Congrats Professor Selvakumar Sir on completing 400 posts.
Printable View
Congrats Professor Selvakumar Sir on completing 400 posts.
Thank you very much for 400 valuable posts in Makkal Thilagam Thread..Selvakumar Sir.
1954 ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மக்கள் திலகத்தின்
''மலைக்கள்ளன்'' படத்திற்கு கிடைத்த குடியரசு தலைவரின் வெள்ளி பதக்க ஆவணத்தை வெளியிட்ட நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .
தமிழகத்தின் திரையுலகம் பற்றி தெரியாமல் இருந்த குகநாதன் வாழ்க்கையில் 'மலைக்கள்ளன்' படம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி குகநாதன் கூறியதாவது:-
'சினிமாவுக்கும் எங்கள் பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எம்.ஜி.ஆர்.தான் நான் சினிமாவுக்கு வர முழுக்காரணம். பள்ளித் தோழர்களுடன் வீட்டுக்குத் தெரியாமல் 'மலைக்கள்ளன்' படம் பார்க்கச் சென்றேன். மலைக்கள்ளன் கதாபாத்திரமும், பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தன.
என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆர். மீது ஒருவித பற்று ஏற்பட்டது. அதனால் அந்த படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்தேன். எம்.ஜி.ஆரைப்பற்றி தெரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி ஆகியோர் பற்றித் தெரிந்து கொண்டேன்.
'மலைக்கள்ள'னைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் நடித்த பல படங்களை பார்த்தேன். ஆனால், எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கத்தை வேறு யாரும் ஏற்படுத்தவில்லை.
மலைக்கள்ளன் President Award குறித்த ஆவணத்திற்கு நன்றி ராகவேந்திரா ஸார்.
அனைத்து கடந்த கால தேசிய விருதுகள் குறித்த தகவல்கள்
http://dff.nic.in/NFA_archive.asp -லிருந்து பெறலாம்.
400 பதிவுகள் கண்ட எனக்கு தங்கள் பதிவுகள் மூலம், வாழ்த்துக்கள் கூறிய அனைத்து
நல்லிதயங்களுக்கும் நன்றியை நவில்கிறேன்.
அலைபேசியில் அழைத்து, வாழ்த்து கூறிய உடன்பிறவா சகோதரர்கள் திரு. வினோத், திரு. வேலூர் ராமமூர்த்தி மற்றும் அன்புச்சகோதரர் திரு. பம்மல் சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது பணிவான நன்றி !.
http://i44.tinypic.com/nb67us.jpg
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் பாரத திருநாட்டின் முதல் குடிமகனாம், குடியரசுத் தலைவரின் முதல் பதக்கம் அதுவும் வெள்ளிப்பதக்கம் பெற்ற "மலைக்கள்ளன்" திரைப்படத்திற்கான இந்திய அரசாங்க சான்றிதழ் நகலை பதிவிட்டமைக்கு அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
இது ஒரு அபூர்வ ஆவணம். இந்த பொக்கிஷத்தை பேணிக்காத்து தக்க சமயத்தில்
வெளியிட்டமைக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !
http://i40.tinypic.com/2lblyt2.jpg
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்