http://s14.postimg.org/8nhxkug0x/119...84985221_n.jpg
Printable View
திரு கலைவேந்தன் சார் , வேலை பளு , வேலை பளு என்று சொல்லியே வெகு சீக்கரத்தில் 1000 பதிவுகள் போட்டு தூள் கிளப்பி விட்டீர்கள் - நீங்கள் என்னை மாதிரி வேலை பளு இல்லாமல் இருப்பவராக இருந்ததால் , இந்த 1000 , இன்று 100000த்தை தொட்டுருக்கும் - பல தடவைகள் எங்களுக்கும் ஆதி சங்கரரை தரிசித்த புண்ணியம் கிடைத்திருக்கும் . ஒருவரை பற்றி எழுதும் போது , எப்படி வேரை மறக்காமல் எழுதுவது என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் . சிறு வயதில் படித்த ஒரு கதை நினைவிற்கு வருகிறது . ஒருவன் பசுவைப்பற்றிய கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் , தேர்வில் அந்த கட்டுரை வரும் என்ற நம்பிக்கையில் . அவன் எதிபார்த்ததற்க்கு மாறாக " மரத்தை ப்பற்றி கட்டுரை வரைக " என்று கேள்வி வந்தது . அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை - 20 மார்க் வினா - விடுவதற்கும் மனம் வரவில்லை . சற்று நேரம் சென்றபின் அவனுக்குத்தெரிந்த பசுவைப்பற்றியே எழுதி கட்டுரையின் முடிவில் அப்படிப்பட்ட அருமையான பசு , நன்கு வளர்ந்த மரத்தில் கட்டப்பட்டது என்று முடித்தான் . .
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் - தொடருங்கள்
இரு திரி நண்பர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்தும் "ஈ/கொசு" விற்கு எனது இரண்டாவது சமர்ப்பணம்
https://www.youtube.com/watch?v=LASHfZcTZxI