒரு குணசித்திரமாக காட்சி தருகிறதே!!
நிலைக்கண்ணாடியில் இளையமகனின் கோணங்கித்தனங்களை மனத்துக்குள் ரசித்துக் கொண்டே அப்பா சிவாஜி பண்டரிபாயிடம் கலாய்க்கும் காட்சிகளும் (என்ன...ராஜாவுக்கு ராணி ரோஜா கொடுத்து தாஜா பண்றாங்க?..பையன் காலையிலேயே பணத்துக்கு மணியடிச்சுட்டானா?) ரசிக்கத்தகுந்ததே!!
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk
Raman Eththanai Ramanadi!
விஜயா வீட்டுக்குள் வந்ததும் தலைகால் புரியாமல் NT கண்ணாடியில் அவசர அழகு பார்க்கும் சீன் அள்ளுகிறது!!
https://www.youtube.com/watch?v=bG3d2LGTsLw
https://www.youtube.com/watch?v=wGmxDapfl6MQuote:
Nine reflections of NT in Navaraaththiri...Mirror scene!!
https://www.youtube.com/watch?v=WoMVfvS8rSoQuote:
bonus from Enter the Dragon! the most famous mirror room fight!!
https://www.youtube.com/watch?v=MMBU5gk9HC4Quote:
But ... both these multiple mirror image scenes were adapted from Charlie Chaplin's Circus (Mirror Maze) long time back...1928 !
Gap filler : Double Damaakka on Deivamagan!
Enjoy the song Kaathalikka katruk kollungal both in tamil (1969) and in telugu dubbed Koteeswarudu (1970), as a monotony breaker!!
https://www.youtube.com/watch?v=AD1Ouc1r0zA
Language change...no barrier to enjoy NT's performance!
https://www.youtube.com/watch?v=95ngjcNuSXg
raghavendra sir for ur birthday treat
அவன் ஒரு சரித்திரம் 008.
வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு இந்த தொடரை தொடர்கிறேன்.
தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே.
காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார். சிவாஜியின் மூலமாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம். அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.
பாத்திரங்களை சித்தரிக்கும் தன்மையிலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.
சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - 'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேற அவரோடு உடன் நடிக்கும் மற்ற பாத்திரங்கலின் பங்கும் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் பெருந்தன்மை பிறரை நடிக்கவிட்டு தான் அதற்கு எதிர்மறையாற்றுவது. தானே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் எண்ணியது இல்லை.
இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் , சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே. தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.
சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது அவரது தெளிவான வசன உச்சரிப்பிலும் இருந்தது.
இந்த ஆற்றல் அவருக்கு ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம். சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.
சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
நாடக மரபின் நாயகராக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் சக்கரவர்த்தியானார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது கலாச்சாரத்தின் ஒரு உருவமாகவே சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.
அவர் மறைவுதான் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று. தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு. வாழ்க அவரது புகழ், வளர்க அவர் வளர்த்த கலை.
ஜெய்ஹிந்த்!
(சில குறிப்புகள் வலைத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை)
திருவிளையாடல் 50 ஆண்டுகள் நிறைவு
ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.
1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.
அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!
வெற்றி ரகசியம்
பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.
ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.
பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.
நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.
கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும்.
போற்றப்படும்.
நன்றி: தி இந்து..22.5.2015
யுகேஷ் பாபு சார்,
தங்களுடைய வாழ்த்திற்கும் சிறப்புப் பதிவுகளுக்கும் என் உளமார்ந்த நன்றி.