ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
யாரங்கே.. யாராவது இத்திரிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே கூடிக் கொண்டே போகிறது...
Printable View
ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
யாரங்கே.. யாராவது இத்திரிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே கூடிக் கொண்டே போகிறது...
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
30.09.2013 – 06.10.2013 வரை
தியாகம் – ஜே மூவீஸ் – 30.09.2013 – காலை 9 மணி
நீலவானம் – ஜே.மூவீஸ் – 01.10.2013 – பிற்பகல் 1 மணி
விடுதலை – ஜே.மூவீஸ் – 06.10.2013 – இரவு 10 மணி
உத்தம புத்திரன் – ஜெயா டி.வி. – 04.10.2013 – காலை 10 மணி
சொர்க்கம் – கலைஞர் டிவி – 01.10.2013 - பிற்பகல் 1.30 மணி
கீழ்வானம் சிவக்கும் – கே டிவி – 30.09.2013 – பிற்பகல் 1 மணி
நவராத்திரி – கே டிவி – 01.10.2013 – பிற்பகல் 1 மணி
உயர்ந்த மனிதன் - முரசு டிவி – 01.10.2013 – இரவு 7.30 மணி
லக்ஷ்மி கல்யாணம் – முரசு டிவி – 05.10.2013 – இரவு 7.30 மணி
சிவந்த மண் – பாலிமர் டிவி – 02.10.2013 – பிற்பகல் 2 மணி
அஞ்சல் பெட்டி 520 – ராஜ் டிஜிட்டல் – 30.09.2013 – மாலை 4 மணி
எமனுக்கு எமன் – ராஜ் டிவி – 30.09.2013 – பிற்பகல் 1.30 மணி
அம்பிகாபதி – வசந்த் டிவி – 30.09.2013 – பிற்பகல் 2 மணி
திருவருட்செல்வர் – வசந்த் டிவி – 01.10.2013 – பிற்பகல் 2 மணி
எங்கிருந்தோ வந்தாள் – வசந்த் டிவி - 02.10.2013 – பிற்பகல் 2 மணி
படித்தால் மட்டும் போதுமா – வசந்த் டிவி – 03.10.2013 – பிற்பகல் 2 மணி
தியாகம் – வசந்த் டிவி – 04.10.2013 – பிற்பகல் 2 மணி
ஜல்லிக்கட்டு – வசந்த் டிவி – 05.10.2013 – காலை 10.30 மணி
சந்திப்பு – வசந்த் டிவி – 05.10.2013 – பிற்பகல் 2 மணி
திருவிளையாடல் – வசந்த் டிவி – 0610.2013 - காலை 11 மணி
எதிரொலி – வசந்த் டிவி - 06.10.2013 – பிற்பகல் 2.30 மணி
வசந்த் டிவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 8.30 சிறப்புத் தேனருவி ... நடிகர் திலகம் படப் பாடல்கள்
காலை 11 மணி – சிறப்புப் பட்டிமன்றம்
பகல் 12.30 மணி – என்றென்றும் சிவாஜி
பிற்பகல் 2.30 மணி – திருவருட் செல்வர் திரைப்படம்
மாலை 5 மணி – சக்ஸ்ஸ் சிவாஜி – சிறப்பு நிகழ்ச்சி
மாலை 5.30 மணி – முதல் மரியாதை – திரைப்படக் கலைஞர்கள் நடிகர் திலகத்துக்கு செலுத்தும் மரியாதை
மாலை 7 மணி – மகா நடிகன் சிவாஜி
டியர் கோபால் சார்,
தங்களின் பட்டிக்காடா பட்டணமா பற்றிய கேள்வி பதில் பதிவு பிரமாதம், நீங்கள் கூறிய படி எல்லாவற்றிக்கும் பதில் இ தான் என்றாலும், தங்கள் பதிலை பார்க்கும் வரை 24 வது கேள்விக்கு நெய்வேலி என்று நினைத்திருந்தேன். .
[quote=raghavendra;1078547]ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
சத்தியமான உண்மை......
இத இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. விடுமுறையாய் நேற்று, முதல் நாள் இருந்தாலும் உடல் நிலை கொஞ்சூண்டு சரியில்லை..அப்ப்புறமும் ஆஃபீஸ்.. வந்து மாத்திரை போட்டுக் கொண்டு தூக்கம் வராமல் சற்றே சில புத்தகங்கள்..பின் இங்கு வந்தால் கோபால்சார் ரவி அவர்க்ளின் வித்யாச விமர்சனங்கள்.. ராகவேந்தர் சாரின் இதழொலி (விசில்) கச்சேரியைப் பற்றிய ஆய்வு என தெரெட்டே குதூகலமாக ஜொலிக்கிறது.. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் வருவதால் காரணமா..ம்ஹீம் நோ.. எக்காலத்திலும் கலகலவென்று இந்த இழை இருக்க வேண்டும்..
முதற்கண் மகாகவி காளிதாஸைப் பாராட்டிய ராகவேந்தர் சார், வாசுதேவன் சார், மிஸ்டர் கார்த்திக், கல் நாயக் சார்,சந்திர சேகர் அவர்களுக்கு என் நன்றிகள்..
