-
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். திரு.குமாருக்கு ‘துள்ளி வருகுது வேல் இந்த தேதியில் வந்த விளம்பரம் சார்.நீங்கள் சொல்வதில் பிழை உள்ளது ’ என்று மட்டுமே சொல்லியிருந்தால் அதோடு முடிந்திருக்கும். நான் தலையிட்டிருக்கவே மாட்டேன். நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே.
தஞ்சாவூர் இடைத்தேர்தலில் புரட்சித் தலைவரின் நிலைப்பாடு பற்றி ‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இந்திராவுக்கு ஆதரவு தர மறுத்து விட்டார்’ என்று தேவையில்லாமல் கூறியது நீங்கள்தான். அதனால்தான், என்னிடமிருந்து பதில் வரும் என்று நீங்களே எதிர்பார்த்திருக்கிறீர்கள். அதுவும் நீங்கள் வேண்டுமென்றே சொல்கிறீர்கள் என்றும் கூட நான் குற்றம் சாட்டவில்லையே. உங்கள் கருத்தை படிப்பவர்கள் தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவர் பின்வாங்கி விட்டார் (கோபால் சொல்வது போல) என்று நினைத்து விடக் கூடாதே என்பதற்காகவே என் விளக்கம் என்றும் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
என் அபிமானத்துக்குரியவரை பாதுகாப்பதாக நான் பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, புரட்சித் தலைவர் பலவீனமானவரோ, புகழ் குறைந்து விட்டவரோ அல்ல நண்பரே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
-
-
-