-
ராஜேஷ் சார்,
'தென்னகத்து இசைக்குயிலை'ப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் திருப்தி என்பதே ஏற்படாது. அவர் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள் தென்னக மொழிகளில் கணக்கிலடங்காது. வெகுஜன ரசனைக்குட்பட்ட பல பாடல்கள். சந்தையில் வெளிச்சம் காணாத, குடத்துக்குள் விளக்காகவே ஒளி வீசும் பாடல்களும் ஏராளம். முடிந்தமட்டும் நாம் அவைகளை வெளிக் கொணர்ந்து அந்த இசை மேதைக்கு புகழாரம் செய்வோம்.
அந்த வகையில் இன்று இரண்டு பாடல்கள்.
ஒன்று இன்று வினோத் சார் நிழற்படமாய்ப் பதித்த 'நினைப்பதற்கு நேரமில்லை' படத்திலிருந்து ஒரு மணியான பாடல். 'இன்றைய ஸ்பெஷலா'க வரவேண்டிய பாடல் ராஜேஷ் சாருக்காக 'இரவு ஸ்பெஷலா'கிப் போனது
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
இன்னொருநாள் என்னைக் கட்டி முத்தம் இட்டாராம்
எழுந்த பின்னே கனவதுவாய் இருக்கக் கண்டாராம்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
அதை விடுத்து நடந்த போது தொடர்ந்து சென்றேனாம்
ஆசையோடு அன்பே என்றான் யாரும் இல்லையாம்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்
இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்
என்னைப் போலே அதிர்ஷ்டசாலி யார் இருக்கின்றார்
என்று வந்து காண்பேன் என்று எழுதி இருக்கின்றார்
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
சார்! கொன்னுட்டாங்க சார்... பின்னிட்டாங்க.. இன்னும் என்ன சொல்வது!
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
அந்த இரண்டு வரிகளுடனேயே பயணிக்கும் அந்த 'டொம் டொம்' என்ற டேப் சப்தம் அமர்க்களமோ அமர்க்களம். அதுக்கே கொடுக்கும் காசு செரித்து விட்டது சார். திரும்ப எப்படா முதல் இரண்டு வரிகள் வரும் என்று மனம் ஏங்கும் சார். மாமா மகத்துவம்.
வரிகளைப் பார்த்தீர்களா?
'நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்'
ஒரு பெண்ணின் உடலமைப்பை அவள் உடலின் வளைவு நெளிவுகளை இந்தக் கவிஞன் ஒரே வரியில் பாமரனுக்கும் புரியும்படி அமர்க்களமாய் எழுதி உணர்த்தி விட்டானே.
இந்தக் குயில் இந்தப் பாட்டின் மூலம் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் சார்.
http://www.youtube.com/watch?v=1b-0C...yer_detailpage
-
வாசு சார் .. எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. காணொளி கிடைத்ததில் மகிழ்ச்சி.
அந்த முத்திற்கே முத்துக்களை கொட்டித்தரலாம்
-
அடுத்த பாடல்
இன்னும் பிரமாதம்.
'என் கடமை' படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மயக்கும் இசையில் சுசீலா அவர்கள் பாடிய
'மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா
சங்கதி சொன்னது யாரம்மா'
அடா! அடா! அடா!
பல்லவி முடிந்ததம் வரும் அந்த பேஸ் கிடார். சான்ஸே இல்லை.
அதுவும் ஒவ்வொரு முறையும் 'மீனே மீனே மீனம்மா' வை வெவ்வேறு விதமாக பாடி அசத்தும் விந்தை.
முதலில் படிப்படியாக உச்ச ஸ்தாயிக்கு கொண்டு செல்வார்
அப்புறம் அப்படியே அடக்கி வேறு மாதிரி சுருக்கிப் பாடுவார்.
இன்னொரு சமயம் வேறு மாதிரி.
நடுவில் வரும் அந்த 'ஹா ஹா ஹா' ஹம்மிங். ஜென்மம் சாபல்யமடைந்து விடும் சார்.
'தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா'
அம்சம். அபிநய சரஸ்வதிக்கு வெகு பொருத்தமாய் பொருந்தும் இவர் குரல். அவரும் நன்றாகவே செய்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=Nr86B4RpR7o&feature=player_detailpage
-
அய்யோ .. இசையரசியின் குரலும் அபி நயசரஸ்வதியின் குறும்பும் வேறேன்ன வேறேன்ன வேண்டும் ...மிகச்சிறந்த கூட்டணி இது தான் (என் டாப் பேவரிட்)
-
//சில நேரங்களில் ஒரே டியூனை இசையமைப்பாளர்கள் வேறு மொழிகளில் பயன்படுத்துவார்கள்//
அருமை. ஆமாம். எப்படி ஒன்று விடாமல் இவ்வ்ளோவ் ஞாபகம் வைத்துள்ளீர்கள்? அதுவும் தமிழிலிருந்து பிற மொழிகள், நேரடி மாற்றம்,மொழி மாற்றுப் பாடல்கள் வரை. புகழ்ச்சிக்கு சொல்லவில்லை... நிஜமாகவே நீங்க ஒரு ஆச்சரியம் சார்.
-
'Jagadeka Veerudu Atiloka Sundari'
ராஜேஷ் சார்,
மிகுந்த பொருட்செலவில் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம். நம் இளைய ராஜா இசை.
இதில் படத் துவக்கத்தில் ஸ்ரீதேவி 'காதல் தேவதை'யாய் (தமிழ் டப்பிங் பெயரும் அதுதான்) பூமியில் வந்திறங்க சிரஞ்சீவி அவரை பாலோ பண்ணுவார். அப்போது அருமையான ஒரு பாடல்.
பாலாவும், ஜானகியும் என்று நினைக்கிறேன்.
'அந்தாலலோ அஹோ மஹோதயம்
பூலோகமே நவோதயம்'
ரொம்ப இனிமையாய் இருக்கும் சார்.
தமிழிலும் அருமையாக கொடுத்திருப்பார்கள். தமிழுக்குத் தக்கவாறு சிறப்பான மொழி பெயர்ப்பு.
'கண்கண்டதோ எதோ மகோற்சவம்
பூலோகமே நல்லோவியம்
பூவும் பொன்போல் பொலிகின்ற நேர்த்தியோ
நெஞ்சில் என்ன கும்மாளம் காட்சியோ
இங்கே கண்டேன் அழகின் விலாசமே'.
தெலுங்கு பாடலைப் பார்ப்போம். ஸ்டுடியோவில் ஏக ரகளை செட்டெல்லாம் போட்டு பணத்தை பொரியாய் இறைத்து செலவு பண்ணியிருப்பார்கள். பாடல் நல்ல இனிமை
http://www.youtube.com/watch?v=g3MFxLZM87A&feature=player_detailpage
-
வாசு இசையரசியின் பல மொழி பாடல்கள் கேட்பதால் வந்த விளைவு. பாராட்டும் அளவிற்கு ஒன்றும் இல்லை
ஜெகதேக வீருடு அதிரூப சுந்தரி என்று நினைக்கிறேன். ஆம் பாடல்கள் அனைத்தும் அருமை. நம்ம மதுர மரிக்கொழுந்து வாசமும் உண்டு
இதோ பெண்டியாலா லேசாக மாற்றம் செய்த நம் முத்துக்களோ கண்கள்
https://www.youtube.com/watch?v=ACg4jPy0w1s
-
ஆமாம் ராஜேஷ் சார்.
இப்போதுதான் பார்க்கிறேன். மைசூர் பிருந்தாவனம் அட்டகாசமாய் இருக்கிறது. ஜமுனா ரொம்ப குண்டம்மாவாத் தெரிகிறார். ஏ.என்.ஆர் வழக்கம் போல் அதே ஸ்டைல். எப்படி ஆனால் என்ன? சுசீலாம்மாவின் குரல் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமே.
-
ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.
என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).
தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி
http://www.youtube.com/watch?v=g1F2Oc80Svo&feature=player_detailpage
-
சில பாடல்களை கேட்கும் போது, ஆஹா.. எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டை என்று எண்ணி மனம் குதூகலித்தவாறே ரசிக்கத் தொடங்கி விடுவோம். அப்படி ஒரு பாடல், இசையரசி பாடிய இந்தப் பாடல். சங்கர் கணேஷ் இசையில் இசைக்குயிலின் குரலில் கண்ணருகே வெள்ளி நிலா ஏன் வராது?
http://www.youtube.com/watch?v=JC0CB-Jj8nY