-
பேராசிரியர் செல்வகுமார் சார்
உங்களின் பதிவு மிகவும் அருமை .
அன்றைய கால கட்டங்களில் நமக்கெல்லாம் விருந்தாக வந்த சினிமா இதழ்கள் நீங்கள் குறிப்பிட்ட இதழ்கள் வண்ணபடங்கள் ,விளம்பரங்கள் , படப்பிடிப்பு செய்திகள்
வசூல் சாதனைகள் ,முழுபக்க விளம்பரங்கள் , வருகிறது விளம்பரங்கள் ,படம் வெளியாகும் தினத்தில் ஸ்பெஷல் மலர் என்றெல்லாம் பார்த்து , அனுபவித்த காலங்கள் [1960-1978] பொற்காலம் என்றே சொல்லலாம் .
முரசொலி நாளேட்டில் வியாழன் தோறும் இயல் இசை கூத்து என்ற தலைப்பில் மக்கள் திலகத்தின் சினிமா செய்திகள் இடம் பெற்றன .
பின்னர் சித்ராலயா சினிமா வார இதழ் சுமார் மூன்று ஆண்டுகள் வந்ததாக நினைவு .
நண்பர் ஆதி ராம் அவர்கள் குறிப்பிட்டது போல மக்கள் திலகம் திரியில் பல அருமையான தகவல்களை தந்து நீண்ட நாட்கள் பதிவில் வந்தவர்கள் திரு tfmlover மற்றும் திரு ராஜா அவர்கள் .
இந்த தருணத்தில் புதியவரான உங்களுக்கு சில தகவல்கள் .
நடிகர் திலகம் திரியில் பல பாகங்களில் அருமையான பதிவுகள் வழங்கியவர்கள் மேடம் சாரதா மற்றும் கார்த்திக் .
நடிகர் திலகம் படங்கள் மட்டுமின்றி மக்கள் திலகம் படங்கள் பலவற்றை ஆய்வு செய்து பல பதிவுகள் செய்தவர் மேடம் சாரதா அவர்கள் .
உதாரணம் - ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் .
மக்கள் திலகத்தின் விளம்பரங்கள் - வெளிவராத செய்திகள்
பதிவிட்டால் உடனே பாராட்டும் குணமுடையவர் திரு கார்த்திக்
என்ன காரணம் என்று தெரியவில்லை சாரதா மேடம் அவர்களின் பதிவுகள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக எந்த திரியிலும் வரவில்லை .
திரு கார்த்திக் அவர்களும் சமீப காலமாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் திரிகளில் வரவில்லை .
இந்த இருவரும் நடிகர்திலகத்தின் ரசிகர்களாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் படங்கள் மேல் பற்று வைத்திருப்பது வியப்புக்குரியது .
எனவே நாம் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் .
திரு கல்நாயக் - மக்கள் திலகம் திரியில் வந்து சில பதிவுகளை தந்த நடிகர்திலகம் ரசிகர் - பாராட்டுக்குரியவர் .
திரு ஆதி ராம் - இவரும் நடிகர்திலகம் ரசிகர் .நக்கீரன் .
சாரதா மேடம் - கார்திக்சார் -கல்நாயக் சார் - ஆதிராம் சார்
நால்வரும் ஒரே நடிகர்திலகத்தின் ரசிகர்களாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரியில் பதிவிடுவது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது .
நடிகர்திலகத்தின் அந்த நால்வரின் பதிவுகளுக்கு மீண்டும் நன்றி .
esvee
-
-
கர்நாடக மாநிலம் - மைசூர் நகருக்கு அருகில் உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் இந்தவாரம் முதல் தினசரி மூன்று காட்சிகளாக நடை பெற்று வருகின்றது .
-
http://i46.tinypic.com/vzbvpk.jpg
ரத்னகுமார் படத்தில் மக்கள் திலகம்
-
-
-
உலகம் சுற்றும் வாலிபன் கடந்த வாரம் சென்னை நகரில் நான்கு அரங்கில் ஓடி விநியோகஸ்தர்களுக்கு ரூ 1,50,000 நிகர லாபம் தந்துள்ளதாக சென்னை தகவல் . வசூல் அதிகமாக மகாலட்சுமி அரங்கிலும் குறைந்த வசூல் பைலட்அரங்கிலும் கிருஷ்ணவேணி -பிராட்வே அரங்கில் சுமாரான வசூலும் ஆகியுள்ளது .
-
-
-