http://i62.tinypic.com/qqpk4g.jpg
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...e5&oe=55F97CDA
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்,
வரும் 5.06.2015 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நம்நாடு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கப்படும் பேனர்.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...43&oe=55EF5B98
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
puratchi talaivari kurai kooriyum goabels endrum muttaalgal kooruvathal avar pugal mangaadhu. Mudhalil avargal unmai pesatum.
மதுரையில் நம்நாடு திரைப்படம் வெளியாகும் தகவலையும் வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
துள்ளி வருகுது வேல் படத்தின் விளம்பரம் பற்றி மட்டுமே நீங்கள் கருத்து தெரிவித்திருந்தால், நீங்கள் எதிர்பார்த்தது போல என்னிடம் இருந்து பதில் வந்திருக்காது. தஞ்சை தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவர் நிலைப்பாடு பற்றி கூறியதால் பதிலளிக்க வேண்டி வந்தது.
என் கருத்தில் இருந்து மாறுபடுவதாக கூறியிருக்கிறீர்கள். தாராளமாக. அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன். கட்டாயப்படுத்தவும் கூடாது, முடியாது. உங்கள் கருத்து உங்களுக்கு.
அதற்காக, மதுரையில் இந்திரா காந்தி அம்மையார் தாக்கப்பட்டதோ, இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, தஞ்சையில் அவருக்கு ஆதரவு அளிக்க மறுத்த புரட்சித் தலைவர், சிக்மகளூர் தேர்தலில் ஆதரவு அளித்ததோ, திரு.முசிறிப்புத்தன் தலைமையிலான குழுவினரை தேர்தல் பணிக்காக சிக்மகளூருக்கு அனுப்பியதோ, அதற்கு இந்திரா காந்தி அம்மையார் பாராட்டும் நன்றியும் தெரிவித்ததோ உண்மையல்ல என்று ஆகிவிடாது. இந்த நிகழ்ச்சிகளை யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.
திரு.கோபால்,
மதுரகானம் திரியில் ‘நானன்றி யார் வருவார்?’ பாடல் பற்றி நான் எழுதியபோது டி.ஆர்.மகாலிங்கம் திமுகவில் ஒரு காலத்தில் முக்கியஸ்தர் தெரியுமா? என்றீர்கள். அதை நான் மறுத்து, எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இல்லை. நீங்கள் தெரிந்தால் கூறுங்களேன் என்றதும் அமைதியாகிவிட்டீர்கள்.
பாசம் படத்தில் உலகம் பிறந்தது எனக்காக பாடல் வரிகளை புரட்சித் தலைவர் மாற்றச் சொன்னார் என்றீர்கள். (மக்கள் திலகத்துக்கு தாயை பிடிக்காது பாருங்கள்)
எகிப்து அதிபர் நாசர் விசாரித்துத்தான் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை நேரு தெரிந்து கொண்டாராம் என்று கூறினீர்கள். (இது உண்மையா? பொய்யா? என்று நண்பர்கள் சொல்லட்டுமே)
என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறி, நான் பதில் அளித்ததும் நைசாக நழுவிய நீங்கள் உண்மைத்தன்மை பற்றியெல்லாம் பேசக்கூடாது. கோயபல்ஸ் யாரென்று எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின் குறிப்பு: நமது சகோதரர்கள் யாரும் கடுமையாக பேச வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்.
வரும் 5.06.2015 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நம்நாடு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கப்படும் பேனர். ( விநியோகஸ்தரின் ரசனைக்கேற்ப மாற்றங்களுடன் இறுதி வடிவம் பெற்ற பேனர் )
படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...fc165abd39f096
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நன்றி திரு.சுந்தரராஜன் சார்,
விநியோகஸ்தரின் ரசனைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பேனர் என்று கூறியுள்ளீர்கள். விநியோகஸ்தர் ரசனை மிக்கவர் என்று தெரிகிறது. நம்நாடு திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து அந்த விநியோகஸ்தருக்கு லாபத்தை வாரி வழங்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்