http://i63.tinypic.com/9jk5js.jpg
Printable View
ஜூனியர் விகடன் -09/07/2017
http://i67.tinypic.com/jv3b4h.jpg
http://i67.tinypic.com/2rr9nhk.jpg
மக்கள் குரல் -30/06/2017
http://i67.tinypic.com/2e2i1kx.jpg
தினமலர் -06/7/2017
http://i64.tinypic.com/r6zmv7.jpg
குமுதம் -12/07/2017
http://i64.tinypic.com/33be6xc.jpg
மாற்றுத் திரியின் பொய்யான பதிவுகள் பற்றி நேத்திக்கு நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் இ்ல்லை. பரவால்ல. பதில் சொல்ல வேண்டாம், புரி்ந்து கொள்கிறோம் என்று கடைசியில் நான் சொன்னதால் பதில் இல்லை போல இருக்கு. அவர்கள் நிலைமை புரியுது.
ஆனால், மறுபடியும் முத்தய்யன் பதிவ போட்டு அதை அழிக்கவில்லையாம், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்கிறார்கள். முத்தயன் அப்படி எழுதவே இல்லை என்று நான் சொன்னல் பொய் என்று சொல்லலாம். அவர்கள் எடுத்துப் போட்டிருக்கிறார்கேளே. நம்ம திரிியல் இருந்து போட்டிருப்பார்கள் போல இருக்கு என்று நினைச்சேன். அவர்கள் சொல்றதைப் பார்த்தால் நம்ம திரியில் அழித்து விட்டார்கள் என்று தெரிகிறது. அப்புறம் எப்படி அவருக்கு கிடைச்சது என்று தெரியவில்லை. வேறு ஏதாச்சும் வழி உள்ளதா என்பதை அனுபவமான திரி மூத்தவர்கள் சொல்லவேண்டும்.
முத்தயன் பதிவுக்கும் நேத்திக்கு பதில் சொல்லிவிட்டேன். இதே மாதிரி உங்கள் திரியிலும் முத்தையன் வந்து ரவிகரன் சூரியா என்பவரை தப்பான பதிவுக்காக கண்டிச்சுள்ளார்.
சரி, முத்தயன் பதிவு இருக்கட்டும். பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீட்டு்க்கு மக்கள் திலகம் சென்றார் என்ற பொய்க்கும் மனோகரா படம் சென்னையில் ஒர வாரத்தில் 84 லட்சத்து 276 ரூபாய் வசூல் என்ற உங்கள் திரியில் வந்த பொய்க்கும் முத்தயன் பதிவு பதில் இல்லையே.
அதோடு, வசூலில் தோல்வியடைந்த கர்ணன் படத்தை எவ்வளவு மு்ட்டுக் கொடுத்து எழுதுவீர்கள். என்னதான் பொய் எழுதினாலும் சரித்திரத்தில் வேட்டைக்காரனுடன் வெளியான கர்ணன் படம் வசூல் ரீதியாக தோல்வி என்ற உண்மை பதிந்துவிட்டது.
கர்ணன் டிஜிட்டலில் வந்த சமயத்திலே குமுதம் பத்திரிகையில் அவர்கள் அபிமான நடிகரின் மகன் பிரபுவே, முதல் வெளியீடில் கர்ணன் படம் சரியாகப் போகவில்லை என்று ஒப்புக் கொண்டார். அதோட, அவர்கள் அபிமான நடிகரின் ரசிகர்களும் கர்ணன் தோல்வி படம் ரேஞ்சுக்கு அமைந்தது என்பதை வெளிப்படையாக ஒப்பு்க் கொண்டு இருக்கின்டார்கள். ஆனால், இன்னும் அங்கே முட்டுக் கொடுத்து பொய் எழுதுகிறார்கள்.
பாபு படத்துடன் வந்த மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் பாபு அளவு்க்கு சரியாகப் போகவில்லை. வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை என்பதை நாங்கள் எப்பவும் நேர்மையாக ஒப்புக் கொள்கின்றோம். நீரும் நெருப்பும் படம் பாபுவை மிஞ்சிவிட்டது என்று நாங்கள் சொன்னதே இல்லை.
ஆனால், கர்ணன் படம் வேட்டைக்காரன் அளவு போகவில்லை (இத்தனைக்கும் உங்கள் ரசிகர்களே ஒப்புக்கொண்ட உண்மை) என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லையே?
பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீடு தேடி மக்கள் திலகம் சென்றார் என்று அள்ளிவிடப்படுகிறது. ஆனால், அதே பிராப்தம் படம் வெளியான 1971ம் ஆண்டில் வெளியான பேசும்படம் கேள்வி பதில். மக்கள் திலகம் எப்படி திரை உலக சக்கரவர்ததியாக இருந்தார் என்பதை விளக்கும்.
கேள்வி : இன்று தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்?
பதில் :எம்.ஜி.ஆர். !
http://i63.tinypic.com/wiv5zq.jpg
http://i66.tinypic.com/b5qivs.jpg
#புரட்சிச்தலைவர் என்று அழைக்கிறீர்களே!
அப்படி என்ன புரட்சியை செய்துவிட்டார்' என்று கேட்பவருக்கு... இதோ சின்னதாக ஒரு சான்று...
எம்ஜியார் முதல்வராக வருவதற்கு முன்னால் பலர் முதல்வராக இருந்துள்ளனர். அவர்கள் சிந்தையில் தோன்றாத சிந்தனை மக்கள் திலகத்திற்கு தோன்றி அதை நடை முறைபடுத்தினாரே...என்ன... அது.
தமிழகத்தில் அது வரையில் நடைமுறையில் இருந்த வழக்கம்.. ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர்.
இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.
- பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.
(உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)
நன்றி எம்ஜிஆர் தளம் துரை வேலுமணி முகநூல்.
என் பெயர் மஸ்தான். ஆனால், மாற்றுத் திரியில் உள்ள ஒருவர் வேறு ஒருத்தரின் பெயரால் என்னை சொல்லியிருக்கிறார். ராமமூர்த்திய யார் என்றே எனக்கு தெரியாது. யாரோ அவருக்கு தப்பான தகவல் சொல்லியிருக்கார்கள்.
சரி. எங்களுக்காவது பெருந்தன்மை இருக்கிறது. உங்களுக்கு பெருந்தன்மை இல்லையே.
ஆயிரத்தில் ஒருவன் சென்னை தவிர கோயமுத்தூரிலும் 100 நாள் ஓடியது. அதிலும் சென்னையில் எம்ஜியார் பிக்சுர்ஸ் வெளியீடு என்பதால் வேட்டைக்காரனும் ஆயிரத்தில் ஒருவனும் 100 நாள் ஓடிய மாதிரி சொல்கிறார்கள்.
புதிய பறவை சென்னை பாரகனில் மட்டும் ஓடிய படத்தை தலையீல்தூக்கி ஆடுவார்கள். அதுவும் சொந்தப் படம், சொந்த பிலிம்ஸ் ரீலீஸ்.
சொந்த பிலிம்ஸ்ில் வெளியான படத்தை எல்லாம் அவர்கள் இப்பிடித்தான் ஓட்டியிருக்கிறார்கள் போல இருக்கிறது.
அதிலும் சென்னையில் சொந்த தியேட்டரான சாந்தியிலும் அவர்கள் லீசுக்கு எடுத்திருந்த கிரெளன் புவனேச்வரி யிலும் 100 நாள் படங்களை இப்படித்தான் ஓட்டியிருக்கிறார்கள் எ்ன்று அவர்கள் பதிவில் இருந்து தெரிகிறது. இந்த தியேட்டர்களில் மட்டும் 100 நாள் ஓ்ட்டப்பட்ட படங்களை கழித்தால் எவ்வளவு படம் 100 நாள் தேறும்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் முதல்முதலில் 100 நாள் ஓடிய படம் சிவந்த மண் என்று சொல்லி பொய் பெருமையை பதவிடுவீர்கள். ஆனால், அதுக்கு முன் அதே தியட்டரில் அடிமைப்பெண் 100 நாள் ஓடியது. இதுதான் இவர்கள் சிவந்தமண் பெருமையின் லட்ச்சணம்.
கோயமுத்தூர் கர்னாட்டிக்கில்169 நாள் ஓடிய இரும்புத்திரையை 6 நாள் சேர்த்துப் போட்டு வெள்ளிவிழா ஆக்கிப்புட்டார்கள்.
இந்த மாதிரி பொய் பெருமைகள் எங்களுக்குதேவையில்லை. எங்கள் பெருந்தன்மையே போதும். அது உங்களுக்கு கிடையாது.