கோபால் சார் .. ஹி ஹி..சுபாவின் முட்டைக்கண்ணைப் பற்றியும் என்னடி ராக்கம்மா பற்றியும் இன்னும் எழுதியிருக்கலாம். நான் பார்த்ததும் அதே சென் ட்ரல் தான்..ஆனால் சிறுவனாக..
ரவி சார் - கர்ணன் என்.டி ஒப்புமை நன்று
ராகவேந்திரர் சார்.. நெஞ்ச்த்திலே நீ நேற்று வந்தாய் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது.. நன்று..
ராகவேந்தர் சார்,
உங்கள் குசும்பு மிக ரசித்தேன். எல்லாரும் ஈ என்றுதானே சிரிக்க முடியும்? இ என்று சிரிப்பது கஷ்டமாயிற்றே?
நீங்கள் ஒரிஜினல் விசிலுக்கு சென்று விட்டதால், நான் வாழ வைப்பேன் விசில்களை பற்றி யார் எழுதுவது?
வாசு /ராகவேந்தர் சார்,
photoshop மனோகரா பதிவுகள் ரொம்ப ரசிக்க கூடிய நேர்த்தி.(vasu amazing. your hardwork is astonishing) வண்ணமும் அழகு. மனோகரா,உத்தம புத்திரன் படங்களை வண்ண படுத்த முடிந்தால்?
சின்ன கண்ணன்- மகாகவி காளிதாஸ் படத்தில் nativity மிஸ்ஸிங். ராஜபக்தி,சித்தூர் ராணி பத்மினி,இரு துருவம்,புண்ணிய பூமி போல.ஆனால் ம.க.கா.தாஸ் தப்பித்தது சிவாஜி-கே.வீ.எம் இணைவில் நிகழ்ந்தது. சுமார் வெற்றி.உங்கள் ஊர் கல்பனாவில்தான் அதிக நாட்கள். எனக்கு ஒரு குறை. காளிதாசன் சிருங்கார சொல் (ஜொள்)கவிஞன்(உதாரணம் காட்டுவேன்.நண்பர்கள் உதைக்க வருவார்கள்). ஆனால் காளி அம்சம் பிடித்து கொண்டு ,ஜாலி அம்சம் கோட்டை விட்டார்கள்.எனக்கென்னவோ எல்.விஜயலட்சுமி டான்ஸ் பிடித்தாலும்,கொஞ்சம் ஆம்பிளைக்கு பொம்பிளை வேஷம் போட்ட மாதிரி தெரிவார்.(ஆனால் இன்னொன்றுக்கு இது தேவலை)
சுசிலாவின் தேன் மதுர குழலோசையில் ,என்னை மறந்து மலரும் வான் நிலவும் பாட்டை ரசித்து....
சடாரென்று டி.எம்.எஸ் அந்த பாட்டை பாடுவது நன்கு இனிய கனவுகளுடன் தூங்கி சுகம் காணும் ஒருவனை ,காலங்கார்த்தாலே, சிலீரென்று பக்கெட் தண்ணியை கொட்டி எழுப்பி ,பொன்னம்பலம் விகாரமாக இளித்து கொண்டு நின்றால் எப்படி இருக்குமோ அப்படி.....
ரவி- கர்ணன் நடிகர்திலகத்தை நன்கு அமைத்திருந்திருந்தீர்கள்.
கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?
சொல்லும் படி திரியின் ஆழமும் ,அகலமும்,உயரமும் ,நீளமும் பல எழுத்தாளர்களால் கூடி கொண்டே வருகிறது.(ஆலமும் கூடினால் களை கட்டும்.)
ஜோ,
தாங்கள் சொல்ல வருவது புரிகிறது. நானும் ஆரம்பம் முதல் தங்களை கவனித்து வருகிறேன். ருத்ரன் முதல் ராஜநாயகம் வரை தாங்கள் இடையிட்டு நடிகர்திலகத்தின் கொடியை பறக்க விட்டே வருகிறீர்கள். நானும் சில இடங்களில் தங்களை தொடர்ந்துள்ளேன். யாரவது இஷ்டத்திற்கு எழுதும் போது,நாம் இடையிட்டே ஆக வேண்டும்.
ராகவேந்தர் சார்,ஒரு வேண்டுகோள். யாருக்காவது குறையிருப்பின் அவர்கள் எழுதும் போது தங்கள் உபபதிவு அவசியமில்லாதது.எழுதியவரின் நோக்கத்தை திசை திருப்பி ,சிதைத்து விடுகிறது.தவிருங்கள்.
சிவாஜி சிலை(திருபுவனம்)- இப்போதுதான் தோன்றுகிறது.அவர் ஏதாவது பிரத்யேக புற அடையாளங்களை (தன்னையே மறைக்கும் அளவு)வைத்திருந்தால்,சிலை எப்படி இருந்தாலும் அவர் மாதிரியே வந்திருக்குமே?
எல்லோருக்கும் மனம் நிறைந்த (முன்கூட்டிய )பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(அவர் பிறந்த போது ரசிகர்களும் பிறந்து விட்டோமே?)
