'நான் சுவாசிக்கும் சிவாஜி'
'தினமலர் வாரமலர்' இதழில் இன்று முதல் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதும் 'நான் சுவாசிக்கும் சிவாஜி' என்ற தலைப்பு கொண்ட அற்புத கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது. நடிகர் திலகத்தின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு 'தினமலர்' நம் இதய தெய்வத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இக்கட்டுரைத் தொடரை வாசகர்களுக்கு வழங்குகிறது. படித்துப் பயனடையுங்கள். மறக்காமல் இனி ஞாயிற்றுக் கிழமை தோறும் 'தினமலர் வாரமலர்' வாங்கி இந்த அருமையான கட்டுரைத் தொடரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை தொடரை நமக்காக வழங்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் திலகத்தின் முதல் ரசிகனாய், அவர் புகழை 'தினமலர் வாரமலர்' மூலம் அகிலமெல்லாம் பரப்ப இருக்கும் தங்கள் சிறந்த தொண்டிற்கு இத்திரியின் சார்பாக கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஒய்.ஜி.எம் சார்.
இன்னொரு முக்கியமான செய்தி. இக்கட்டுரைத் தொடருக்காக கடந்த ஒரு மாத காலமாக திரு ஒய். ஜி. மகேந்திரா அவர்களுக்கு மிக உறுதுணையாக கூட இருந்து, வாரமலரில் ஜொலிக்கும் அட்டை படத்திற்காக அருமையான நடிகர் திலகத்தின் புகைப்படங்களையும் அளித்து உழைத்த நம் அன்பு ரசிக வேந்தர் ராகவேந்திரன் சாருக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்போம்.
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். நடிகர் திலகத்தின் புகழை தரணியெங்கும் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ள தங்கள் தலையாய தொண்டிற்கும், தங்கள் தன்னிகரில்லா உழைப்பிற்கும் தலை வணங்குகிறோம்.
அதேபோல இக்கட்டுரை தொடருக்காக தன் அருமையான பங்களிப்பை நல்கிய திரு. எஸ். ரஜத் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
'தினமலர்' வாரமலருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
http://i1087.photobucket.com/albums/...-2/attai-1.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-48.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-49.jpg