http://i58.tinypic.com/ea33gy.jpg
Printable View
மது அண்ணா! செந்தில் சார், ராஜேஷ்ஜி, சின்னா! ராகவேந்திரன் சார், வினோத் சார்,
நன்றி! எங்களுக்காக இறைவனிடம் வழிபடும் உங்கள் அனைவரின் நல்ல மனம் வாழ்க!
இன்னும் நிர்வாகம் பிடி கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத் தொழிலார்களும் களத்தில் இறங்கி இரண்டு திணைகளாக வேலைக்கு செல்லவில்லை.
நெய்வேலியில் எப்போதுமே சுதந்திர தினம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்தமுறை அதை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறோம். பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகையோடு 'கலகல' வென்றிருக்கும் இந்திரா காந்தி ஸ்டேடியம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இது நிர்வாகத்துக்கு மிகப் பெரிய கௌரவக் குறைச்சல்.
நேற்று பேச்சுவார்த்தைக்கு யூனியன் தலைவர்கள் சென்றார்கள். பிரச்னையைப் பற்றிப் பேசாமல் அதிபர் அவர்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று தனக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்று மாத்திரம் கேட்டுள்ளார்.கிட்டத்தட்ட 13000 தொழிலாளிகளின் வயற்றில் அடிக்கும் நிர்வாகத்துக்கு சுதந்திர தினம் கொண்டாட என்ன அருகதை இருக்கிறது?
அடிமை விலங்கை உடைத்தெறிந்ததைக் கொண்டாடத்தானே சுதந்திரதினம்? எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் சிறுமைப் புத்திக் கொண்ட கொடுங்கோல் நிர்வாகத்துக்கு இப்போது என்ன சுதந்திரதினக் கொண்டாட்டம் வாழ்கிறது?
இன்று நெய்வேலி பகுதியில் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதே போல ஜவஹர் ஸ்கூல், செயின்ட் பால் பள்ளிகளும் ஆதரவளித்து தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன.
அனைத்து யூனியன்களும் இன்று முதல் 'சாகும் வரை உண்ணாவிரத'ப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியாச்சு. ஷுகர், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர அனைவரும் உன்னாவிரத்தத்தில் கலந்து கொள்ள இருக்கிறோம். நெய்வேலி மெயின் பஜாரில் டி.என்.டி.யூ.சி திடலில் (நடிகர் திலகம் திறந்து வைத்த திடல்) பெரிய உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டுள்ளது.
இதைவிட முத்தாய்ப்பாய் நாளை சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் பந்தலின் முன்னாலேயே சுதந்திர தினக் கொடியேற்றி கொண்டாட இருக்கிறோம்.இதைவிடவா நிர்வாகத்திற்கு வேறு அவமானம் வேண்டும்? இதைத் தடுப்பதில் குறியாய் இருக்கிறது நிர்வாகம்.
மானம் கெட்ட அதிகாரிகள் வெட்கமின்றி வேலைக்கு செல்கிறார்கள். தங்களுடன் எப்போதும் துணை நின்று பணி புரியும் தொழிலாளிகளுக்காக இந்த பிரகஸ்பதிகள் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் நிர்வாகத்திற்கு ஜால்ரா அடித்து நிர்வாகம் தரும் பிரடிற்காகவும், ரொட்டித் துண்டுகளுக்காகவும் வீட்டிற்குக் கூடச் செல்லாமல் அங்கே கிடந்து கொத்தடிமை வேலை செய்கின்றனர்.
ஆதரவு தரும் ஒப்பந்தத் தொழிலார்களின் சலுகைகளை பறிக்கப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறது நிர்வாகம். இதற்கு பயந்து யூனியன் சொல்லையும் மீறி நெஞ்சில் திடமில்லாத சிலர் பணிக்குச் செல்கிறார்கள்.
https://upload.wikimedia.org/wikiped...mbu_thirai.JPG
இன்றோடு 26-ஆவது நாள் வேலைநிறுத்தம். இதுவரை தொழிலார்களால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஒழுக்கத்தோடு வேலை நிறுத்தத்தைத் தொடர்கிறோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இன்னும் ஒரு சில மாதங்களில் சேர்மன் ஒய்வு பெறப் போகிறார். அவர் ஓய்வு பெறப் போகுமுன் தொழிலாளத் தோழர்களின் பாவத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகாமல் நல்ல படியாக ஊதிய மாற்று ஒப்பந்தத்தை முடித்து தர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. கண்டிப்பாக தங்கள் அனைவரது நல் ஆசியாலும் போராடி வெற்றி பெறுவோம்.
மறியல் போராட்டத்தின் போது திரண்ட தொழிலார்கள். (திரிக்கு சம்பந்தமில்லாவிடினும் மன்னிக்கவும்)
http://i57.tinypic.com/2j2810n.jpg
http://i58.tinypic.com/2zj9r2c.jpg
http://i58.tinypic.com/2wr3ev9.jpg
http://i59.tinypic.com/2mflnyb.jpg
ஊர்வலத்தில் தோழர்களும், அடியேனும்
http://i61.tinypic.com/dd2als.jpg
கைதாகி மண்டபத்தில்
http://i61.tinypic.com/2agvv5y.jpg
திரள் திரளாக மரியல் பேரணிக்கு வந்த தொழிலாளிகள்
http://i59.tinypic.com/30c3zac.jpg
வாசுசார்.. போராட்ட அப்டேட்களுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.. கண்டிப்பாக உஙக்ளுக்கு நலல்தே நடக்கும்.. எங்கள் ப்ரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன்..