-
கவிதையும் (கானாவும்) கானமும் – 10
(முன்பு இங்கு நடந்த நாடக்த்தில் எழுதிப்பார்த்த கானா (?) பாட்டு) –இரண்டு பாரா முன்பு எழுதியிருந்தேன்.இப்ப நீட்டியிருக்கிறேன்! (நாடகத்தில் என்பெயர் கீபோர்ட் கிச்சா என் மேலதிகாரிபெயர் மெளஸ் மாதவன்! –)
அந்தப் பக்கம் போகலாண்ணு எலீண்ணா
.. நான் சந்தப் பக்கம் போய்ப் பாத்தேன் எலீண்ணா
பந்தா காட்டின பொண்ணு பேரு எலீண்ணா..
..பக்காவாச் சொன்னா பாரு நளீனா..
கந்தலாகிப் பூட்சு மனம் எலீண்ணா..
..கடவாயில் தெத்துப் பல்லு எலீண்ணா
நொந்து போன நெஞ்சு எல்லாம் எலீண்ணா
..நொடிப்போதில் மாறிப் போச்சு எலீண்ணா..
சொந்தமெனக் கைபுடிச்சேன் எலீண்ணா
..சுடச்சுடன்னு மொறச்சுப் பாத்தா எலீண்ணா
கொந்தளிப்பா எனநெனச்சேன் எலீண்ணா..
..குறும்பாகச் சிரிச்சுப்புட்டா எலீண்ணா..
எந்தக்கடை சீலையின்னு எலீண்ணா
..எசவாகக் கேட்டதுக்கு எலீண்ணா
தந்த்க்கையை நீட்டிஅவ எலீண்ணா
..தணிவாகச் சொல்லிப்புட்டா எலீண்ணா
பந்தலில ஒக்கார எலீண்ணா
..பரிசம்போட வரும்போது எலீண்ணா
செந்தழலாய் முகம்சிவக்க எலீண்ணா
..சீக்கிரமா வாசொன்னா எலீண்ணா..
**
ஹை..சிவாஜி செந்தில் புண்ணியத்தில் ஜெ.சர்ரூ வாழ வைத்த தெய்வம்.அந்த்க் கால கானா!
http://www.youtube.com/watch?feature...yt-cl=84503534
**
-
சி.க.,
இதை*எலீண்ணா கண்ணி என்று அழைக்கலாமேயென்று பார்த்தேன் ஆனால் ஒரு வரியில்*நளீனா என்று முடிவடைந்து கெடுத்துவிட்டதே. மாற்றமுடியுமா பாருங்களேன்*எலீண்ணா கண்ணி*என்று அழைத்துவிடலாம். மற்றபடி வழக்கம் போல் உங்கள் கவிதை உங்கள் கவிதைதான். சுகமானது.
-
நன்றி கல் நாயக்.இது கண்ணில்லாம் இல்லீங்க்ணா.ச்சும்மா எழுதின கானா.. இதுலயும் மரபு மாதிரி எழுதணும்னு என்னோட கானா குருஆசாத் பாய் சொல்லியிருக்கார். அப்புறம் அந்தப்பொண்ணு பேரு வரணுமோன்னோ.! ஆனா என்ன நடுல்ல இங்க்லீஷ் கலந்து எழுதறது எனக்குப் பிடிக்காது..வரவும் வராது (பாட்டுல சொன்னேன்) ராஜண்ணா எங்கே..
-
மரபு நடையில் கானா. இருந்தாலென்ன...எலீண்ணா-ல ஒரு பாட்டு முடிஞ்சா அது எலீண்ணா கண்ணிதானே - பராபரக்கண்ணி போல!!! சும்மா அசத்துங்க.
ராஜண்ணா பயத்துல கொஞ்சம் தூங்கிட்டார். எழுந்ததும் என்ன பண்றாருன்னு பார்ப்போமே. ரயில் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறது(!?*!)
-
பொய்யும் மெய்யும், ஏன் நெய்யும் கலந்த ஒரு பாடல் இந்தாங்ணா:
https://www.youtube.com/watch?v=90XGK7U_Iho
-
பொய்யின்றி மெய்கொண்டு நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.. நல்ல பாட்டுங்க்ணா தாங்க்ஸ் கல் நாயக்..
