-
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி,ஆர். போல் வாழ வேண்டும் -
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்கள் 24-12-1987 அன்று நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த போது, கண்ணீர் அஞ்சலியில் தெரிவித்த கருத்து.
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர் எங்கள் இறைவன்.
-
இன்று உலகமே வியக்கும் வகையில் நாடாளுகின்ற -
ராஜாதி ராஜனை
தாய் சொல்லை தட்டாத தலைமகனை
தாய்க்குப்பின் தாரம் என கொண்ட குடும்பத் தலைவனை
தனிப்பிறவியை, என்றும் மணக்கும் தாழம்பூவை
அமைதி காக்கும் மாடப்புறாவை
நீதிக்குப்பின் பாசம் கொள்ளும் அரச கட்டளையை
தர்மம் தலை காக்க தக்க சமயத்தில் உயிர் காத்த நல்ல நேரத்தை
காதல் வாகனத்திலே தேர்த்திருவிழா எடுத்து
பரிசு பெற்ற முகராசியுள்ள சபாஷ் மாப்பிள்ளையை,
பட்டிக்காட்டு பொன்னையனை, மாட்டுக்கார வேலனை
தீமைகளை விரட்டியோட்டும் வேட்டைக்கரனை
காஞ்சித்தலைவனை, விளை நிலம் காக்கும் விவசாயியை
ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளியை
குமாரிகளும், கன்னித்தாய்மார்களும், கலையரசிகளும், அடிமைப்பெண்களும்
ராணி சம்யுக்தைகளும், இதயத்தில் வைத்து வணங்குகின்ற கூண்டுக்கிளியை ,
பசியறிந்து பள்ளிபிள்ளைகளுக்கு அன்னமிட்ட கையை,
என் அண்ணனை பல்லாண்டு வாழ்க என வணங்கி வாழ்த்துகிறேன்.
இது, நமது பொன் மனச் செம்மலைப் பாராட்டி, "தமிழர் வாழ்வில் எம்.ஜி.ஆர்' என்ற புத்தகத்துக்கான பேட்டி ஒன்றில், திரை இசைத்திலகம் கே. வி. மகாதேவன் அவர்கள் தெரிவித்த கவிதை நடை கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர். எங்கள் இறைவன்
-
உலக மாந்தரில் சிலருக்கு சொல் வேறு. செயல் வேறு. மற்றவர்கள் சொல்வதை தாம் கேட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். இத்தகைய போலி வாழ்க்கையை, இரட்டை வாழ்க்கையை, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராக இல்லாமல், சொல்லும் செயலும் ஒன்று பட்டு, தாம் வாழ்வது மட்டும்ல்லாமல், சினிமாவில் தாம் ஏற்கும் பாத்திரங்களையும் அவ்வாறு படைத்து வாழச் செய்வதும் தான் எம். ஜி. ஆரின். பெருமை, அதனால்தான் அவர் மக்கள் திலகம் என்று போற்றப்படுகிறார்.
திரு. வி. எஸ் ராகவன் அவர்கள் பேட்டி ஒன்றில்.
================================================== ================================================== ==========
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர். எங்கள் இறைவன்
-
திரைப்படங்களில் நடிப்பதை ஒரு வெறும் தொழிலாகக் கொள்ளாமல் அதை மக்களுக்காக பயன் படுத்த வேண்டிய ஒரு மிகச் சிறந்த சாதனமாக கருதி செயல்பட்ட இந்த நூற்றாண்டின் ஒரே நடிகர் திரு எம்;ஜி ஆர். என்றால் அது மிகையாகது.
இளைத்தவருக்கு ஆறுதல் தருபவராகவும், ஏழைகளுக்கு துணைவராகவும், கோழைகளுக்கு துணிவைத் தரும் தலைவராகவும்,
தாய்க் குலத்தின் செல்லப் பிள்ளையாகவும், தமிழ் பண்பாட்டின் காவலராகவும், தனது பாத்திரங்களை அமைத்து அவர் நடித்தார்.
அப்படி எல்லாம் செய்தால் தான் தமிழக முதல்வர் பதவி கிடைக்கும் என்று அப்போது அவர் கனவு கூட கண்டிருக்க மாட்டார். என்பதே சத்தியம்.
ஒரு நல்ல மனிதன் எப்படி எல்லாம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று அவர் நினைத்தாரோ - அப்படிப்பட்ட பாத்திரங்களையே அவர் ஏற்று நடித்தார். அதன் மூலம் ஒரு தலைமுறைக்கே அவர் வழி காட்டியாக விளங்கினார்.
கருத்துக்களாலும், கொள்கைகளாலும் உயர்ந்த அவருக்கு உரிய பரிசையே காலம் அவர் கைகளில் கொடுத்திருக்கிறது. .
கோடிக்கணக்கான தமிழர்களின் இதய தெய்வமான அவரது சிறப்புக்கள், ஒரு கட்டுரையில் அடங்காது கலைத்துறையின் தரம் உயரக் காரணமாயிருந்த அந்தத் தலை மகனை, சத்தியத் தாயின் திருமகனை," வாழ்க வாழ்க பல்லாண்டு
வாழ்க" என எப்போதும் வாழ்த்துகின்ற பெருமையும், உரிமையும் உள்ள நான் இந்த மலரின் வயிலாக மீண்டும் ஒரு முறை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது எழில் வேந்தன் எம். ஜி ஆர். அவர்களைப் பற்றி பிரபல பின்னணி பாடகர் திரு. டி.எம்.சௌந்தர ராஜன் அவர்கள் மலர் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர். எங்கள் இறைவன்
-
1 Attachment(s)
Attachment 2098
happy new year
-
-
1 Attachment(s)
Attachment 2099 wishing all the thread members for a happy & prosperous new year 2013
-
-
-
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali is a Tamil language film starring M. G. Ramachandran and Jamuna in the lead roles and directed by R. R. Chandran who also was a well known cinematographer in his time. The film was released in the year 1959. Wikipedia
Release date: December 31, 1959 (initial release)
Director: R.R. Chandran
Genre: Drama
People also search for: Thaaikkuppin Thaaram, Tamizhariyum Perumal, More
Cast