வசந்த் டி.வீ க்கு எனது மனம் நிறைந்த நன்றியும்,வாழ்த்தும். அனைத்து சேனல் களும் கொண்டாட கடமை பட்டவை ரசிகர்கள் அனைவரும் வசந்த் டி.வீயை விட்டு அசைய கூடாது
இந்த திரியில் எழுதுபவர்கள் எண்ணிக்கை கூடி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.சின்னக்கண்ணன்,ரவி சார்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் அவா.(இது ஆசையை மட்டும் குறிக்கும் சொல்.)
கோபால் சாரின் பதிவு அ)அற்புதம் ஆ)வழக்கம்போல அற்புதம் இ)எப்பொழுதும் போல அற்புதம் ஈ) 49-o
http://i1.ytimg.com/vi/WngSPSrIRJM/hqdefault.jpg
1.தியேட்டர் கூரைக்கும் மேல்
2. ஈடுஇணையில்லாத பொருத்தம்.
3. சுவாரஸ்யமான சுவாரஸ்யம்.
http://tamildada.com/wp-content/uplo...nama-songs.jpg
4. ஆளை மயக்குவது.
5. மற்ற ஜாலிக் கதைகளை காலியாக்கிய கதை.
6. யூ மீன் கமல் (தசாவதாரம்) நம்பி. அவருக்குப் பிடிக்கும். அவர் தம்பிக்குப் பிடிக்காது. ரங்கராட்டினம் போல் சுழன்று ராஜன் போல நம்பியவர்களையும், நம்பாதவர்களையும் சுருள் சண்டையால் சுருள வைத்த சுருள்முடி அழகன்.
7. ஆர்ப்பாட்டம்.
8. கிராமிய, நகர, இதர ஸ்டெப்ஸ் எதை வேண்டுமானாலும் கொடு. விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். என்னடி ராக்கில்( rocking )உறுமி மேளம் கொட்டி கிடாரில் நல்வாழ்த்துக் கூறி என்னைப் போல் ஈடுஇணை உண்டா என்று உன்னைப் போல பதில்...பதில்...பதில்...கேட்டவர்.
9. வாழ்த்தட்டும் தலைமுறை வா...
10. விவரமானது.
11. நடைமுறைக்கு சாத்தியமில்லை.
12. நாம் செய்ய நினைத்ததை விட சரியாக செய்வார். (அதுதானே தலைவரின் ஸ்பெஷாலிட்டி!)
13. உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயமும்.
14. வாயடைத்துப் போன ஆனந்தம்.
15. சாரி டீச்சர்....கேள்வி புரியல்லே.
16. எதிரிகள் எட்ட ஓடி விட்டனர்.(வில்லன் க்ரூப்பை சொன்னேன்)
17. எதிர்பாராத போக்ரான்.
18. அந்தக் காட்சி நடிப்பு நமக்குக் கிடைத்த வெகுமானம்.
19. சஸ்பென்ஸ் திரில்லருக்கு நிகரானது (பீட்ஸா தேவை)
20. திகட்டாதது.
21. இந்தா வாங்கிக்க கோழிக் குருமா (வயிற்று வலி கண்டு டாக்டரிடம் போனவன் எத்தனை பேர்!) "நடிக்கனும்னு ஊரை விட்டு ஓடி வரவனெல்லாம் சிவாஜி கணேசன் ஆயிட முடியுமா"... இது ஒண்ணு போதாதா! மக்கு டீச்சர்.
22. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த ஒரு படம்
23. பம்மலார். அதில் சந்தேகமென்ன? (யப்பா...இந்த ஒரு கேள்விக்குதான் ஆப்ஷன்ஸ் கரெக்ட்டு. ஹைய்யா! டீச்சர் மார்க்கு போட்டுடுவாங்க. ஜாலி. அப்பத்தான் பம்மலாரும் ரெண்டாவது புக்கு ஒண்ணு போடுவாரு. (டீச்சர்! உங்களுக்கு சாதகமான கேள்வியெல்லாம் கேக்குறீங்க! பொழச்சுப் போங்க.)
24.தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு ராதாகிருஷ்ணனை பெயில் பண்ண மாதிரி என்னையையும் பண்ணிடாதீங்க.
25. பேரானந்தம். (டீச்சர்! தண்ணி அடிச்சிட்டு கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணீங்களோ! ஒரே போதையாவே இருக்குதே!)
டீச்சர்! எப்படியாவது டாக்டர் பட்டம் குடுக்காட்டாலும் கம்பவுண்டர் பட்டமாவது குடுத்துடு. ஒனக்குப் பிடிக்காத ச்சே ஒனக்குப் புடிச்ச பொம்மை கூடப் போட்டிருக்கேன். என் செல்ல டீச்சர் இல்ல! வாணிஸ்ரீ மிட்டாய் வாங்கித் தாரேன்.
டீச்சர், உனக்கொரு கேள்வி.
வசூலில் பின்னியது பட்டிக்காட்டிலா? பட்டணத்திலா? அல்லது இரண்டிலுமா?
பதில் சரியாச் சொன்னா பம்மலாருக்கு ரெகமண்ட் பண்ணுவேன்.