ஆனால் இதுவரைக்கும் முறைப்படி இருமுடி அணிந்து நான் சபரிமலை போனதில்லை..போனது இருமுறை தான்..88 அண்ட் 98. 88ல் ஜனவரி மாதத்தில் பொங்கல் கழிந்த சில நாளில் என் நண்பன் கோவிலுக்குப் போகிறேன் என்றான்.. மாலைலலம் போடணுமேடா.. ம்ஹூம்.. பின் வழியா போகலாம் வர்றியா சரி என்று கிளம்பிச் சென்று வந்தேன்..பின் 98ம் திடீரென கிடைத்தது வாய்ப்பு லீவில் இருந்த போது.. கேட்டது என் மூத்த மைத்துனர்..ம்ம் என்று போய் தரிசனம் செய்தது நினைவில் பசுமையாய்.அதுக்கப்புறம் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை..ம் அவன்கூப்புடணும்.
-
சின்னக்கண்ணன், கல்நாயக் என்ன இது? வெண்ணிற ஆடை மூர்த்தியின் மீண்டும் மீண்டும் சிரிப்பு மாதிரி நாமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம்? வாசு சார், கிருஷ்ணா சார், ரவி சார், ராகவேந்திரா சார் எல்லாரும் எங்கே? திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து பணம் படத்தில் இடம் பெற்ற பாடலான ‘எங்கே தேடுவேன்?’ பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனால், அந்தப் பாடல் ஆட்களைப் பற்றியதல்ல. பணத்தைப் பற்றியது.
தெற்காசியாவில் சமத்துவமின்மையை போக்குதல் என்ற பெயரில் உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே எல்லலையில்லாத இடைவெளி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு சென்று சேரவில்லை என்று கூறியிருப்பதுடன், மோசமான வறுமை சமூக மோதல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளது.
http://in.reuters.com/article/2015/01/20/worldbank-inequality-report-idINKBN0KT1KU20150120
அதே நேரத்தில் நாளிதழ்களில் இன்னொரு செய்தி 2014-15ம் ஆண்டில் திருப்பதி கோயிலில் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.900 கோடி. வங்கியில் வட்டியாக ரூ.655 கோடி, பக்தர்கள் மொட்டை அடிப்பது மூலம் அந்த முடிகளை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் ரூ.190 கோடி. கட்டிடங்கள் மூலம் வாடகை ரூ.108 கோடி.
ஒரு பக்கம் பற்றாக்குறை, வறுமை. கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியமான திட்டங்களுக்கு கூட நிதி குறைக்கப்படுகிறது. மறுபக்கம் கோயில்களில் கோடிக்கணக்கில் நிதி. முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சரி. இப்போதுள்ள பா.ஜ.க. அரசும் சரி. பற்றாக்குறையை சரிகட்ட, அரசுக்கு லாபம் ஈட்ட, நலத்திட்டங்களுக்கு செலவிட என்று கூறி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட தனியாருக்கு விற்கின்றன. லாபம் பார்க்க வேண்டும் என்றுதான் தனியார் வியாபாரத்திலேயே இறங்குகின்றனர். அதன் விளைவுகள்தான் மக்கள் சுரண்டப்படுவதை பார்க்கிறோமே.
அதற்கு பதிலாக, கோயில்களில் இருக்கும் நிதியை நாட்டின் தேவைகளுக்கும் வளர்ச்சிக்கும் நலத் திட்டங்களுக்கும் பெற்றுக் கொண்டால் என்ன? கோயிலில் இருக்கும் நிதியும் மக்கள் கொடுத்ததுதான். மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா? ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது. தனது கோயில் பணத்தை ஏழைகளுக்காக பயன்படுத்தினால் கருணையே வடிவான தெய்வம் கோபிக்குமா?
இன்று கூட கும்பகோணம் அருகே அண்டக்குளம் என்ற இடத்தில் கரும்பு விவசாயி வறுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தெய்வம் பொறுக்குமா? இந்த லட்சணத்தில் தஞ்சையை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் வேறு. (இதுபற்றி தனியே நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்)
மனிதன் கண்டுபிடித்த பணமே மனிதனை என்ன பாடுபடுத்துகிறது? இந்த நாட்டின் ஏழை மக்களின் குமுறலை வேதனையான நகைச்சுவையோடு பணம் படத்தில் இந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். இதோ பாடல்:
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகிறாயோ?
கஞ்சன் கையில் சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்தி கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டு செய்யும் பணத்தை (எங்கே தேடுவேன்?)
பூமிக்குள் புதைந்து புதையலானாயோ?
பொன்னகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அடிதன்னில் சரண் புகுந்தாயோ?
சன்னியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? (எங்கே தேடுவேன்?)
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கம் உள்ளவரிடம் இருக்காத பணமே (எங்கே தேடுவேன்?)
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவருக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ?
சூடம் சாம்பிராணியாய் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே... பணமே.... பணமே...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மூக்குத்திப் பத்தி முன்பே எழுதியிருப்பதாக நினைவு..திடீரென பாட்டுக்குப் பாட்டு விளையாடிய போது கீழ்க்கண்ட பாட்டு நினைவில் வர பாட் வீடியோவில் பார்த்த போது சர்ப்ரைஸ்.. முத்துராமன் பாவாடை சட்டை தாவணி மஞ்சுளா லிரிக்ஸ் + மென் குத்துப்பாட்டு டான்ஸ் நல்லாத் தான் இருக்குல்ல.குட்டிக் குறள் போட்டுடலாமா
நாசியில் குத்திய நற்கவிதை மூக்குத்தி
ஆசியால் மின்னும் அழகு..
//சிவப்புக்கல்லு மூக்குத்தி சிரிச்சு வந்த மான்குட்டி
அடி தங்கமுகத்துல குங்குமப் பொட்டுவச்சுக்கிடடு
நீ எங்கடி போற சுங்குடிச் சேலக் கட்டிக்கிட்டு..//
அரச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதையை நான்பேச.. அப்புறம் வந்த லிரிக்ஸ் மறந்து போச் :)
http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage
-
பாவம் இந்தப் பாட்டில் ஜெய்சங்கருக்கும் லஷ்மிக்கும் வேறு பிரச்னை..(எப்படில்லாம் காதலர்களுக்கு ப்ராப்ள்ம் வருதுங்க்ணா.) அதுவும் அதே மூக்குத்தியால..
பித்தம் தெளிவதக்குப் பாங்காய் இதழின்மேல்
முத்தமிட ஆவல் முகிழ்த்துவிட – குத்துதே
உட்கார்ந்து கொண்டே ஒளிவீசும் மூக்குத்தி
சட்டமாய் செய்யுதே தான்..
//ஒத்தக் கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது
வந்து தடுக்குதடி…//
இதுவும் ஒரு மென்மையான குத்துப்பாட்டு போல ..கு.பா ஸ்டெப்ஸூம் வருதுங்க்ணா.
http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage
-
ஆர்தர் ஹெய்லியின் ஹோட்டல் என்றொரு நாவல். அதன் பரபர க்ளைமேக்ஸில் திடுதிடுப்பென வரும் ஒரு ஸ்க்ரூ. அந்த ஸ்க்ரூவிற்காக ஒரு பாரா செலவழித்து வர்ணனை செய்திருப்பார்..கடைசியில் அந்த ஸ்க்ரூவானது நெகிழ்ந்து விழும் வண்ணம் இருந்தது அந்த லிஃப்டில் என முடித்திருப்பார்..அப்புறம் அது விழுந்து லிஃப்டும் கீழ் நோக்கி விழுந்துமிகப்பெரியஆக்ஸிடெண்ட் ஆகும்
ஸோ இந்த லிஃப்டுக்குள்ள நடக்கறா மாதிரிபாட்டு தான் இப்ப பார்க்கப்போறது..
ஒண்ணு ஜெய்ஷங்கர் கே.ஆர்வி நிலவே நீ சாட்சி..(என்ன லிரிக்ஸ்ங்க்ணா) பயந்து பயந்து இருவர் மனமும் பாடுவது..என்ன கேஆர்வி சற்றுப் பூசின மாதிர் இருக்கிறார்..
நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்
http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage
அடுத்து இளமைப்புயலாய் கமல்ஹாசன்.. மென்னிளமைத் தென்றலாய் ரத்தி.. இங்கும் லிஃப்ட் தான்..காதலர்களின் இளமைக் குறும்புடன் பாடி ஆடும் பாட்டு.முழுக்க திரைப்படத் தலைப்புகள் ஹிந்தியில்.. ஏக்துஜே கேலியே
மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியே ஜா
ஜவானி தீவானி
http://www.youtube.com/watch?v=dBVs6...yt-cl=84503534